169. “இட ஒதுக்கீடு” – தவறு.

சென்ற வாரம் மதுரை அருகில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் மாநிலக் கருத்தரங்கு ஒன்று _ இட ஒதுக்கீடு – தாக்கமும், தடைகளும் – என்ற தலைப்பில், திரு, நல்லக்கண்ணு அவர்களின் தலைமையுரையுடன் நடந்தது. அதில் நெல்லை வழக்கறிஞர் பிரிட்டோ அவர்கள் பேசும்போது தான் நெல்லையில் நடத்திய கருத்தரங்கத்தில் தமிழ்ப் பேராசிரியர் திரு. தெ.பொ,மீ, அவர்கள் கூறியதாகச் சொன்னது:

இட ஒதுக்கீடு என்ற சொல் காலனிய ஆதிக்கத்தின் எச்சம். Reservation என்ற ஆங்கிலச்சொல்லை அடிப்படையாக வைத்து வந்த சொல்லே இட ஒதுக்கீடு. இந்தச் சொல் குறிப்பிட்ட சிலருக்குச் சலுகையாகத் தருவதான பொருளில் வருகிறது. அப்படியின்றி அது அவர்களது உரிமை என்ற பொருளில் இட ஒதுக்கீடு என்றின்றி ‘இடப் பங்கீடு’ என்று அழைக்கப்படுவதே சரி.

168. சாதிகள் இருக்குதடி பாப்பா – முழுக்கட்டுரை


“It is certainly true that reservation for Other Backlward Classes will cause a lot of heart burning to others.  But should the mere fact of this heart burning be allowed to operate as a moral veto against social reform?  …It burns the heart of all whites when the blacks protest against apartheid in South Africa.  When the higher castes constituting less than 20% of the country’s population subjected the rest  to all manner of social injustice, it must have casued a lot of heart burning to the lower castes.  ……  Of all the spacious arguments advanced against reservation for backward classes, there is none which beats this one about “heart burning” in sheer sophistry.
In fact the Hindu society has always operated a very rigorous scheme of reservation, which was internalised through caste system. Ekalaiva (Mahabharata) lost his thumb and Shambhuk (Ramayana) his neck for their breach of caste rules of reservation. The present furor against reservations for Other Backward Classes is not aimed at the principle itself, but against the new class of beneficiaries as they are now clamouring for a share of the opportunities which were all along monopolised by the higher castes.” (Mandal Commission Report – chapter XIII)
“OBCs constitute 12.55% of the total number of Central Government employees whereas their aggregate propulation is 52%.  Their representation in Class I jobs is 4.69%,  less than 1/10th of their population to the country’s total population. (Mandal Commission Report – Chapter XIV)

  I.  முதல் பகுதி
இட ஒதுக்கீடு பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பு:
1857-ல் ஆரம்பித்த ஒரு புரட்சியும், 1909,1919 -களில் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தவேண்டுமாயின் இந்நாட்டு மக்களையும் அரசுப்பணியில் அமர்த்தினால்தான் முடியும் என்ற கருத்தில் புதிய சட்ட திட்டங்கள் கொண்டுவந்து ( J.S. Mill ) நமக்கு ஆங்கிலேயரின் அரசுப் பணியில் சேரும் வழி பிறந்தது.  1928  -  COMMUNAL G.O. – மேற்கண்ட திட்டத்தின் தொடர்பாகவே…தமிழ்நாட்டில் மட்டும் – அனைத்து தமிழ்மக்களும் 5 வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு அனைத்து அரசுப்பணிகளும் அவர்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டன. இத்திட்டம்  சமூக நீதிக்காகத்  தோன்றிய  நீதிக்கட்சியின் முத்தையா முதலியாரால் மதராஸ் ராஜதானியில்  கொண்டு  வரப்பட்டது.
1940 – முதல் தமிழ்நாட்டில் மட்டும் – உயர் கல்விக்கும், தொழிற்கல்விக்கும் மேற்கண்ட ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டன.
1947 – முதல் தமிழ்நாட்டில் மட்டும் 5 வகுப்பினர் என்பது 6ஆக பிரிக்கபட்டு மேற்கண்ட ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டன.
26.01.19550 - நாடு குடியரசானபோது இந்திய அரசியலமைப்பு விதி 16 (4) B.C., S.C., S.T. ஆகிய மூன்று பிரிவினருக்கு அரசுப்பணிகளில் மட்டும் இட ஒதுக்கீடு அளிக்க வழி`செய்தது.
இந்த விதியைச் சார்ந்து, சென்னை மாகாணத்தில் அளிக்கப்பட்டு வந்த வகுப்புவாரி அடிப்படை செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தன. 1950 – ‘ 51 – இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ் நாட்டில் பெரியாரின் போராட்டமும் அம்பேத்காரின் முயற்சியாலும் அரசியலமைப்புச் சட்டத்தில் புது விதி ஒன்று – 15 (4) சேர்க்கப்பட்டது.
மீண்டும் சென்னை மாகாணத்தில் மொத்த அரசுப் பணிகள் முன்பு போலவே 6 வகுப்பாருக்குப் பிரித்தளிக்கப்பட்டன.
1954 முதல்  1971 வரை – தமிழ்நாட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு25 % இடங்களும், பட்டியல் குலத்தாருக்கு 16% இடங்களும், ஆக 41% இடங்கள் மட்டுமே பிரித்தளிக்கப்பட்டன.
1972 முதல் 31.1.1980 முடிய – பிற்படுத்தப்பட்டோருக்கு: 31%; பட்டியல் குலத்தாருக்கு: 18%
1.1.1979-ல் பிரதமர் மொரார்ஜியால் மண்டல் குழு அமைக்கப் பட்டது.
1.2.1980 முதல் – தமிழ் நாட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு 50%; பட்டியல் குலத்தாருக்கு 18%;
1989 முதல் -தமிழ் நாட்டில்  பிற்படுத்தப் பட்டோருக்கு 50%; பட்டியல் குலத்தாருக்கு 18%; முதல் முறையாக பழங்குடியினருக்கு 1%  — ஆக 69% இடங்கள் பிரித்தளிக்கப்பட்டன. இதில் பிற்படுத்தப் பட்டோருக்கான 50% ல் 20% மிக பிற்படுத்தப்பட்டோருக்குப் பிரித்து அளிக்கப்பட்டன.
1977 முதல் ‘பொதுக்கல்வி’ பொது அதிகாரப்பட்டியலுக்கு (concurrent list) மாற்றப் பட்டதால் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும், மேலாண்மை உரிமையும் இல்லாது போயிற்று.
1980களின் ஆரம்பத்திலிருந்தே கல்விக்கு நிதி ஒதுக்கீடு குறைந்தமையால் தனியார் கல்வி நிறுவனங்கள் நிறைய தோன்ற ஆரம்பித்துவிட்டன. இக்கல்வி நிலையங்கள் அந்தந்த மாநிலத்தில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத்துவது கட்டாயமாக நடப்பில் இருந்தது. மாணவர் சேர்க்கை, படிப்பு இவைகளுக்கான கட்டணம் எவ்வளவு என்பதையும் மாநில அரசே நிர்ணயிக்கும் என்றும் இருந்தது.
12.10.2005ல் உச்ச நீதி மன்றம் மேற்பட்ட நடப்பு செல்லாது என்று தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பின் விளைவுகள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உயர் கல்வி பெறும் வாய்ப்பை அடியோடு தடுப்பவை ஆகும்.  மாணவர் சேர்ப்புக்காக இக்கல்வி நிறுவனங்கள் பெறும் பெருந்தொகை (capitation fee) ஒடுக்கப்பட்டவர்களின் கல்வியாசைகளை நிராசையாக்கின.  பணம் இருந்தால் போதும்.  so called ‘merit’ என்பதற்கு எந்த மரியாதையும் கிடையாது என்ற நிலை வேரூன்றியது. ஆகவே இதை எதிர்த்து சட்டத்திருத்தம் ஒன்று கொண்டு வரவேண்டுமென்ற கோரிக்கையோடு பரவலான அரசியல், சமூக அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதே சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், திரு இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட ஆய்வுக் குழுவும் சட்ட திருத்தம் தேவையென்று பரிந்துரை செய்தது.
20.12.2005 அன்று புதிய 104வது சட்ட திருத்தமாக புதிய உள்விதி ஒன்றை – 15 (5)  – பாராளுமன்றம் நிறைவேற்றியது.
விதி 15 (5) : -  “………. சமுதாயத்திலும் கல்வியிலும் பின் தங்கிய எந்த வகுப்புக் குடிமக்களுக்கும் அல்லது பட்டியல் குலத்தினருக்கும் மற்றும் பழங்குடியினருக்கும் இவ்வகுப்பினரின் முன்னேற்றங் கருதி, இவர்களுக்கென்று கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக உள்ள ஏற்பாடு எதையும் சட்ட ஏற்பின் மூலம் (by law) – அரசிடம் நிதி உதவி பெறுகிற அல்லது நிதி உதவிபெறாத நிறுவனங்களில் அரசு செய்வதைத் தடுக்காது. அரசமைப்பு விதி 30(1) இன்படி மதச் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு இவ்விதி பொருந்தாது.”¼br /> ¼br /> 1955-லேயே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மைய அரசு கல்வியிலும், அரசு வேலைகளிலும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய இட ஒதுக்கீட்டிற்கு, 1994 வரை மண்டலின் பரிந்துரைக்காகக் காத்திருந்து மைய அரசின் வேலையில் மட்டுமே இட ஒதுக்கீடு பெற முடிந்தது. கல்விக்கான முழுமையான் இட ஒதுக்கீட்டை மறுப்பது 60 விழுக்காடாக உள்ள 60 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உயர்கல்வி பெறும் உரிமையை மறுப்பதாகும்.
அதிலும் சிறப்பாக, முழுக்க முழுக்க மத்திய அரசின் உதவித் தொகையால் நடந்து வரும்
14 Central Govt. Universities
 7  IITs
6  IIMs
6  IIScs
54 தொழில்-வணிகப் பயிற்சி நிறுவங்கள் (உள்நோக்கத்துடன்) மைய அரசின் பிடியில் இருந்து வந்துள்ள இந்த உயர் கல்வி நிறுவங்களில் 50 ஆண்டு காலமாக ஒரே ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடுகூட பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப் படவில்லை. இந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை முழுக்க முழுக்க மக்களின் வரிப் பணம் – அதிலும் 60 கோடிக்கும் மேலான OBC, BC, SC, & ST செலுத்தும் வரிப்பணமே.
மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ள பதிவு எண்கள் 62, 63. 64-ல் கண்ட மேற்சொன்ன எல்லா மத்திய அரசுக் கல்வி நிறுவங்களிலும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு செய்து நியாயம் வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது – இதற்கு வரும் நியாயமற்ற எதிர்ப்புகள் எவ்வளவாயினும்.
II.  இரண்டாம் பகுதி.
ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு?:
சாதிகளை இன்றே தூக்கியெறியுங்கள்; இட ஒதுக்கீடும் ஒரு மண்ணும் யாருக்கும் தேவையில்லை.

ஆனல் முதலில் சொன்னது நடக்குமா? நடப்பதற்குறிய எந்த அறிகுறியும் இல்லை. சனாதன தர்மமும் நிலைக்க வேண்டும்; சமூக நீதியும் கிடையாது என்பது என்னவிதமான மனப்பாங்கு?
ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தைப் பீடித்துள்ள சாதி என்னும் வியாதி ஒழிந்து, பிறப்பினால் எந்த மனிதனும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை என்ற சமத்துவ சமுதாயம் ஏற்படும் என்ற நம்பிக்கைக் கீற்றைக் கூடக் காண முடியாத இன்றைய சூழ்நிலையின் நிதர்சனங்களை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். சாதிகள் இல்லை என்றோ, ‘நம்மைப் போன்றவர்களுங்கூட’ சாதிப் பிரிவினைகளைப் பற்றிப் பேசுவது தவறு என்றோ நினைத்தால் நாம் கண்களை மூடிக்கொண்ட பூனைகளாகத்தான் இருப்போம். நம்மிடையே சாதிகளும், சாதீய உணர்வுகளும் ஆழமாகவே பதிந்துள்ளன. சாதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூக ஏற்றத் தாழ்வுகள் எங்கும் நீக்கமற நிறைந்தே இருக்கின்றன.  கீழ்நிலை படுத்தப்பட்டவரைப் பார்த்து, அவருக்குச் சாதீயத் தரவரிசையில் சற்றே மேலேயுள்ளவர்கள் ‘அவன்’ மேலே வந்துவிடக்கூடாதே என்ற நச்சு நினைவோடு ‘கீழ்சாதிக்காரன்’ எப்போதுமே தன் அடிமையாகவும் தான் எப்போதுமே ‘ஆண்டானாகவும்’ இருக்கவேண்டும் என்ற மன வெறியை எல்லா சாதி நிலைகளிலும் பார்க்க முடிகிறது.  இந்தக் காழ்ப்பு உணர்வு வெறியாக மாறி நித்தம் நித்தம் நம் முன் நடந்தேறும் கொடூர நடப்புகள்தான் எத்தனை எத்தனை. வெண்மணியும், திண்ணியமும், பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி நடப்புகளும் ஒரு புறம் என்றால், கையில் செருப்புகளோடும், விளக்குமாறுகளோடு நடத்தப்படும் ‘புனிதப் போராட்டங்கள்’ மறுபுறம். அதிலும் இந்த இரண்டாம் வகை புனிதப் போராட்டங்கள் இருவகையில் மிகத் தரம் குறைந்தவைகள்:
ஒன்று:  இந்த விளக்குமாறுப் போராட்டங்கள் வெற்றி பெருமாயின், காலங்காலமாய் இருந்து வரும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இன்னும் பல காலத்துக்கும் தொடரும்.
இரண்டாவது: தங்களையே முற்படுத்திக்கொண்டோர் தன் சக மனிதனை கேவலமாகவும், அவன்  என்றும் எப்போதும் தனக்கு இணையில்லை என்ற  அகம்பாவ நினைப்பையும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் கீழ்த்தரம்தான் இப்போராட்டங்கள் என்று நமக்கு விளக்குகின்றன. தங்களையே, தங்கள் உள்ளக் கிடக்கையையே அவர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். இதற்கு மேலும் அந்தப் போராட்டங்களில் உள்ளடங்கியிருக்கும் ‘தத்துவங்களைப்’ பற்றி – பலரும் விமர்சித்ததற்குப் பின் – பேசாமல் விடுவதே நல்லது.
நம் சமூக உயர்வில் பங்களிக்காதவர் யார்? ஏதோ ஒரு வழியில் அரசுக்கு வரும் வருமானத்தில் ஒவ்வொருவரும் பங்களிக்கவில்லையா? அப்படியானால் அரசு தரும் service-களில் எல்லோருக்கும் பங்குபெற உரிமை உண்டா இல்லையா? அந்த உரிமை மத நம்பிக்கைகளால் சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினருக்கு – 75% விழுக்காட்டுக்கு மேல் – மறுக்கப்பட்டு வந்துள்ளது உண்மையில்லையா? மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற அவர்களுக்குச் ‘சலுகைகள்’ என்ற பெயரிலாவது இனியாவது புதிய கதவுகளைத் திறப்பது அரசின் முதல் கடமை இல்லையா?¼br /> ¼br /> இடஒதுக்கீடு ஏன் என்ற கேள்விக்கு ஒரே வரியிலும் பதில் தரமுடியும்: To provide level playing field என்பதே அது. மண்டல் தன் அறிக்கையில் கூறுவது: ” சமமானவர்களிடம்தான் சமத்துவம் இருக்க முடியும். சமமாக இல்லாதவர்களை சம்மானவர்களாகக் கருதுவதே சமத்துவமின்மை ஆகும்.”  ஒரே அமைப்பில் ஒரு பகுதியினர் கல்வியோடு தொடர்பு கொண்டவர்களாகவும், மற்றொரு பகுதியினர் பொது சமூகநலனுக்காக ‘உழைக்கும் வர்க்கமாகவும்’  பிரிக்கப்பட்டு வெகுகாலமாய் பிரித்து வைக்கப்பட்ட ஒரே காரணத்தால் மட்டுமே தங்களை ‘அறிவாளிகளாகப்’  புனைந்து கொண்டு கல்வி தங்களுக்கே உரிய ஒரு விஷயமாகக் கற்பித்துக்கொண்டு இருப்பதுவும், மற்றவருக்குத் ‘தகுதி’ இல்லையென்ற கூற்றை கோயபல்ஸ் தனமாக திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருப்பது இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும்? (தகுதி, திறமை பற்றியப் பிரச்சனைகளைத் தனியாக, அடுத்ததாகப் பேசுவோம்).
நாம் எப்போதுமே அண்ணாந்து பார்க்கும் அமெரிக்க நாட்டில் 1964-லேயே Proactive Employment Law என்ற சம வேலைவாய்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தொகை, race – இவைகளின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது அரசு வேலைகளுக்கு மட்டுமின்றி தனியார் துறைகளுக்கும் பொருந்தும் என்ற சட்டம் இயற்றப் பட்டுள்ளதே.  சரியான இன்னுமொரு சான்று வேண்டுமெனின், டெட்ராய்ட் மாநிலத்தில் பாதிக்கு மேல் ஆஃப்ரோ-அமெரிக்கர்கள் இருந்தும் பல அரசு வேலைகளில் அதுவும் காவல் துறையில் மேல்பதவியிலிருப்பவர்கள் பலரும் வெள்ளையர்கள் என்பதை எதிர்ப்பு செய்தமையால், 50:50 என்ற அளவில் இரு சாராருக்கும் பதவிகள் கொடுக்கப் பட அதை எதிர்த்து வெள்ளையர் நீதி  மன்றம் சென்ற போது நீதி மன்றம் விகிதாசார அடிப்படையில் பதவிகள் கொடுக்கப்படுவதே சரியென்று தீர்ப்பும் அளித்தது.
ஆனால் நம் நாட்டில் இப்படி ஒரு தீர்ப்பை இன்னும் பல ஆண்டுகளுக்கு எதிர்பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கே ஒரு பக்க நியாயம்  – அதுவும் முற்படுத்திக்கொண்டோரின் நியாயம் – மட்டுமே படியேறும். ஏனெனில் இதுவரை உச்ச நீதி மன்றத்தில் நீதியரசர்களாக இருந்தவர்கள் மொத்தம் 270; அதில் நான்கு பேர் மட்டுமே  தாழ்த்தப்பட்டோர்.  இதுவரை இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகள் நம் நீதியரசர்கள் முன் தோல்வியடைவதே வாடிக்கை. அதிலும் நம் நீதியரசர்கள் எப்போதும் இந்த விஷயத்தில் மிகவும் proactive -ஆக இருப்பது கண்கூடு. 1950- ஆம் ஆண்டில் சண்பகம் துரைராஜ் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ராமணப் பெண்  சென்னை உயர் நீதி மன்றத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஒரு வழக்கு தொடுக்கப்படுகிறது. பொதுவாக, கல்லூரியில்  – பெயரளவிலாவது – பயிலப் போகும் மாணவர்களின் பெயரில் இம்மாதிரி வழக்குகள் தொடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு யாரோ ஒருவர் – மருத்துவப் படிப்போடு தொடர்பேதுமில்லாதவர் – வழக்கு ஒன்று போடுகிறார். ஸ்ரீனிவாசன் என்ற பொறியிய்யல் மாணவரும் இது போன்ற ஒரு வழக்கைத் தொடுக்கிறார், நீதியரசர் S.R.Das – அவர் சாதி என்ன என்பதை இங்கே குறிப்பிட்டால்தான் எல்லோருக்கும் தெரியுமா, என்ன..? – உடனே அந்த வழக்கை எடுத்து, எடுத்த வேகத்தில் இட ஒதுக்கீட்டிர்கு எதிர்ப்பான தீர்ப்பை அ(ழி)ளிக்கிறார். வழக்கு உச்ச நீதி மன்றத்திற்கு செல்கிறது. அங்கே உள்ள ‘பென்ச்’சில் ஒரு நீதியரசர் மட்டும் இஸ்லாமியர்; மற்றவர் வழக்கம்போல். ஆகவே அங்கும் அதே தீர்ப்பு. இதிலும் ஒரு நல்லது நடந்தது. இத்தீர்ப்புகளுக்கு எதிராக பெரியாரால் தமிழ்நாட்டில் எழுந்த போராட்டமும், தில்லியில் அம்பேத்காரின் முயற்சியாலும் இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டமாக மாறிற்று. நன்றி அந்தப் பெண்மணிக்கு; வழக்கில் தொடர்புள்ள அத்தனை நீதிபதிகளுக்கும்தான்!
அன்று நடந்தது இன்றும் தொடர்கிறது. 2005-ல் நடந்த இனாம்தார் வழக்கில் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கூடாது என்றும் நம் நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். சொந்தக் காசில் கல்லூரி நடத்துகிறார்கள் என்ற கோஷம் அவ்வப்போது வரும்.  ஆனால் வசதியாக, கல்விக்கூடங்களை நடத்துவதால் – அதுவும் இப்போதெல்லாம் அதுவும் ஒரு வியாபாரம்தான் என்பது யாருக்குத்தான் தெரியாது – கல்லூரி நிர்வாகிககளுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் பல உதவிகள், சலுகைகள் ( tax exemption on land, buildings, vehicles; exemption from land ceiling etc..etc..) மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்துதான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள் நம் நீதியரசர்களும், ஏனைய தனியார் கல்லூரிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களும்.
இட ஒதுக்கீட்டை அனுமதித்தால் சமத்துவம் (equality) இல்லாமல் போய்விடும் என்று முற்படுத்திக்கொண்டோர் சொல்லுகிறார்கள். அதுவும் அவர்களது ‘விளக்குமாறு போராட்டத்தில்’ இந்த ‘வசனம்’ அடிக்கடி பலர் வாயிலிருந்தும் வந்தது. சமூகத்தில் சமத்துவம் உள்ளதா? இல்லாமலிருப்பின் அதற்குரிய காரணிகள் என்ன? யார்?  சமூகத்தில் சமத்துவத்தை மறுப்பவர்கள், சமத்துவம் பிறப்பினாலாயே இல்லை என்பவர்கள் கல்வி வாய்ப்பில் சமத்துவம் பேசுகிறார்கள். சமூகத்தில் சமத்துவத்தைக் கொண்டு வருவதற்காகத்தானே கல்வியில் முடக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதுள்ளது.  இந்திய சமூகத்தில் 5% மட்டுமே ப்ராமணர்கள்; ஏனைய முன்னேறிய பிரிவினர்களையும் சேர்த்தால் இவர்கள் மொத்தம் 15% மட்டுமே. சமூகத்தில் இருக்கும் மக்களுக்கு அவரவர் மக்கள் தொகைப்படி ‘விகிதாச்சார இட ஒதுக்கீடு’ (proportional reservation) செய்திருந்தால்  இன்று இவர்கள் 75முதல் 85% விழுக்காடு வரை ஆக்கிரமித்து இருக்க முடியுமா? ( எங்களிடம் ‘திறமை’ இருந்ததால் மேலே வந்தோம் என்று யாரும் இந்த இடத்தில் சொல்ல நினைத்தால் கொஞ்சம் பொறுங்கள்.)
வேறொன்றுமில்லை. ஓரளவேனும் இருக்கும் இப்போதைய இட ஒதுக்கீட்டினால் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இதனால்,இட ஒதுக்கீட்டையே ஒழிக்க முயலுகிறார்கள். முற்படுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது முன்னேற்றம் என்ற “நல்லெண்ணமே” இதற்கெல்லாம் காரணம். ஓட்டப் பந்தயத்தில் தனக்கு முந்திய இடத்தில் இருப்பவனை முந்துவதே  ஒவ்வொரு ஓட்டப் பந்தயக்காரனின் முனைப்பாக இருக்கும். ஆகவேதான் சாதித் தரவரிசைகளில் கடைசிப் படிக்கட்டில் வைக்கப்பட்ட தலித்துகளின் முன்னேற்றம் அவர்களுக்கு சற்றே மேற்பட்ட படியில் வைக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது. இவர்கள் எல்லோரும் ஓரளவாவது முன்னேறுவது இதுவரை முதலிடத்தில் இருப்பவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது.
 

III. மூன்றாம் பகுதி
திறமையும், இட ஒதுக்கீடும்:

இட ஒதுக்கீட்டின் மூலம் வரும் மாணவர்கள் திறமை இல்லாதவர்களாக இருப்பார்கள்; ஆகவே இட ஒதுக்கீடு கூடவே கூடாது.
தரத்திற்கு முதலிடம் கொடுத்தால்தான் நாடு உண்மையான முன்னேற்றம் காண முடியும்.  ஆகவே இட ஒதுக்கீடு கூடாது. அதுவும் உயர் கல்வியில் கூடவே கூடாது.¼br /> ¼br /> ஏகலைவனும், சம்புகனும்தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள். ராமாயணமும், மகாபாரதமும் இன்னும் முடியவேயில்லை.

**தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் வெறும் பாஸ் மார்க் வாங்கினாலே போதும்; அவர்களை எங்கள் கோட்டாவில் சேர்த்துக்கொள்ள உரிமை தர வேண்டும் என்று கல்லூரிகள் கேட்ட போது   -  இப்போது தரம் பற்றிப் பேசுவர்கள் எங்கே போனார்கள்?
**NRI மாணவர்களுக்கும் இதே போல் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி மருத்துவக் கல்லூரி இடங்கள் ‘ஏலம்’ விடப்படும்போது   -  இப்போது தரம் பற்றிப் பேசுவர்கள் எங்கே போனார்கள்?
தமிழ்நாட்டைப் பொருத்த மட்டிலுமாவது எல்லோருக்குமே தெரியுமே – உயர் கல்விக்குரிய நுழைவுத்தேர்வுகளில் cut-off மதிப்பெண்கள் எப்படி உள்ளன என்று.  இதற்குப் பிறகும் இன்னும் அதே பல்லவியை எத்தனை நாட்களுக்கு ‘ப்ரஸ்தாபித்து’க் கொண்டே இருப்பது?

cut-off மதிப்பெண்களில்தான் அதிக ஏற்றத்தாழ்வு இல்லையே; பின் எதற்காக இன்னும் இட ஒதுக்கீடு என்றொரு கேள்வி பலரிடமிருந்து. – இட ஒதுக்கீடு ஏன் என்ற கேள்விக்குரிய பதில் அவர்களுக்குப் புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பதே பொருள்.
1950கள் வரை முற்படுத்திக்கொண்ட சாதியினர் அனைவரும் மிகவும் புத்திசாலிகள், நன்றாகப் படிப்பவர்கள் என்றொரு ‘மாயை’ இருந்து வந்தது என்னவோ உண்மைதான்.  ஆனால் இந்த மாயை, 60-களிலேயே சரியத் தொடங்கி, இன்றைக்கு அது முற்றிலுமாகத் துடைக்கப்பட்டு விட்டது. ஆராய்ச்சி, மருத்துவம், நீதித்துறை, ஆடிட்டிங், எழுத்து, ஊடகங்கள், படைப்பாளர்கள் – என்று அவர்கள் மட்டுமே கோலோச்சிய நிலையா இன்று? எல்லோரும்,  எங்கும் எதிலும் என நீக்கமற நிறைந்திருப்பது மட்டுமின்றி, இன்றைய டாப் – 2 என கருதப்படும் கம்ப்யூட்டர், biotechnology என்ற இரு துறைகளிலுமே முற்படுத்திக்கொண்டோர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் அனைவருமே சமமான அளவு தங்கள்  திறமைகளை காண்பித்துக் கொண்டிருக்கிறார்களே.

‘அவனுக்குத்தன் படிப்பு வரும்; இவனுக்கெல்லாம் படிப்பா?’ என்ற மமதையான நேற்றைய பேச்சு  இன்று செல்லுபடியாகுமா? திறமைகள் எல்லோரிடமும் உண்டு; எல்லோரிடமும் அதற்குரிய ஜீன்கள் உண்டு. அவைகளைக் வெளிக்கொணரத் தேவையானது சாதி அடையாளம் – caste label – இல்லை; வாய்ப்புகள் மட்டுமே. இருட்டுக்குள்ளேயே வைத்திருந்த செடியை வெயிலுக்குக் கொண்டு வந்ததும் வீறுகொண்டு வளருமே, அது போல தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் புதிய வாய்ப்புகள் தரும் உத்வேகங்கள் அவர்களை வேகமாகவே முன்னெடுத்துச் செல்ல வைக்கும். இதுவரை மறுக்கப்பட்ட வாய்ப்புகளைத் தங்கள் உரிமைகளாக அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் ‘விளக்குமாறு போராட்டக்காரர்களோ’ அவர்களையெல்லாம் இப்போது இருக்கும் இடத்திலேயே வைக்கவேண்டும் என்ற தங்கள் மன நிலையை, மன வக்கிரத்தைத் தான் காண்பிக்கிறார்கள்.
அவ்வளவு ஏன்? “….இன்னும்கூட அனைத்திந்திய அளவில் வழங்கப்படும் படைப்பாக்கத்திற்கான பரிசு – Innovation Awards – பெறுவோரில் 60-70% பேர் பள்ளிப் படிப்பையே பாதியில் நிறுத்தியவர்கள்” என்கிறார் IIM -A முனைவர் அனில் குப்தா. அப்படியென்றால் IIM-ல் படித்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டால், நம் வரிப்பணத்தில்  பெரிய  படிப்பு படித்துவிட்டு பெரிய சம்பளத்திற்காக அயல் நாடுகளுக்குப்  பயணம் போய்விடுகிறார்கள்.
வரலாற்றிலிருந்து இன்னொரு பக்கம்:
இட ஒதுக்கீட்டை  மறுக்கும் முற்படுத்திக் கொண்டோரின் தகுதி, திறமை  குறித்து  சந்திரபான்  பிரசாத் என்பவர் Pioneer  நாளிதழில் சில வரலாற்று உண்மைகளைப் பற்றிச் சொல்கிறார்:

” 1858-ம் ஆண்டில் சென்னையில் பட்டப் படிப்பிற்கான கல்லூரி தொடங்கப்பட்டது.  இங்கிலாந்திலிருந்து பேராசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.  கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால் கல்லூரியைத் தொடந்து நடத்த முடியவில்லை. ஆங்கிலேய அரசு பட்டப் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள்  ‘இண்டர்மீடியட்’ வகுப்பில் முதலாம், இரண்டாம் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதைத் தகுதியாக நிர்ணயித்திருந்தது.  மேலும் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அன்று மேல்சாதி மாணவர்களால் முதலாம், இரண்டாம் தரங்களில் தேர்ச்சி அடைய முடியவில்லை.  தேர்ச்சிக்கான 40 மதிப்பெண்ணையும் பெற முடியவில்லை. மேல்சாதியினரின் வற்புறுத்துதலின் காரணமாக ஆங்கிலேய அரசு பட்டப் படிப்பில் சேருவதற்கான தகுதியைக் குறைத்தது.  மூன்றாவது வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்களும் பட்டப் படிப்பில் சேரத் தகுதி வாய்ந்தவர்கள் என அரசு அறிவித்தது.  தேர்ச்சிக்கான மதிப்பெண் 40%-லிருந்து 33% ஆகக் குறைக்கப் பட்டது.”
1901-ம் ஆண்டு கல்கத்தாவில் மெட்ரிகுலேசன் தேர்வில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை 40%-லிருந்து 33% ஆகக் குறைத்திருக்காவிட்டால் 1400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்க முடியாது.

1922-1927-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கல்வி அறிக்கையின்படி மேல்சாதி மாணவர்களில் 45% மருத்துவப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை; 35% மாணவர்கள் பொறியியல் படிப்பில் தேர்ச்சி அடையவில்லை.

ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்த தங்களது ‘தகுதியற்ற நிலையை’ மறந்து உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்ப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து இன்று ‘விளக்குமாறு போராட்டம்’ நடத்தப்படுகிறது!

all said and done, மேல்குடி மக்களோடு ஒப்பிடும்போது கீழ்மட்டத்தாருக்குத் ‘தகுதி’களில் சில குறைபாடுகள் உண்டுதான். இந்த வேறுபாடு நம் ஜீன்களில் இல்லை; நம் வாழ்வியல் முறைகளால் இருக்கிறது. இந்த வேறுபாடு பிறப்பினால் இல்லை; வளர்ப்பினால் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பாலுமும், தாழ்த்தப்பட்டோர் கிட்டத்தட்ட முற்றிலுமே வறுமைச் சூழலிலிருந்தே வருகிறார்கள். மேற்படுத்திக்கொண்ட சாதியினரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வீட்டுச் சூழல், ஆயிரக்கணக்கில் பணம் கொட்டிக் கொடுத்து நுழைவுத் தேர்வுகளுக்காய் அவர்களைத் தயார் படுத்தும் பண வசதி – இவைகள் ஏதும் அவர்களிடம் இல்லை. அந்த வசதிகள் இல்லாமல் போனதற்குக் காரணம்  -  உனக்கு இதுதான் தொழில் என்று பிறப்பிலேயே தண்ணீர் தெளித்துவிட்டு விட்ட சாதீயக் கட்டுப்பாடுகள் தானே காரணம்? இந்தச் சாதீயக் கட்டுப்பாடுகள் எங்கிருந்து வந்தன? வேதங்களிலிருந்துதானே? வேதங்களை அன்றும் இன்றும் கட்டிக் காத்துக் காபந்து செய்து கொண்டிருப்பவர்கள் யார்? பஞ்சாபில் (மற்ற மாநிலங்கள் பற்றித் தெரியாது) 1947 வரையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நில உடமை தடை செய்யப்பட்டிருந்திருக்கிறது. இப்படி விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டில் நில உடைமையைத் தடை செய்து விட்டு, இன்று நீ ஏழை, படிப்பறிவில்லாதவன், என்று கூறி அதோடு உனக்கு அறிவு இல்லை, திறமையும் இல்லை என்று பறையடிப்பதால்தானே பெரும்பான்மையான மக்களின் சமூகக் கோபம் முற்படுத்திக் கொண்டோரின் மீது உள்ளது. Level playing field கொடுத்து ஆட்டத்தை ஆரம்பித்து விட்டு அதன் பின் எழுப்புவோம் திறமை பற்றிய  கேள்விகளை.
கடைசியாக, cut-off மார்க்கை சிறிதே குறைத்து இட ஒதுக்கீட்டின் மூலம் இதுவரை பெரும்பான்மையோருக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளவைகளில் பங்கு (அவர்களின் எண்ணைக்கையின் படி “சிறிய பங்கு”தான்) கேட்கும்போது ‘திறமை’ பற்றிய அரற்றல் வந்து விடுகிறது. கல்வித்தரம் அதள பாதாளத்தில் வீழ்ந்துவிடும் என்ற ஓலம் கேட்கிறது. 95 மார்க் வாங்குபவனுக்கும், 85 மார்க் வாங்குபவனுக்கும் (அவர்களது வாழ்க்கைச் சூழல், பொருளாதார வேற்றுமை என்பவை பற்றி இப்போது பேச வேண்டாமே) ‘திறமை’யில் என்ன பெரிய வித்தியாசம்? சரி, 85 மார்க் வாங்கியவனுக்கு இடம் கொடுத்தாகி விட்டாச்சு; அதன் பின் படிப்பில், தேர்வில் அவன் 95 மார்க் வாங்கியவனுடந்தானே போட்டியிட வேண்டும். அவனுக்கென்று தேர்வுகளில் ஏதும் சலுகை உண்டா என்ன? அவனும் எல்லோரையும் போலவே முறையான தேர்வுகள் எழுதி தேறி வரவேண்டும். பின் end product-ல் தரம் எப்படி குறையும்? பொறியியலில் இட ஒதுக்கீட்டீல் இடம் பெரும் மாணவன் கட்டும் வீடுகளும், கட்டிடமும் ஆடிக்கொண்டே இருக்கும் என்றும், வைத்தியனானால் அவன் பார்க்கும் நோயாளி மட்டும் ‘பொசுக்’குன்னு போய்டுவான் என்றும் அறிவற்ற முறையில் பேசுவதை இந்த ‘விளக்குமாறு போராட்டக்காரர்கள்’ நிறுத்தினால் நல்லது.
    IV  நான்காம் பகுதி

திரட்டுப் படலம் /Creamy layer:

இதற்கான சுருக்கமான ஓர் ஒற்றைவரிப் பதில்: இது இட ஒதுக்கீடு பெறுபவர்களின் கவலை; இதில் மேற்படுத்திக் கொண்டோருக்கு என்ன வேலை? ஆடு நனைகிறதே என்று இவர்களுக்கு ஏன் கவலை?
மண்டல் கமிஷன் தீர்ப்பில் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் கூறியது போல்…”  “The milk is yet to boil; where is the cream now?”
பிற்படுத்தப் பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மொத்த விழுக்காட்டில் பணக்கார-பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடமெல்லாம் போகிறதே என்று மற்ற ஏழை-பிற்படுத்தப்பட்டவர்கள் கவலைப்படும் நிலை வரும்போது அவர்களே அந்தப் பிரசனையைத் தீர்த்துக் கொள்ளட்டுமே…இதில் ‘விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு’ என்ன வேலை?
V. ஐந்தாம் பகுதி
பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு:

இட ஒதுக்கீடே சமுதாயத்தில் பொருளாதார சமத்துவம் பற்றியதல்ல. சாதீயக் கட்டுகளிலிருந்து விடுதலையும், சமூக நீதி பெறுதலுமே அதன் கோட்பாடு. மேலே சொன்னது போலவே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்றால் இப்போதைக்கு நடைமுறைப்படுத்த பிரச்சனைகளும் உண்டு.  தாழ்த்தப்பட்ட ஒருவர் பன்றி மேய்த்து மாதம் 10,000 ரூபாயும் சம்பாதிக்க முடியும். அதனாலேயே அவர் பிள்ளை இட ஒதுக்கீட்டில் இடம் பெற முடியாதென்றால் அப்படி ஒரு இட ஒதுக்கீடு எதற்கு? மாதச் சம்பளம் பெறும் பலரும் இதில் பலன் பெற முடியாதபடி போய், அதற்குப் பதிலாக, கள்ளக் கணக்கெழுதி பெரும் பணம் சம்பாதிக்கும் மற்றொருவர் இட ஒதுக்கீடு பெற முடியும். ஒவ்வொரு மனிதனின் பொருளாதர நிலையை முற்றாக அரசு அறிந்துகொள்ள – அமெரிக்காவில் உள்ளது போல social security number – ஏதுவாக அரசு திட்டம் கொணர்ந்து அதன் பின் பொருளாதாரத் தகுதி பார்த்து இட ஒதுக்கிடு தரட்டும். அதுவரை இப்போது உள்ள அளவுகோல்களை வைத்தே இட ஒதுக்கீடு தரவேண்டும்.
VI. ஆறாம் பகுதி

தற்போதைய நிலை:

நம் அரசுகள் பார்க்காத போராட்டங்களா? நினைத்திருந்தால் இந்த ‘விளக்குமாறு போராட்டங்களை’ எளிதில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். மனமிருந்தால் வழியிருந்திருக்கும்.  அதை விட்டு விட்டு, கண்காணிப்புக் குழு, அறிஞர் குழு என்றெல்லாம் அமைப்பது நமது நாட்டு அரசியல்வாதிகள் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு விஷயத்தை இழுத்தடித்து, பிரச்சனையையே மக்களை மறக்க வைக்கும் ஒரு டெக்னிக்தானே!
இப்போதே பல உயர் கல்வி நிலையங்களில் நுழைவுத் தேர்வு முடிந்து விட்டது என்ற காரணம் சொல்லி 2006-2007-ல் இட ஒதுக்கீடு இல்லையென்றாகி விட்டது.அடுத்த ஆண்டுக்கு இன்னும் எத்தனை எத்தனை நொண்டிச் சாக்குகளோ?
அதோடு முற்படுத்திக் கொண்டோரிடமிருந்து பிறந்து அரசால் தத்து எடுத்துக் கொள்ளப் பட்டுள்ள இன்னொரு ‘பரிந்துரைப்பு’ – உயர்கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையை அதிகப் படுத்துவது. சும்மா சொல்லக் கூடாது – இது ஒரு நல்ல ராஜதந்திரம்.  கீழ்க்கண்ட கணக்கு அதைத் தெளிவுபடுத்தும்.
தற்போது I.I.T.களில் உள்ள மொத்த இடங்கள்  : 4000
54% இட அதிகரிப்பில் கூடும் இடங்கள் :  2160
ஆக மொத்த இடங்கள் :  6160
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு    (4000ல்  27%) : 1080
தாழ்த்தப்பட்டவர்களுக்கு – SC (4000ல் 15%) :  600
தாழ்த்தப்பட்டவர்களுக்கு – ST (4000ல்  7.5%) : 300
B.C. + S.C. + S.T. 27%+15%+7.5%) : 1980 -  இது மொத்த 6160 இடங்களில் வெறும் 32%. அதாவது ஏற்கெனவே உள்ள 49.5% யை வெறும் 32% ஆக மாற்றும் நல்ல ராஜதந்திரம். மீதியுள்ள 68%(51%க்குப் பதிலாக) விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு!
இந்தத் திறமைகளுக்குப் பஞ்சமேயில்லை நம் விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு! இதை விடவும் சட்டத்தை எப்படி தைரியமாக, தந்திரமாக, வெளியே தெரியாதபடி (கமுக்கமாக) தங்களுக்குச் சாதகமாக முறியடிக்கும் trickery-யை இன்னொரு உதாரணம் மூலம் பார்க்கிறீர்களா? இதோ அந்தச் சாதனை……..
I.A.S., I.P.S. என்பதற்கான UPSC தேர்வுகள் எந்தக் குழறுபடி இல்லாமல், ஊழல் இல்லாமல் மிகச் சரியாக சிறப்பாக நடந்து வருவதாகத்தான் நானும் பலரைப்போல் நினைத்திருந்தேன் – இந்த வழக்கைப் பற்றிக் கேள்விப்படும்வரை.

Prelims, Mains தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் பின் நடக்கும் நேர்முகத்தேர்வில் பெறும்  மொத்த மதிப்பெண்களை வைத்து rank செய்யப் பட்டு அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை OC (open competition) -ல் சாதி எதுவும் பார்க்காது தேர்ந்தெடுக்க வேண்டும். OC quota  முடிந்தபின் B.C., S.C., S.T. என்ற சாதிவாரியான மாணவர்களை அவர்களது rankபடி தேர்ந்தெடுக்க வேண்டும்.இதுவே முறை. ஆனால் எத்தனை ஆண்டுகளாகவோ தெரியாது; என்ன நடந்திருக்கிறது என்றால் O.C.  என்றால் (F.C. என்ற கணக்கில்) அது முற்படுத்திக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே உரியது போல், top rankers-ல் உள்ள Forward Community மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு, மற்ற சாதி அடிப்படையான இடங்களுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்களிலிருந்து  தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். They were hoodwinking everybody and kept their portal safe and secure. இதனால் பிறபடுத்தப் பட்டோர் 25%க்கு மேலும், தாழ்த்தப்பட்டோர் மொத்தமே 18%க்கு மேலும் வரமுடியாது. இது ஒரு பயங்கர மோசடி.

கதைபோல் தெரிகிறதா? எனக்கும் அப்படியே தோன்றியது. எப்படி இப்படிப்பட்ட உயர் அமைப்புகளில் விதிகளை இந்த அளவு மீறி (trickery and violation of law) தைரியமாக மிக மிக அநியாயமான ஒரு செயலைச் செய்திருக்க முடியும் எனபது ஆச்சரியமாகவும் கவலைக்குறிய ஒன்றாகவும் இருக்கிறது. எத்தனை பேரின் கூட்டில் இந்தச் சதி நடந்திருக்க முடியும்? இதை எப்போது நம்ப முடிந்தது என்றால்…

க்ளீட்டஸ் என்பவர் UPSC தேர்வுகள் எழுதி GRADE I Officer ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், நடந்தவைகளை வைத்து CAT -Central Administration Tribunal -க்கு ஒரு Original Application ( O.A. – this is equivalent to writ petition )  கொடுத்தார். அஜ்மல்கான் என்ற வழக்கறிஞர் இதை க்ளீட்டஸுக்காக வாதாடினார்.    நீதிபதி திருமதி பத்மினி ஜேசுதுரை இவ்வழக்கில் UPSCக்கு எதிரான தீர்ப்பளித்தார். இதன் பிறகு விதிகள் கடைப்பிடிக்கப் படுகின்றன என நம்பப் படுகிறது. எப்படிப்பட்ட வடிகட்டிய அநியாயம் என்பதை இந்த வழக்கைப் பற்றி அறிந்த போது உணர்ந்தேன். ஆனால் இப்படி ‘வடிகட்டிய’ போதும் வெற்றி பெற்ற B.C., S.C., S.T.மாணவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவ்வளவு தடைகளையும் மீறி அவர்கள் பெற்ற வெற்றி அவர்களின் தகுதியின் தரம் பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெளிவாக்குகிறது.

ஆனாலும் இப்போதும் இன்னொரு தடைக்கல் இருப்பதாக நண்பர்கள் மூலமாக அறிகிறேன்: Prelims, Mains – இவைகளில் தேர்வு பெற்று நேர்முகத் தேர்வுக்குப் போகும்போது மாணவர்களை random-ஆக interview boards-ல் ஏதாவது ஒன்றிற்கு அனுப்புவதே சரி. அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களது சாதி பற்றிய விவரங்கள் ஏதுமின்றி நேர்முகத் தேர்விலும் அவர்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்பதே சரி.Prelims, Mainsதேர்வுகளில் மாணவர்களின் தனி அடையாளங்கள் எப்படி திருத்துபவர்களுக்குத் தெரியாதோ அதே போலத்தானே  நேர்முகத் தேர்விலும் இருக்க வேண்டும். pedagogical principlesகளில்  ‘halo effect’ என்று ஒன்று சொல்வார்கள். மாணவனைப் பற்றிய எவ்வித முன்முடிவுமின்றி அவனது தேர்வுத்தாள் திருத்தப்பட வேண்டும்; இல்லையெனில் மனித மனம் முதலில் மாணவன் மீது திருத்துபவர் கொண்ட முடிவின்படி மதிப்பீடு செய்யும் தன்மை கொண்டதே என்பது இந்த  ‘halo effect’ .
UPSC நேர்முகத் தேர்வுகளில் முதலில் OC. மாணவர்கள் தொடர்ந்து அனுப்பப் பட்டு  அதன் பின் ..B.C.,… S.C….. S.T….என்று சாதி வாரியாக வரிசைப்படுத்தப்பட்டே அனுப்பப் படுகிறார்களாம். தேர்வாளர்களாக இருப்பவர்களில் இன்றைய நிலையில் யார் பெருவாரியாக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இம்முறையினால் நேர்முகத் தேர்வுகள்  ‘halo effect’  இல்லாமல் நேர்மையாக இருக்குமா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
இந்த ஏமாற்று வேலை எத்தனை ஆண்டுகள் நடந்து வருகிறதோ; யாமறியோம். ஆனால் இது பற்றிய முழு விவரமும் இந்த ஏமாற்றை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் தொடர்ந்த வழக்குக்கள் பற்றிய விவரங்களோடும், முழு விபரத்தோடும் ஷரத் யாதவ் 0-7.07.2006-ல் The Hindu-வில் எழுதிய முழுக்கட்டுரையினை இந்தப் பதிவில் கொடுத்துள்ளேன்.
VII. ஏழாம் பகுதி
முடிவுரை:

ப்ராமணர்களை ‘வந்தேறிகள்’ என்றார்கள் ஒரு பிரிவினர்; இன்று human genomics பற்றிய ஆராய்ச்சிகளும், DNA பற்றிய ஆராய்ச்சிகள் மூலம் “நாம்’ அனைவரும் ஒரே RACE என்கிறார்கள். (ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்? ) எனக்கு இந்த இரண்டாவதுதான் பிடிக்கிறது ! வந்தேறிகள் என்று அழைக்கப்படும் போது வருந்திய, கோபமுற்ற முற்படுத்திக் கொண்டோர் DNA கூற்றினை உண்மையென ஒத்துக்கொள்கிறார்களா?

நம் ஒவ்வொரு சாதியின் ‘gene pool’ ஒன்றும் water tight compartments இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே நிலப்பரப்பில் வாழும் எந்த உயிரினங்களுக்குள்ளும் (community) genetic exchange நடந்தே தீரும் என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கே என்னதான் சாதிப் பிரிவினைகள் என்ற கோடுகள் போட்டு  மக்களைப் பிரித்து  வைத்திருந்தாலும் , பாலுணர்வுக்கு ஏது வரைமுறைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது நடந்திருந்தாலும் ஒவ்வொரு சாதிக்குறிய gene pool 100% purity-யோடு இருக்க சாத்தியமேயில்லை. நடுவில் ராமானுஜர் தாழ்த்தப்பட்ட சாதியினரை ‘முற்படுத்திய’ வரலாறு வேறு உண்டு.

இப்படி வழியில் எவ்வளவோ! என்னென்னவோ !! பின் ஏன் இன்னும் சாதிகளைக் கட்டிக்கொண்டு அழுகிறோம்?! நம் DNAக்களில் இருக்கும் ஒற்றுமைகளை நாம் புரிந்து கொள்ளப் போகும் காலம் எப்போது? விளக்குமாறே உன் கதி; உன் தொழில் என்ற தள்ளப்பட்டு சமூகத்தின் கடைசியில் நிற்கும் ஒருவருக்கும், ‘போராளி’யாய் இன்று தெருவில் விளக்குமாறோடு நிற்பவருக்கும் என்ன வேறுபாடு? இரண்டு பேருமே சொந்தக்காரர்கள்தானே !

50, 60 ஆண்டுகளுக்கு முன்பு இது ‘சாதிப்புத்தி’ என்று ஒவ்வொரு சாதிக்கும் சில ‘பண்பு நலன்களை’ (??!!)க் கூறுவதுண்டு. இன்று அந்த மாதிரியான பேச்சு ஒருவாறு  குறைந்து வந்து  கொண்டிருந்தது. இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனைகள் நம்மை  மறுபடியும்  50-60 ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்கு கொண்டு போய்விட்டது.

இன்னும் 2000-3000 ஆண்டுக்கதைகள் எதற்கு? கடந்த 50-100 ஆண்டுகளில் எல்லோருக்கும் பொதுவான வசதி வாய்ப்புகளைப் பெரு வாரியாக ஒரு சிலர் அடைந்து விட்டனர். சாதியின் பெயரில், சாதி உயர்வு சொல்லி அதனால் வந்த வாய்ப்புகள் ஒரு சிலருக்கே கிடைத்து வந்திருக்கிறது. சாதிப் பிரிவினைகளை மட்டுமே வைத்து வந்த வாய்ப்புகள் அவை. வேறு எந்த காரணமுமில்லை.   திறமை நம் எல்லோருக்கும் உண்டு.  இனியாவது வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்; உருவாக்க வேண்டும். உருவாக்கப்பட வேண்டும்.ஏற்கெனவே பலன்களை corner செய்துகொண்டவர்கள்தான் இதற்காக முதலில் நேசக்கரம் நீட்ட வேண்டும்; இனியாவது எல்லோரும் முன்னேறினால்தான், எல்லோரையும்  முன்னேற்றினால்தான்  அது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது; அதுவே முறையானது; மனிதத்தனமானது  என்ற உணர்வு வரவேண்டும். வருமா..?
B.C., S.C., S.T., – இவர்களுக்கு ஒரு வார்த்தை:

சமூக நீதி கிடைக்கப் பெறுவதற்குரிய வரலாற்றின் ஒரு திருப்புமுனைக் கட்டத்தில் இருக்கிறோம். பலருக்கும் இட ஒதுக்கீடு, அதனைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான கல்வி, வேலைகளில் இட ஒதுக்கீடு பற்றிய  புரிதல் இல்லாமல் உள்ளது; அதனை ஒட்டி நடக்கும் போராட்டங்கள் யாருக்காகவோ, எதற்காகவோ நடப்பது போல் பலரும் இருப்பதாகவே படுகிறது. புரிந்து கொள்வதும், புரியாதவருக்குப் புரிய வைப்பதும் இன்றைய கால கட்டத்தில் ஒரு கட்டாயத் தேவை.

புரிந்தவர்கள், சமூக, பொருளாதார தளங்களில் மேலே வந்து விட்டவர்கள், படித்தவர்கள் – இப்படிப் பலரும் சாதிகளைப் பற்றிப் பேசுவதே தவறென்று நினைத்துக் கொண்டு, தங்களைப் புனித பிம்பங்களாக கருதிக் கொண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு வலு சேர்க்காதது பெரும் தவறு. எதிர் காலம் அவர்களைக் குற்றம் சொல்லும்.
 இனியாவது வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்; உருவாக்க வேண்டும்.

167. ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு…4

சாதிகள் இருக்குதடி பாப்பா…4 

II.  இரண்டாம் பகுதி.
 

ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு?:


சாதிகளை இன்றே தூக்கியெறியுங்கள்; இட ஒதுக்கீடும் ஒரு மண்ணும் யாருக்கும் தேவையில்லை.
ஆனல் முதலில் சொன்னது நடக்குமா? நடப்பதற்குறிய எந்த அறிகுறியும் இல்லை. சனாதன தர்மமும் நிலைக்க வேண்டும்; சமூக நீதியும் கிடையாது என்பது என்னவிதமான மனப்பாங்கு?ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தைப் பீடித்துள்ள சாதி என்னும் வியாதி ஒழிந்து, பிறப்பினால் எந்த மனிதனும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை என்ற சமத்துவ சமுதாயம் ஏற்படும் என்ற நம்பிக்கைக் கீற்றைக் கூடக் காண முடியாத இன்றைய சூழ்நிலையின் நிதர்சனங்களை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். சாதிகள் இல்லை என்றோ, ‘நம்மைப் போன்றவர்களுங்கூட’ சாதிப் பிரிவினைகளைப் பற்றிப் பேசுவது தவறு என்றோ நினைத்தால் நாம் கண்களை மூடிக்கொண்ட பூனைகளாகத்தான் இருப்போம். நம்மிடையே சாதிகளும், சாதீய உணர்வுகளும் ஆழமாகவே பதிந்துள்ளன. சாதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூக ஏற்றத் தாழ்வுகள் எங்கும் நீக்கமற நிறைந்தே இருக்கின்றன.  கீழ்நிலை படுத்தப்பட்டவரைப் பார்த்து, அவருக்குச் சாதீயத் தரவரிசையில் சற்றே மேலேயுள்ளவர்கள் ‘அவன்’ மேலே வந்துவிடக்கூடாதே என்ற நச்சு நினைவோடு ‘கீழ்சாதிக்காரன்’ எப்போதுமே தன் அடிமையாகவும் தான் எப்போதுமே ‘ஆண்டை’யாகவும்’ இருக்கவேண்டும் என்ற மன வெறியை எல்லா சாதி நிலைகளிலும் பார்க்க முடிகிறது.  நம் சமூக உயர்வில் பங்களிக்காதவர் யார்? ஏதோ ஒரு வழியில் அரசுக்கு வரும் வருமானத்தில் ஒவ்வொருவரும் பங்களிக்கவில்லையா? அப்படியானால் அரசு தரும் service-களில் எல்லோருக்கும் பங்குபெற உரிமை உண்டா இல்லையா? அந்த உரிமை மத நம்பிக்கைகளால் சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினருக்கு – 75% விழுக்காட்டுக்கு மேல் – மறுக்கப்பட்டு வந்துள்ளது உண்மையில்லையா? மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற அவர்களுக்குச் ‘சலுகைகள்’ என்ற பெயரிலாவது இனியாவது புதிய கதவுகளைத் திறப்பது அரசின் முதல் கடமை இல்லையா?
  இடஒதுக்கீடு ஏன் என்ற கேள்விக்கு ஒரே வரியிலும் பதில் தரமுடியும்: To provide level playing field என்பதே அது. மண்டல் தன் அறிக்கையில் கூறுவது: ” சமமானவர்களிடம்தான் சமத்துவம் இருக்க முடியும். சமமாக இல்லாதவர்களை சம்மானவர்களாகக் கருதுவதே சமத்துவமின்மை ஆகும்.”  ஒரே அமைப்பில் ஒரு பகுதியினர் கல்வியோடு தொடர்பு கொண்டவர்களாகவும், மற்றொரு பகுதியினர் பொது சமூகநலனுக்காக ‘உழைக்கும் வர்க்கமாகவும்’  பிரிக்கப்பட்டு வெகுகாலமாய் பிரித்து வைக்கப்பட்ட ஒரே காரணத்தால் மட்டுமே தங்களை ‘அறிவாளிகளாகப்’  புனைந்து கொண்டு கல்வி தங்களுக்கே உரிய ஒரு விஷயமாகக் கற்பித்துக்கொண்டு இருப்பதுவும், மற்றவருக்குத் ‘தகுதி’ இல்லையென்ற கூற்றை கோயபல்ஸ் தனமாக திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருப்பது இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும்? (தகுதி, திறமை பற்றியப் பிரச்சனைகளைத் தனியாக, அடுத்ததாகப் பேசுவோம்).

நாம் எப்போதுமே அண்ணாந்து பார்க்கும் அமெரிக்க நாட்டில் 1964-லேயே Proactive Employment Law என்ற சம வேலைவாய்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தொகை, race – இவைகளின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது அரசு வேலைகளுக்கு மட்டுமின்றி தனியார் துறைகளுக்கும் பொருந்தும் என்ற சட்டம் இயற்றப் பட்டுள்ளதே.  சரியான இன்னுமொரு சான்று வேண்டுமெனின், டெட்ராய்ட் மாநிலத்தில் பாதிக்கு மேல் ஆஃப்ரோ-அமெரிக்கர்கள் இருந்தும் பல அரசு வேலைகளில் அதுவும் காவல் துறையில் மேல்பதவியிலிருப்பவர்கள் பலரும் வெள்ளையர்கள் என்பதை எதிர்ப்பு செய்தமையால், 50:50 என்ற அளவில் இரு சாராருக்கும் பதவிகள் கொடுக்கப் பட அதை எதிர்த்து வெள்ளையர் நீதி  மன்றம் சென்ற போது நீதி மன்றம் விகிதாசார அடிப்படையில் பதவிகள் கொடுக்கப்படுவதே சரியென்று தீர்ப்பும் அளித்தது.
 ஆனால் நம் நாட்டில் இப்படி ஒரு தீர்ப்பை இன்னும் பல ஆண்டுகளுக்கு எதிர்பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கே ஒரு பக்க நியாயம்  – அதுவும் முற்படுத்திக்கொண்டோரின் நியாயம் – மட்டுமே படியேறும். ஏனெனில் இதுவரை உச்ச நீதி மன்றத்தில் நீதியரசர்களாக இருந்தவர்கள் மொத்தம் 270; அதில் பிற்படுத்தப்பட்டோர் நான்கு பேர் மட்டுமே; தாழ்த்தப்பட்டோர் யாருமே இல்லை.*** (*** பின் குறிப்பில் விளக்கம் காண்க.) 266 பேர் யாரென்று சொல்லவும் வேண்டுமோ?  இது ஒன்றும் வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ என்று சொல்லிச் செல்லும் குற்றச்சாட்டல்ல. இதுவரை இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகள் நம் நீதியரசர்கள் முன் தோல்வியடைவதே வாடிக்கை. அதிலும் நம் நீதியரசர்கள் எப்போதும் இந்த விஷயத்தில் மிகவும் proactive -ஆக இருப்பது கண்கூடு. 1950- ஆம் ஆண்டில் சண்பகம் துரைராஜ் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ராமணப் பெண்  சென்னை உயர் நீதி மன்றத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஒரு வழக்கு தொடுக்கப்படுகிறது. பொதுவாக, கல்லூரியில்  – பெயரளவிலாவது – பயிலப் போகும் மாணவர்களின் பெயரில் இம்மாதிரி வழக்குகள் தொடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு யாரோ ஒருவர் – மருத்துவப் படிப்போடு தொடர்பேதுமில்லாதவர் – வழக்கு ஒன்று போடுகிறார். ஸ்ரீனிவாசன் என்ற பொறியிய்யல் மாணவரும் இது போன்ற ஒரு வழக்கைத் தொடுக்கிறார், நீதியரசர் S.R.Das – அவர் சாதி என்ன என்பதை இங்கே குறிப்பிட்டால்தான் எல்லோருக்கும் தெரியுமா, என்ன..? – உடனே அந்த வழக்கை எடுத்து, எடுத்த வேகத்தில் இட ஒதுக்கீட்டிர்கு எதிர்ப்பான தீர்ப்பை அ(ழி)ளிக்கிறார். வழக்கு உச்ச நீதி மன்றத்திற்கு செல்கிறது. அங்கே உள்ள ‘பென்ச்’சில் ஒரு நீதியரசர் மட்டும் இஸ்லாமியர்; மற்றவர் வழக்கம்போல். ஆகவே அங்கும் அதே தீர்ப்பு. இதிலும் ஒரு நல்லது நடந்தது. இத்தீர்ப்புகளுக்கு எதிராக பெரியாரால் தமிழ்நாட்டில் எழுந்த போராட்டமும், தில்லியில் அம்பேத்காரின் முயற்சியாலும் இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டமாக மாறிற்று. நன்றி அந்தப் பெண்மணிக்கு; வழக்கில் தொடர்புள்ள அத்தனை நீதிபதிகளுக்கும்தான்!

அன்று நடந்தது இன்றும் தொடர்கிறது. 2005-ல் நடந்த இனாம்தார் வழக்கில் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கூடாது என்றும் நம் நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். சொந்தக் காசில் கல்லூரி நடத்துகிறார்கள் என்ற கோஷம் அவ்வப்போது வரும்.  ஆனால் வசதியாக, கல்விக்கூடங்களை நடத்துவதால் – அதுவும் இப்போதெல்லாம் அதுவும் ஒரு வியாபாரம்தான் என்பது யாருக்குத்தான் தெரியாது – கல்லூரி நிர்வாகிககளுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் பல உதவிகள், சலுகைகள் ( tax exemption on land, buildings, vehicles; exemption from land ceiling etc..etc..) மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்துதான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள் நம் நீதியரசர்களும், ஏனைய தனியார் கல்லூரிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களும்.
¼br /> இட ஒதுக்கீட்டை அனுமதித்தால் சமத்துவம் (equality) இல்லாமல் போய்விடும் என்று முற்படுத்திக்கொண்டோர் சொல்லுகிறார்கள். அதுவும் அவர்களது ‘விளக்குமாறு போராட்டத்தில்’ இந்த ‘வசனம்’ அடிக்கடி பலர் வாயிலிருந்தும் வந்தது. சமூகத்தில் சமத்துவம் உள்ளதா? இல்லாமலிருப்பின் அதற்குரிய காரணிகள் என்ன? யார்?  சமூகத்தில் சமத்துவத்தை மறுப்பவர்கள், சமத்துவம் பிறப்பிலேயே இல்லை என்பவர்கள் கல்வி வாய்ப்பில் சமத்துவம் பேசுகிறார்கள். சமூகத்தில் சமத்துவத்தைக் கொண்டு வருவதற்காகத்தானே கல்வியில் முடக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதுள்ளது.  இந்திய சமூகத்தில் 5% மட்டுமே ப்ராமணர்கள்; ஏனைய முன்னேறிய பிரிவினர்களையும் சேர்த்தால் இவர்கள் மொத்தம் 15% மட்டுமே. சமூகத்தில் இருக்கும் மக்களுக்கு அவரவர் மக்கள் தொகைப்படி ‘விகிதாச்சார இட ஒதுக்கீடு’ (proportional reservation) செய்திருந்தால்  இன்று இவர்கள் 75முதல் 85% விழுக்காடு வரை ஆக்கிரமித்து இருக்க முடியுமா? ( எங்களிடம் ‘திறமை’ இருந்ததால் மேலே வந்தோம் என்று யாரும் இந்த இடத்தில் சொல்ல நினைத்தால் கொஞ்சம் பொறுங்கள்.)
¼br /> வேறொன்றுமில்லை. ஓரளவேனும் இருக்கும் இப்போதைய இட ஒதுக்கீட்டினால் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இதனால்,இட ஒதுக்கீட்டையே ஒழிக்க முயலுகிறார்கள். முற்படுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது முன்னேற்றம் என்ற “நல்லெண்ணமே” இதற்கெல்லாம் காரணம். ஓட்டப் பந்தயத்தில் தனக்கு முந்திய இடத்தில் இருப்பவனை முந்துவதே  ஒவ்வொரு ஓட்டப் பந்தயக்காரனின் முனைப்பாக இருக்கும். ஆகவேதான் சாதித் தரவரிசைகளில் கடைசிப் படிக்கட்டில் வைக்கப்பட்ட தலித்துகளின் முன்னேற்றம் அவர்களுக்கு சற்றே மேற்பட்ட படியில் வைக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது. இவர்கள் எல்லோரும் ஓரளவாவது முன்னேறுவது இதுவரை முதலிடத்தில் இருப்பவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது.
 

  ***பின் குறிப்பு:
*** நீதி மன்றத்தில் நீதியரசர்களாக இருந்தவர்கள் மொத்தம் 270; அதில் பிற்படுத்தப்பட்டோர் நான்கு பேர் மட்டுமே; தாழ்த்தப்பட்டோர் யாருமே இல்லை. – இந்தத் தகவல் தவறு. 4 தாழ்த்தப்பட்டோர் நீதிபதிகளாக இருந்துள்ளனர். அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் என்று தவறான தகவலை (திசைகள் இதழில்) கொடுத்தமைக்கு மிக வருந்துகிறேன். ஆயினும், நீதிமன்றத்தைப் பொருத்தவரையில் நான் சொன்ன கருத்துக்களில் மாற்றமில்லை – சில  வழக்குகளில் உயர் நீதி மன்றம் இட ஒதுக்கீட்டுக்குச் சார்பாக நீதி வழங்கியிருப்பினும்.

166. சாதிகள் இருக்குதடி பாப்பா..3

இட ஒதுக்கீட்டுக்காகப் போராடும் மக்கள் எப்படிப்பட்டவர்களை எதிர்த்து போராட வேண்டியதுள்ளது என்ற நிலைப்பாட்டினை புரிந்துகொள்ள இக்கட்டுரை சிறிதாவது உதவும் என்ற நம்பிக்கையில்… 

 

‘சாதிகள் இருக்குதடி பாப்பா’ என்ற இந்தத் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்று ஜூலை மாத “திசைகள்” இணைய இதழில் வெளி வந்துள்ளது. அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களில் அதனைத் தொடர்ந்த விவாதங்கள் இடம் பெற்றுள்ளன.

மீண்டும் மீள்பதிவாக அதன் ஒரிஜினல் வடிவில் பின்பு தருவதாக நினைத்துள்ளேன். ஆயினும் அதற்கு முன்பாக முக்கியமாக உங்களைச் சேரவேண்டுமாய் நான் நினைப்பதைத் தனித்தனிப் பதிவாக பதிக்க எண்ணி, அதன் இரண்டாம் பதிவாக அக்கட்டுரையின் 5-ம் பகுதியைச்  சில கூடுதல்களோடு  இங்கு தருகிறேன்.

 

                                                 V. ஐந்தாம் பகுதி

                                                தற்போதைய நிலை:

 

 

நம் அரசுகள் பார்க்காத போராட்டங்களா? நினைத்திருந்தால் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இந்த ‘விளக்குமாறு போராட்டங்களை’ எளிதில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். மனமிருந்தால் வழியிருந்திருக்கும்.  அதை விட்டு விட்டு, கண்காணிப்புக் குழு, அறிஞர் குழு என்றெல்லாம் அமைப்பது நமது நாட்டு அரசியல்வாதிகள் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு விஷயத்தை இழுத்தடித்து, பிரச்சனையையே மக்களை மறக்க வைக்கும் ஒரு டெக்னிக்தானே!
இப்போதே பல உயர் கல்வி நிலையங்களில் நுழைவுத் தேர்வு முடிந்து விட்டது என்ற காரணம் சொல்லி 2006-2007-ல் இட ஒதுக்கீடு இல்லையென்றாகி விட்டது.அடுத்த ஆண்டுக்கு இன்னும் எத்தனை எத்தனை நொண்டிச் சாக்குகளோ?

அதோடு முற்படுத்திக் கொண்டோரிடமிருந்து பிறந்து அரசால் தத்து எடுத்துக் கொள்ளப் பட்டுள்ள இன்னொரு ‘பரிந்துரைப்பு’ – உயர்கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையை அதிகப் படுத்துவது. சும்மா சொல்லக் கூடாது – இது ஒரு நல்ல ராஜதந்திரம்.  கீழ்க்கண்ட கணக்கு அதைத் தெளிவுபடுத்தும்.
 தற்போது I.I.T.களில் உள்ள மொத்த இடங்கள்  : 4000
54% இட அதிகரிப்பில் கூடும் இடங்கள் :  2160
ஆக மொத்த இடங்கள் :  6160
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு    (4000ல்  27%) : 1080
தாழ்த்தப்பட்டவர்களுக்கு – SC (4000ல் 15%) :  600
தாழ்த்தப்பட்டவர்களுக்கு – ST (4000ல்  7.5%) : 300
B.C. + S.C. + S.T. 27%+15%+7.5%) : 1980

-  இது மொத்த 6160 இடங்களில் வெறும் 32%. 

அதாவது ஏற்கெனவே உள்ள 49.5% யை வெறும் 32% ஆக மாற்றும் நல்ல ராஜதந்திரம். மீதியுள்ள 68% (51%க்குப் பதிலாக) விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு! இது மட்டுமின்றி இப்படி 54 விழுக்காடு சீட்டுகளை அதிகப்படுத்துவதற்காக மத்திய அரசு பல நூறு கோடி ரூபாய் செலவழிக்கவேண்டும்; ஆகவே, இதுபோல் சீட்டுகளை அதிகமாக்கத் தேவையில்லை; அதனால், இந்த உயர் கல்வி நிறுவனங்கள் இப்போது உள்ளதுபோலவே தொடரவேண்டும் என்பது விளக்குமாற்றுப் போராட்டக்காரர்களின் இன்னொரு விவாதம். இந்தக் கருத்தையே, India Today தன் ஜுலைமாத இதழில் cover story-யாக  எழுதியுள்ளது.

ஏன், அதற்குப் பதிலாக இப்போது இருக்கும் சீட்டுக்களை இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டுவந்தால் மட்டும் போதும் என்ற முடிவைக்கூட எடுக்கலாமே! எதையாவது சொல்லி, செய்து “தரமற்ற” மற்றவர் யாரும் தங்கள் “சாம்ராஜ்ஜிய எல்கைகளுக்குள்” வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணமே இவ்வளவுக்கும் காரணம்.

 

நம்ப முடிகிறதா…??
மேலே சொன்ன ராஜதந்திரம் போன்ற திறமைகளுக்குப் பஞ்சமேயில்லை நம் விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு! இதை விடவும் சட்டத்தை எப்படி தைரியமாக, தந்திரமாக, வெளியே தெரியாதபடி (கமுக்கமாக) தங்களுக்குச் சாதகமாக முறியடிக்கும் trickery-யை இன்னொரு உதாரணம் மூலம் பார்க்கிறீர்களா? இதோ அந்தச் சாதனை……..

I.A.S., I.P.S. என்பதற்கான UPSC தேர்வுகள் எந்தக் குழறுபடி இல்லாமல், ஊழல் இல்லாமல் மிகச் சரியாக சிறப்பாக நடந்து வருவதாகத்தான் நானும் பலரைப்போல் நினைத்திருந்தேன் – இந்த வழக்கைப் பற்றிக் கேள்விப்படும்வரை.

Prelims, Mains தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் பின் நடக்கும் நேர்முகத்தேர்வில் பெறும்  மொத்த மதிப்பெண்களை வைத்து rank செய்யப் பட்டு அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை OC (open competition) -ல் சாதி எதுவும் பார்க்காது தேர்ந்தெடுக்க வேண்டும். OC quota  முடிந்தபின் B.C., S.C., S.T. என்ற சாதிவாரியான மாணவர்களை அவர்களது rankபடி தேர்ந்தெடுக்க வேண்டும்.இதுவே முறை. ஆனால் எத்தனை ஆண்டுகளாகவோ தெரியாது; என்ன நடந்திருக்கிறது என்றால் O.C.  என்றால் (F.C. என்ற கணக்கில்) அது முற்படுத்திக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே உரியது போல், top rankers-ல் உள்ள Forward Community மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு, மற்ற சாதி அடிப்படையான இடங்களுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்களிலிருந்து  தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். They were hoodwinking everybody and kept their portal safe and secure. இதனால் பிறபடுத்தப் பட்டோர் 25%க்கு மேலும், தாழ்த்தப்பட்டோர் மொத்தமே 18%க்கு மேலும் வரமுடியாது. இது ஒரு பயங்கர மோசடி.
கதைபோல் தெரிகிறதா? எனக்கும் அப்படியே தோன்றியது. எப்படி இப்படிப்பட்ட உயர் அமைப்புகளில் விதிகளை இந்த அளவு மீறி (trickery and violation of law) தைரியமாக மிக மிக அநியாயமான ஒரு செயலைச் செய்திருக்க முடியும் எனபது ஆச்சரியமாகவும் கவலைக்குறிய ஒன்றாகவும் இருக்கிறது. எத்தனை பேரின் கூட்டில் இந்தச் சதி நடந்திருக்க முடியும்? இதை எப்போது நம்ப முடிந்தது என்றால்…  

நம்பித்தான் ஆகவேண்டும்…!!
க்ளீட்டஸ் என்பவர் UPSC தேர்வுகள் எழுதி GRADE I Officer ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், நடந்தவைகளை வைத்து CAT -Central Administration Tribunal -க்கு ஒரு Original Application ( O.A. – this is equivalent to writ petition )  கொடுத்தார். அஜ்மல்கான் என்ற வழக்கறிஞர் இதை க்ளீட்டஸுக்காக வாதாடினார்.    நீதிபதி திருமதி பத்மினி ஜேசுதுரை இவ்வழக்கில் UPSCக்கு எதிரான தீர்ப்பளித்தார். இதன் பிறகு விதிகள் கடைப்பிடிக்கப் படுகின்றன என நம்பப் படுகிறது. இது எப்படிப்பட்ட வடிகட்டிய அநியாயம் என்பதை இந்த வழக்கைப் பற்றி அறிந்த போது உணர்ந்தேன். ஆனால் இப்படி ‘வடிகட்டிய’ போதும் வெற்றி பெற்ற B.C., S.C., S.T.மாணவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவ்வளவு தடைகளையும் மீறி அவர்கள் பெற்ற வெற்றி அவர்களின் தகுதியின் தரம் பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெளிவாக்குகிறது.

இப்படி நான் ‘திசைகளில்’ எழுதியபோது ரவி சிரினிவாஸ் என்ற பதிவர் ஒருவர் கீழ்க்கண்ட விளக்கம் – UPSC தேர்வுகள் எவ்வளவு சரியாக நடந்து வருகின்றன என்பதைக் காட்ட – ஒரு statistical data ஒன்றைக் கொடுத்தார். ஆனால், அந்த statistical dataவே ஒரு தவறான தகவல்; யாரை ஏமாற்ற இப்படி ஒரு தகவலை அளித்துள்ளார்கள் என்ற என் கேள்வியை அவர்முன் வைத்தேன். அந்தக் கேள்வி பதில்கள் இங்கே:

ravi srinivas said…
http://upsc.gov.in/general/civil.htm#CS (Main)
Statistical Data – CS (Main)

Year Of Exam Vacancies Candidates Recommended
SC ST OBC GEN TOTAL SC ST OBC GEN TOTAL
1995 98 49 165 333 645 101 49 192 303 645
1996 125 57 174 383 739 138 59 212 330 739
1997 89 43 166 323 621 94 46 215 266 621
1998 53 28 114 275 470 60 30 142 238 470
1999 53 27 97 234 411 63 30 127 191 411
2000 54 29 100 244 427 58 34 128 207 427
2001 47 39 97 234 417 52 42 131 192 417
2002 38 22 88 162 310 38 22 88 138 286

 

This is the information from UPSC website.Please compare the % of OBCS with what he has written.27% quota is filled and OBCs get more
than 27%.In other words OBCs get selected in general or open quota
also.I wont be surprised if Dharumi comes up another cock
and bull story to justify what
he written.That is his wont.

என் பதில்:

//OBC Quota is 27%// – Accepts r.s.
The following is just a part of the table provided by r.s.. I have taken OBC and the total vacancies and I have worked out the percentage.

year OBC TOTAL %
1995 165 645 25.5
1996 174 739 23.5
1997 166 621 26.7
1998 114 470 24.3
1999   97 411 23.6
2000 100 427 23.4
2001   97 417 23.3
2002   88 310 28.4

How come UPSC had it always less than 27% except for 2002?
How come it swings only between 23-24% mostly?
MAY I HAVE YOUR ANSWER
SPECIFICALLY FOR THIS, MR. R.S?
———————————–

The % of ‘candidates recommended’ goes like this with the concerened years in brackets: 27.9%(1995); 28.6(1996); 34.6% (1997 & 98); 30%(1999); 31% (2000 &2001); 30% (2002).
Just 3% OBC candidates have found place in GEN Quota.
Mathematically it shows that top ranking OBCs have been added in the GEN. But is it justifiable to argue that only 3% OBC candidates stood at par with the GEN category and still claim that top OBCs were included in the GEN category. This is what I called hoodwinking.

============================================================

திசைகள் கட்டுரை மறுபடியும் தொடர்கிறது:

ஆனாலும் இப்போதும் இன்னொரு தடைக்கல் இருப்பதாக நண்பர்கள் மூலமாக அறிகிறேன்: Prelims, Mains – இவைகளில் தேர்வு பெற்று நேர்முகத் தேர்வுக்குப் போகும்போது மாணவர்களை random-ஆக interview boards-ல் ஏதாவது ஒன்றிற்கு அனுப்புவதே சரி. அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களது சாதி பற்றிய விவரங்கள் ஏதுமின்றி நேர்முகத் தேர்விலும் அவர்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்பதே சரி.Prelims, Mainsதேர்வுகளில் மாணவர்களின் தனி அடையாளங்கள் எப்படி திருத்துபவர்களுக்குத் தெரியாதோ அதே போலத்தானே  நேர்முகத் தேர்விலும் இருக்க வேண்டும். pedagogical principlesகளில்  ‘halo effect’ என்று ஒன்று சொல்வார்கள். மாணவனைப் பற்றிய எவ்வித முன்முடிவுமின்றி அவனது தேர்வுத்தாள் திருத்தப்பட வேண்டும்; இல்லையெனில் மனித மனம் முதலில் மாணவன் மீது திருத்துபவர் கொண்ட முடிவின்படி மதிப்பீடு செய்யும் தன்மை கொண்டதே என்பது இந்த  ‘halo effect’ .
UPSC நேர்முகத் தேர்வுகளில் முதலில் OC. மாணவர்கள் தொடர்ந்து அனுப்பப் பட்டு  அதன் பின் ..B.C.,… S.C….. S.T….என்று சாதி வாரியாக வரிசைப்படுத்தப்பட்டே அனுப்பப் படுகிறார்களாம். தேர்வாளர்களாக இருப்பவர்களில் இன்றைய நிலையில் யார் பெருவாரியாக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இம்முறையினால் நேர்முகத் தேர்வுகள்  ‘halo effect’  இல்லாமல் நேர்மையாக இருக்குமா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

இப்படி நான் எழுதியதும் மறுபடி சிரினிவாஸ்:
//இட ஒதுக்கீடு எப்படி அமுல் செய்யப்பட வேண்டும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு எப்படி தரப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான,விரிவான விதிமுறைகள் உள்ளன. தருமி இந்தப் பிண்ணனித் தகவலை தரவேயில்லை.மாறாக ஊர்ஜிதப்படுத்தபடாத செய்திகளை ஆதாரமாகக் கொண்டு எழுதியிருக்கிறார்.// என்றார்.
நான் கேள்விப்பட்டதை வைத்தே இந்தக் குற்ற༯p>

165. சாதிகள் இருக்குதடி பாப்பா..2

‘சாதிகள் இருக்குதடி பாப்பா’ என்ற இந்தத் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்று   ஜூலை மாத “திசைகள்” இணைய இதழில் வெளி வந்துள்ளது. அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களில் அதனைத் தொடர்ந்த விவாதங்கள் இடம் பெற்றுள்ளன.

மீண்டும் மீள்பதிவாக அதன் ஒரிஜினல் வடிவில் பின்பு தருவதாக நினைத்துள்ளேன். ஆயினும் அதற்கு முன்பாக முக்கியமாக உங்களைச் சேரவேண்டுமாய் நான் நினைப்பதைத் தனித்தனிப் பதிவாக பதிக்க எண்ணி, அதன் முதல் பதிவாக அக்கட்டுரையின் முடிவுரையை சில கூடுதல்களோடு முதலில் இங்கு தருகிறேன்.

VI. ஆறாம் பகுதி

முடிவுரை: 

 ப்ராமணர்களை ‘வந்தேறிகள்’ என்கிறார்கள் ஒரு பிரிவினர்; இன்று human genomics பற்றிய ஆராய்ச்சிகளின் மேற்கோள்களோடு “நாம்’ அனைவரும் ஒரே RACE என்கிறார்கள். (ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்? )இன்னொரு பிரிவினர். ஆனால்,  “திராவிட, ஆரிய பிரிவு என்பது கருத்தியல் ரீதியாக, சமூக ரிதியாக இருப்பதை” மறுக்க முடியாது – (போனபார்ட்)  “Sharing a haplotype/genotype with other populations in the world doesn’t mean that your forefather(s) and the other population’s forefather(s) (don’t get it mixed up with the primordial archetype here, we’re talking about ‘modern man’ ;-)   are/were 100% genetically identical.-( சன்னாசி)- இது போன்ற மாற்றுக்கருத்துக்களும் உண்டு.
இப்படி இரு வேறு கருத்துக்கள் இருப்பினும், நம் ஒவ்வொரு சாதியின் ‘gene pool’ ஒன்றும் water tight compartments இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே நிலப்பரப்பில் வாழும் எந்த உயிரினங்களுக்குள்ளும் (different communities of the same species) genetic exchange நடந்தே தீரும் என்பது மறுக்க முடியாத உண்மை. There are no biological barriers – free flow of genetic exchanges should have been the norm. இங்கே என்னதான் சாதிப் பிரிவினைகள் என்ற கோடுகள் போட்டு  மக்களைப் பிரித்து  வைத்திருந்தாலும் , பாலுணர்வுக்கு ஏது வரைமுறைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது நடந்திருந்தாலும் ஒவ்வொரு சாதிக்குறிய gene pool 100% purity-யோடு இருக்க சாத்தியமேயில்லை. 3000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன என்பதை விடவும், அதன் பின் நடந்திருக்கக் கூடிய இனக் கலப்பு – genetical outbreeding (இங்கு outbreeding என்பது species விட்டு species என்ற பொருளில் இல்லை; caste மாறி caste என்ற பொருளில் கொள்க.) நம் எல்லோரையும் ஒரே genetic pool-யைச் சேர்ந்தவர்களாக ஆக்கியுள்ளது என்பதே இன்றைய human genomics பற்றிய ஆராய்ச்சிகளின் முடிவுக்குக் காரணமாக இருக்க முடியும். 

நடுவில் ராமானுஜர் தாழ்த்தப்பட்ட சாதியினரை ‘முற்படுத்திய’ வரலாறு வேறு உண்டு. இப்படி வழியில் எவ்வளவோ!

aryan invasion is a myth என்று சொல்பவர்களுக்கு: வந்தேறிகள் என்று அழைக்கப்படும் போது வருந்திய, கோபமுற்ற முற்படுத்திக் கொண்டோர் இப்போது DNA கூற்றினை உண்மையென ஒத்துக்கொள்கிறார்களா? ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற தத்துவத்தை ஒப்புக்கொள்கிறார்களா? அப்படியாயின், சானாதன தர்ம நம்பிக்கையைக் கை கழுவுகிறார்களா? வர்ணாச்சிரம் என்று ஒன்றுமில்லை; ‘ஏற்றத் தாழ்வு சொல்லல் பாவம்’ என்ற கொள்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? ப்ரம்மனின் பல்வேறு anatomical parts-களிலிருந்து ஜாதிகள் உருவாகின என்ற தத்துவங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுமா?

ஏன் இன்னும் சாதிகளைக் கட்டிக்கொண்டு அழுகிறோம்?! நம் DNAக்களில் இருக்கும் ஒற்றுமைகளை நாம் புரிந்து கொள்ளப் போகும் காலம் எப்போது? விளக்குமாறே உன் கதி; உன் தொழில் என்ற தள்ளப்பட்டு சமூகத்தின் கடைசியில் நிற்கும் ஒருவருக்கும், ஒதுக்கீட்டிற்கு எதிராகப்  ‘போராளி’யாய் இன்று தெருவில் விளக்குமாறோடு நிற்பவருக்கும் என்ன வேறுபாடு? இரண்டு பேருமே சொந்தக்காரர்கள்தானே! அண்ணன்-தம்பிகளோ, மாப்’ள-மச்சான்களோதானே!

50, 60 ஆண்டுகளுக்கு முன்பு இது ‘சாதிப்புத்தி’ என்று ஒவ்வொரு சாதிக்கும் சில ‘பண்பு நலன்களை’ (??!!)க் கூறுவதுண்டு. இன்று அந்த மாதிரியான பேச்சு ஒருவாறு  குறைந்து வந்து  கொண்டிருந்தது. இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனைகள் நம்மை  மறுபடியும்  50-60 ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்கு கொண்டு போய்விட்டது.¼br /> இன்னும் 2000-3000 ஆண்டுக்கதைகள் எதற்கு? கடந்த 50-100 ஆண்டுகளில் எல்லோருக்கும் பொதுவான வசதி வாய்ப்புகளைப் பெரு வாரியாக ஒரு சிலர் அடைந்து விட்டனர். சாதியின் பெயரில், சாதி உயர்வு சொல்லி அதனால் வந்த வாய்ப்புகள் ஒரு சிலருக்கே கிடைத்து வந்திருக்கிறது. சாதிப் பிரிவினைகளை மட்டுமே வைத்து வந்த வாய்ப்புகள் அவை. வேறு எந்த காரணமுமில்லை.   திறமை நம் எல்லோருக்கும் உண்டு.  இனியாவது வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்; உருவாக்க வேண்டும். ஏற்கெனவே பலன்களை corner செய்துகொண்டவர்கள்தான் இதற்காக முதலில் நேசக்கரம் நீட்ட வேண்டும்; இனியாவது எல்லோரும் முன்னேறினால்தான், எல்லோரையும்  முன்னேற்றினால்தான்  அது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது; அதுவே முறையானது; மனிதத்தனமானது  என்ற உணர்வு வரவேண்டும். வருமா..?

 B.C., S.C., S.T., – இவர்களுக்கு ஒரு வார்த்தை:

சமூக நீதி கிடைக்கப் பெறுவதற்குரிய வரலாற்றின் ஒரு திருப்புமுனைக் கட்டத்தில் இருக்கிறோம். (இதுவரை சமூக நீதி என்ற பெயரில் நடந்துவந்துள்ள போராடங்களையும், பித்தலாட்டங்களையும் பற்றிப் பிறகு பார்ப்போம்.) பலருக்கும் இட ஒதுக்கீடு, அதனைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான கல்வி, வேலைகளில் இட ஒதுக்கீடு பற்றிய  புரிதல் இல்லாமல் உள்ளது; அதனை ஒட்டி நடக்கும் போராட்டங்கள் யாருக்காகவோ, எதற்காகவோ நடப்பது போல் பலரும் இருப்பதாகவே படுகிறது. புரிந்து கொள்வதும், புரியாதவருக்குப் புரிய வைப்பதும் இன்றைய கால கட்டத்தில் ஒரு கட்டாயத் தேவை.

புரிந்தவர்கள், சமூக, பொருளாதார தளங்களில் மேலே வந்து விட்டவர்கள், படித்தவர்கள் – இப்படிப் பலரும் சாதிகளைப் பற்றிப் பேசுவதே தவறென்று நினைத்துக் கொண்டு, தங்களைப் புனித பிம்பங்களாக கருதிக் கொண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு வலு சேர்க்காதது பெரும் தவறு. எதிர் காலம் அவர்களைக் குற்றம் சொல்லும்.

164. சாதிகள் இருக்குதடி பாப்பா..1

    

இந்தத் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்று   ஜூன் மாத “திசைகள்” இணைய இதழில் வெளி வந்துள்ளது. அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களில் அதனைத் தொடர்ந்த விவாதங்கள் இடம் பெற்றுள்ளன.

மீண்டும் மீள்பதிவாக அதன் ஒரிஜினல் வடிவில் பின்பு தருவதாக நினைத்துள்ளேன். ஆயினும் அதற்கு முன்பாக, The Hindu-ல் வந்த இக்கட்டுரை நான் சொன்ன பல கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதாலும், சான்று தருவதாலும் அதனை முதலில் இங்கு அளிக்கிறேன். நீளமான ஆங்கிலப் பதிவைப் படிக்க நேரம் இல்லாதவர்களுக்காகவே சில வரிகளை சிகப்பெழுத்தில் தந்துள்ளேன். அவைகளைப் படித்தாலே கட்டுரையின் மையக் கருத்துக்களைப் புரிந்து கொள்ள இயலும்.

என் கட்டுரையை இரண்டு மூன்றாகப் பிரித்து மீள்பதிவாக பின்னால் இடுகிறேன்.

இக்கட்டுரை தொடர்பான பின்னூட்டங்களில்  பெயரில்லாமல் வரும் பின்னூட்டங்களை வெளியிடும் எண்ணம் இல்லை.

 

  

Date:07/07/2006 URL: http://www.thehindu.com/2006/07/07/stories/2006070703771000.htm


          

OpinionLeader Page Articles

Who is perpetuating reservation in jobs?

Sharad Yadav

In a bizarre turn, the Union Public Service Commission and the Department of Personnel and Training have transformed the policy of reservation into a policy of communal awards. They have treated general seats as seats reserved for people belonging to non-reserved categories.

 

 

WHENEVER THERE is talk about reservation, the bogey of merit is raised by opponents of this policy. But the question arises: do the opponents respect the merit of candidates from the Other Backward Classes (OBCs) and the Scheduled Castes (SCs) and the Scheduled Tribes (STs)? Empirical studies suggest they do not. Almost six decades have passed since Independence but all important institutions of India, barring Parliament and Legislative Assemblies and Councils, have been under the strong command of these self-styled votaries of merit. With some exceptions, they have abused their position to denigrate the merit of the people who have been given the constitutional right of reservation — so that privileges enjoyed by some people under the caste system are de-reserved.

The Union Public Service Commission provides glaring examples of how the merit of candidates belonging to SCs, STs, and OBCs is denigrated. The UPSC is a constitutional body. It commands high respect in India but in collusion with the Department of Personnel and Training (DoPT), it has been denying the rights of meritorious candidates belonging to reserved categories. It has been indulging in unconstitutional activities despite the clear-cut policy of the Government of India on reservation. The Supreme Court and High Courts have interpreted the policy in many judgments. There is no scope for any ambiguity regarding this policy, but the UPSC has continued to deny meritorious candidates of reserved categories the right to join the civil services as general category candidates.

This has resulted in a denial of jobs to hundreds of succcessful candidates belonging to reserved categories; and almost the same number of candidates belonging to the non-reserved category has got jobs, without being declared successful by the UPSC at the time of declaration of results. This is happening despite many judgments of the higher judiciary against the practice. People controlling the UPSC and DoPT are so strongly motivated against the candidates of reserved categories that they can go to any extent in their adventure to block the entry of reserved categories in the civil services.

Under the reservation policy, 49.50 per cent of the seats is reserved. The remaining 50.50 per cent is open to all. Candidates who qualify for the civil services by dint of their merit alone should be enlisted in general open categories. After all, there is no bar on SC and ST candidates fighting elections for general seats. Many leaders, including Kansi Ram and B.P. Maurya, have fought and won from general seats. General seats do not mean seats reserved for people belonging to non-reserved categories. Similarly, general open seats in the civil services are not reserved for people belonging to non-reserved categories. The Government of India has not reserved hundred per cent of the seats of the civil services. In fact, it cannot do so. There is a 50 per cent ceiling placed on reservation by the Supreme Court. But in effect, the UPSC and the DOPT are implementing reservation policy to ensure 50.50 per cent reservation for the unreserved categories that are supposed to form just 15 per cent of the Indian population.

For the last civil services examination, around 214 of 425 seats were general open merit seats. Out of the first 214 candidates, 50 were from reserved categories. Forty of them were from OBCs. But the UPSC refused to allow reserved category candidates to enlist themselves as general candidates. Twenty seven per cent of 425 is 117: this is the exact number of candidates belonging to OBCs who were declared successful. Even those in the top 10 were classified as reserved category candidates!

By doing this, the UPSC has denigrated meritorious candidates from the reserved categories. It has also denied jobs in the civil services to an equal number of reserved category candidates. In fact, 157 candidates from OBC categories should have been selected: 40 on the basis of merit and 117 on the basis of the 27 per cent reservation extended to them.

People belonging to SCs and STs in the early days of the Republic lacked education. Their number was not sufficient to fill the vacancies declared for them. Later on they picked up but there were all-out efforts to deny them their right to reservation under one pretext or another. If we analyse the data on successful ST and SC candidates, we discover they have done better in the written test, where the examiner does not know their caste. In the interviews they have been given fewer marks because people in the interview board know their caste.

It is shocking that candidates belonging to reserved categories are interviewed separately. They sit for the written examinations alongside non-reserved category candidates, but when the time of interview comes, they are segregated. The interview board is well aware of their social background and discriminates against them while giving them interview marks. An analysis of the results reveals a big gap between the average interview marks given to reserved category candidates and non-reserved category candidates. One successful candidate of the 1996 civil service examinations, who was denied a job, has calculated these averages on the basis of information available with him. Since he fought for his job in the Supreme Court and won, the data he offers can be relied upon in the absence of authoritative data provided by the UPSC. According to this candidate, the average interview mark in the non-reserved category is around 200, while the average for reserved categories candidates is 140. I believe that if there were no caste discrimination, the number of successful OBC candidates in the general merit category would have been much higher than 40. Unfortunately, even these 40 candidates were not declared successful in the general merit category.

The concept of excluding the creamy layer sounds progressive. Indeed the benefit of reservation should be made available to people from less privileged OBC families. In principle this is all right. But the design of those opposed to OBC reservation is to keep the creamy layer out of the reservation ambit and deny the benefits of reservation to less privileged individuals. These individuals have no means of fighting the might of the UPSC and the DoPT. They have no money to engage lawyers to fight legal battles. It is quite easy to deny them their right. So they are denied jobs despite getting letters from the UPSC informing them of their success. My information is that thus far 390 successful candidates have been denied jobs in the civil services. Some of them, who have had resources thanks to being in other services, have challenged the DoPT successfully. But what about those who have not moved the courts? Why can’t the courts take suo motu notice of such gross denial of justice?

Babasahib Bhim Rao Ambedkar was for separate electorates for Dalits. He wanted proportionate reservation for them but also demanded that their representatives should be elected from an electoral college comprising Dalits exclusively. Separate electorates for Dalits were termed the communal award. Gandhiji and many other leaders thought such an arrangement would divide India; he went on a fast and Dr. Ambedkar withdrew his demand. The policy of reservation was put in place so that those hailing from reserved categories could contest elections from unreserved seats also.

The same rule applies to jobs. But the UPSC has turned the policy of reservation into a policy of communal awards. I cite below some judgments of Indian courts that are being consistently violated by the UPSC and the DOPT:

(a) India Shawnee v. Union of India, 1992 Supp. (3) SCC 217

“In this connection it is well to remember that the reservation under Article 16(4) does not operate like a communal reservation. It may well happen, that some members belonging to, say, Scheduled Castes get selected in the open competition field on the basis of their own merit; they will not be counted against the quota reserved for Scheduled Castes; they will be treated as open competition candidates.”

(b) Union of India vs. Virpal Singh Chauhan (1995) 6 SCC 684

“While determining the number of posts reserved for SCs and STs, the candidates belonging to the reserved category but selected on the rule of merit (and not by virtue of rule of reservation) shall not be counted as reserved category candidates.”

(c) Rithesh. R. Shah’s case (1996) 3 SCC 253

“In other words, while a reserved category candidate entitled to admission on the basis of his merit will have the option of taking admission to the colleges where a specified number of seats have been kept reserved for reserved category … while computing the percentage of reservation he will be deemed to have been admitted as a open category candidate and not as reserved category candidate.”

In a Delhi High Court judgment of April 29, 2003, the division bench made the following observation: “The decision of the Apex Court in Rithesh. R. Shah’s case (supra) as also the proviso to rule 16 clearly prohibit deprivation of the benefit of the reservation only because some reserved category candidates had also been selected on merit inasmuch as they were not to be treated as reserved category candidates except for a limited purpose, namely, for the purpose of allocation of service, but thereby OBC candidates cannot be deprived of their right to obtain allocation of any service.”

The interesting question arises: who is perpetuating reservation? If people from the SCs, STs, and OBCs get representation according to their population, the scheme of reservation will come to an end. But who is depriving the meritorious from getting jobs as general category candidates?

(The author, a Member of the Rajya Sabha, is president of the Janata Dal (United) and a former Union Minister. He was educated to be an electrical engineer.)

READ THIS TOO: http://www.hindu.com/2006/07/10/stories/2006071002871002.htm

 

 

 

 

R  

163. நான் ஏன் மதம் மாறினேன்…? – 5

 

மற்றைய பதிவுகள்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 

 

இந்து மதம் – ஒரு பதில்.
இந்த சீரியல் பதிவுகள் போட்டபின் பல மாதங்கள் கழித்து இந்து மதத்தை ஏன் ‘ஆட்டைக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை’ என்ற ‘குற்றச்சாட்டு’டன்  இப்போது ஒரு பின்னூட்டம் வந்துள்ளது. அப்பின்னூட்டம் நீளமானதாகவும், என் பதில் அதனிலும் வெகு நீளமாகவும் ஆனதால் இதை ஒரு ‘பின்னூட்டப் பதிவாக’ இங்கு பதிவிடுகிறேன். தொடரின் எண்களை அதற்காக வேறு விதமாய் வரிசைப்படுத்தியுள்ளேன்.

பின்னூட்டம்:

பொன்ஸ் Says:
June 6th, 2006 at 5:19 pm e 

தருமி,
உங்க நான் ஏன் மதம் மாறினேன் 7 பாகமும் இப்போத் தான் படிச்சு முடிச்சு சுடச் சுடப் போடும் பின்னூட்டம்:

* உங்க உழைப்பு – பாராட்ட வார்த்தையே இல்லை.. இப்படிப் பட்ட பேராசிரியரோட அறிமுகமும், சரிக்கு சரியா பேசும் பாக்கியமும் கிடைச்சதுக்கு எனக்கு முதல்ல ஏற்பட்டது பெருமை தான். இந்தத் தொடர் முழுவதும் உங்க உழைப்பும், பக்குவமும் தெரியுது. ரொம்ப நல்லா இருக்கு.

* இஸ்லாமையும் கிறித்துவத்தையும் விமர்சிச்ச அளவுக்கு நீங்க இந்து மதத்தை விமர்சிக்கலைன்னு தோணுது. ஏனோ தடவிக் கொடுத்து விட்டுட்டீங்க.. இங்க இருக்கும் பிரச்சனைகளை ஏற்கனவே பல பேர் பல மாதிரி புத்தகங்களில் போட்டுட்டாங்க / வேண்டிய அளவுக்கு விமர்சிச்சிட்டிடாங்க என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். என்ன இருந்தாலும் எங்க மதத்தை நீங்க எப்படி விமர்சிக்காம, உங்க பாஷையில எங்களை மட்டும் எப்படி ஆட்டைல சேர்த்துக்காம விடலாம்?!! கொஞ்சம் கோபம் தான்

* உலகம் தழுவிய மதம்னு எதுவுமில்லை.. சரிதான்..
மதத்தைப் படைச்சது மனுஷன் .. சரிதான்..
ஆனா, மனிதம் என்னும் மதத்தைத் தழுவும் முன், மற்ற மதங்கள் தேவையா இருக்கு.
அந்த ultimate சரணாகதி நிலையை அடைபவன், மனிதாபிமானம் அல்லது இன்னும் விரிவானதா எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்வதுதான் கடவுள்ன்னு நிச்சயம் தெரிஞ்சு வச்சிருக்கான்.

நீங்க சொல்வது போல் இந்து மதம் எனக்குப் பல சமயங்களில் வெறும் சாயும் தூணா, பளுதாங்கிக் கல்லாத் தான் பயன் பட்டிருக்கு..

ஆனா, பல அறிவியல் உண்மைகளையும் மனிதவியல் உண்மைகளையும் மனிதர்களுக்குச் சுலபமாப் புரிய வைக்க மதத்தைத் தவிர வேற வழி இல்லை.

அழும் குழந்தைக்கு போலீஸ்மாமா கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்னு சொல்லி சாதம் ஊட்டுவது போல் தான். குழந்தை பெரியவன் ஆகும் போது ஒண்ணு போலீஸ் மேல பயம் போய்டும்.. தானே சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துக்கும்…  இல்லைன்னா, போலீஸ் மேல பெரிய அளவில் பயம் வரும்.. வெறுப்பு வரும். போலீஸுக்கு விரோதமா போகணும்னு தோணும்.. இது ஒரு obsession ஆகிடும்.. அவ்வளவு தான்.. தீவிர மதவாதிகள் இந்த இரண்டு திக்கில் ஒண்ணுல இருந்திடறாங்க..

போலீஸ் ஒரு கருவி தான்னு புரிஞ்சிக்கிடற குழந்தைகள், அப்படிச் சின்னவயசுல சாப்பிட உதவின போலீஸை மரியாதையா பார்க்கிறாங்க.. நன்றியோட இருக்காங்க.. தன் மக்களுக்கும் அதே சொல்லி சாப்பாடு கொடுக்கிறாங்க..
ஆக இந்த பரவச, தீவிர, தெளிவு நிலைக்குப் போகும்முன் மதம் வேணுமே? குழந்தை வளர்ந்து சாப்பிடுவதன் பெருமையை உணரும் முன்னே அதைச் சாப்பிட வைக்க போலீஸ் வேணுமே?

* அடுத்த கேள்வி, ஆதாரம்… எந்த தியரிக்கும் ஒரு base வேணும்.. அதாவது, Basic assumption… இது கடவுள் பத்தி கேள்வி கேட்கும் என் நண்பர்களுக்கு பொதுவா நான் சொல்றது..

a, b, c, dன்னு alphabets எங்கிருந்து வந்தது? இது தான் அ ந்னு சுழிச்சு எழுதினப்போ, எப்படி நம்பினீங்க? 1, 2ன்னு நம்பர்களை நம்பினாத் தானே, கூட்டல் கழித்தல்னு ஒரு கணக்குப் பாடத்துக்கு அடுத்து போக முடியும்?! சில விசயங்களைக் கேள்வி கேட்காம நம்பித்தானே ஆகணும்?

நம்மையும் மீறின ஏதோ ஒரு சக்தி இருக்கு.. அது gravitational force-o இல்லை, வேற ஏதாச்சும் attractive/repulsive force-ஆன்னு எப்படித் தெரியும்?

பொதுவா நியூட்டனோட “Every Action has equal and opposite Reaction” என்ற விதி (இரண்டாவது விதி??) எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்த reactive force-ஐ நான் பல விஷயங்களுக்குப் பொறுத்திப் பார்ப்பேன்.. எங்க வீட்டு மல்லிச் செடி கிட்ட நாளைக்கு நிறைய பூ பூக்கணும்னு சொல்லி தண்ணிவிட்டா, அதுவும் அடுத்த நாள் நல்லா பூக்கும்.. நாய் பூனை எல்லாம் நம்ம சொல்றதைக் கேட்பது ஒண்ணும் பெரிய விஷ்யம் இல்லை.. ஆனா, செடியும் பூவும் கேட்பது என்னை பொறுத்தவரை ஏதோ cosmic rays மாதிரி funda இருக்கணும்..எனக்கும் அந்தச் செடியோட எண்ண அலைகளுக்கும் நடுவில்.. – சில சமயத்தில் ஏதோ லூசுத் தனமான நம்பிக்கையா எனக்கே தோணினாலும், இதை நான் பார்த்திருக்கேன்..

சில பேரோட நமக்கு ரொம்ப சீக்கிரமா ஒத்த அலைவரிசை வந்துடும்.. பழகுதல், பேசுதல் போன்ற அவசியங்கள் இல்லாம ஒண்ணும் காரணமே இல்லாம, சிலரைப் பிடிக்கும்.. பேசின பின், பழகின பின் அந்தக் கருத்துகள் உறுதிபெறும்.. இதுக்கு என்ன காரணம்? ஏதோ ஒரு கெமிஸ்ட்ரின்னு இப்போதைய சினிமாக்களில் சொல்றாங்க.. அந்த மாதிரி ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத attractive force ரெண்டு பேருக்கும்/பொருளுக்கும் இடையில் இருக்கு.. சரியா?

அப்போ அந்த force-உக்கு ஏதாச்சும் பேர் வேணுமே?

* மத்தபடி, உங்க கட்டுரை படிச்சு எனக்கு இந்து மதத்தின் மேல மதிப்பு அதிகமாய்டுச்சு.. சாதி வேறுபாடுகளைத் தவிர்த்து இந்துமதத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. மனிதனை மனிதனா மதிக்கணும்.. ஆடு மாடுகளையும் மற்ற அஃறிணை உயிர்களையும் மதிக்கணும், பெண்களை சக்தியின் உருவமாப் பாராட்டணும் என்பன போன்ற தத்துவங்கள் ரொம்ப உயர்ந்ததா தெரியுது. கடவுளை வணங்க இதில் கூறியிருக்கும் முறைகளும், மனிதர்கள் தானே விரும்பிச் செய்வது தானே – voluntary?! தீச்சட்டி தூக்குதல், மண்சோறு சாப்பிடுதல் போன்ற சில மூட நம்பிக்கைகளை (இதுவும் இடையில் வந்ததாகத் தான் இருக்கணும்) விட்டு பார்த்தால், இந்து மதத்தின் பல்வேறு கடவுள் பூஜை சமாச்சாரங்கள், உடல் அல்லது மனப் பயிற்சியே..

* இந்து மதத்தின் அறிவியல் பத்தி ஒரு புத்தகம் படிச்சிருக்கேன்.. பிரம்மா, விஷ்ணு, சிவன், பிள்ளையார், அம்மன், முருகன் எல்லாருடைய உருவத்தையும் நம்ம உடலின் பாகங்களுக்கு ஒப்பிட்டு வரும். அந்த விதத்தில் Xray, Microscope எதுவும் இல்லாமலேயே பல அறிவியல் சமாச்சாரங்களைக் கண்டு பிடிச்சு அனாயாசமா மதத்துக்குள்ள மறைச்சு வச்சிட்டு போன நம்ம முன்னோர்கள் மேல எனக்கு ரொம்ப மரியாதை உண்டு.

* அடுத்து எந்த மதமும் செக்ஸ் பத்தி ஓபனா பேசாதேன்னு சொல்லுது.. ஆனா, மதங்களில் அவற்றைப் பற்றி மறைமுக கருத்துச் சிதறல்கள் இல்லையா? எனக்கு மற்ற மதங்களைப் பத்தி அத்தனை ஆழமாத் தெரியாது.. என்னோட மதத்தைப் பத்தி சொல்றேன்.

மாதொரு பாகன், நெஞ்சில் இலக்குமியை வைத்திருக்கும் மகாவிஷ்ணு இப்படி பல விதங்களில் மறைமுகமா செக்ஸ் பத்தியும் மதங்கள் பேசுது.. என்ன, தெளிவா பேசுவது இல்லை.. தெரிஞ்சிக்க வேண்டிய நேரத்தில் மக்கள் அதைத் தெரிந்துகொண்டால் போதும் என்பது தான் முன்னோர்களின்(கவனிக்க, கடவுளின் அல்ல  ) கொள்கை. முன்னாடியே தெரிஞ்சால் இப்போ இருப்பது போல் நோய்கள் இன்னும் அதிகமாய்டும்..

இன்னோரு உளவியல் ரீதியான வியூவும் இருக்கு.. இதுவும் சமீபத்துல படிச்சது தான். ரொம்ப அது பத்தி பேசப் பேச, கொஞ்ச நாளில் மற்றவை(உணவு, உடை) போல செக்ஸும் அலுத்துப் போய்விடும் ஆபத்து உள்ளது. மறைபொருளாக வைத்திருப்பதில், அதில் ஒரு ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும்.. That will keep the marriage bonding more thicker.

I guess its becoming too long.. ultimately,

//உன்னையும் என்னையும் ‘மனிதம் உள்ள மனிதனாக’ வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த ‘வெளிச்சத்திற்கு’(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?// — இது உண்மை

ஆனால், இந்த வெளிச்சத்திற்கு வரும் முன், மதம் தேவை.. மனிதனை ஒரு நிலைப் படுத்த, மனிதன் மனிதம் உள்ள மனிதனாக இருப்பதன் அவசியத்தை வலியுறுத்த – அன்பாலோ, கட்டாயத்தாலோ!! இன்றைய காலகட்டத்தில் மதம் தேவை.. ஆனால் இன்னும் கொஞ்சம் நாளில் உலகமயமாக்கப் பட்ட நாடுகள் தழுவிய மதமாக உருவெடுக்கும்.. இல்லைன்னா, மதச் சண்டைகளால, அடுத்த உலக யுத்தம் வந்து மொத்தமா அழிஞ்சு போய் மறுபடி பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கும்..

இக்கேள்விகளுக்கு என் பதில்:

¼br /> பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றி.

//இந்து மதத்தை மட்டும் எப்படி ஆட்டைல சேர்த்துக்காம விடலாம்?!! //

முதல் பத்தியிலேயே ஒன்று சொல்லியிருந்தேனே…:இது ஒரு மதமல்ல; ஒரு வாழ்க்கை நெறி’ – எல்லோரும் சொல்லும் இதற்கு என்ன பொருள் என்று எனக்குப் புரிந்ததில்லை”. இந்து மதம் என்பதைஎப்படி வரையறுப்பது என்பதே ஒரு பிரச்சனையல்லவா?
1. ப்ராமணீய இந்து மதம் (உபநிஷத்தும், வேதங்களும் உள்ளடைக்கியது; மேலும் சாஸ்திர சம்பிரதாயங்கள் என்ற கட்டுக்கோப்பு உடையது); இவைகளோடு கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
2. இரண்டாவது, (இந்துமத) தத்துவங்கள் – இதை வரையறுப்பதிலும் குழப்பம் (எனக்கு) – உதாரணமாக, நம் ராதாகிருஷ்ணன்,ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஏன் ஓஷோவையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இவர்கள் பேசிய தத்துவங்களை இந்தியத் தத்துவங்கள் என்றழைப்பதா, இந்து மதத் தத்துவங்கள் என்றழைப்பதா?
3. smaller gods என்று சொல்லப்படும் சிறு தெய்வ வழிபாட்டைக் கைக்கொள்ளும் பெரும்பான்மை மக்கள் – சாதி அமைப்பில் கீழே தள்ளப்பட்ட இந்த மக்களை இந்துக்கள் என்றும், அவர்களின் ‘மதத்தை’ இந்து மதம் என்றும் அழைக்கலாமா? (ஏற்கெனவே நான் சொல்லியுள்ள காஞ்சையா இலியா-வின் கருத்துக்களை இங்கு நினைவில் கொள்ளவும்.)
அப்பாவுக்குப் பெயர் ராமன் (வைஷ்ணவ கடவுளின் பெயர்) என்று இருக்கும். பையனுக்கு முருகன் என்றிருக்கும். அப்பா வைணவர், பையன் சைவக்காரன் என்று கொள்ள முடியுமா? ப்ராமணர்களைத் தவிரவும் ,மற்றவர்களிடம் போய் நீங்கள் த்வைதிகளா, அத்வைதிகளா என்று கேட்டுப் பாருங்கள். படித்த நண்பர் ஒருவரிடம் – ப்ராமணர் அல்லாத இந்து – இந்து மத ‘பெருந்தெய்வங்களின்’ பெயர்களையும், உறவுகளையும் கேட்டுப் பாருங்களேன். அநேகமாக பலருக்கும் தெரிந்திருக்காது.

இப்படி ஒரு amalgamation- ஆக இருக்கும் ஒன்றே இந்து மதம் என்று பொத்தாம் பொதுவாக அழைக்கப்படுகிறது. ஏன் வேதங்களைப் பின்பற்றுகிறீர்கள் என்று தாழ்த்தப்பட்ட மக்களைக் கேட்டால் என்ன பதில் வரும்?  ஏன் சுடலைமாடனையும், மாரியாத்தாவையும் கும்பிட்டுக்கொண்டு, பாத யாத்திரை போய்க்கொண்டு, கடாவெட்டி பலிகொடுத்து, மண்சோறு சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால் முற்படுத்திக் கொண்டவர்கள் என்ன சொல்வார்கள்?  இருவருமே இது எங்கள் பழக்கம் இல்லல என்பார்கள். இங்கே பொதுவில் இந்து மதத்தை நோக்கி எந்தக் கேள்விகளையும் கேட்க முடியாது என்பதே நிதர்சனம்.
மற்ற மதங்களை அதுவும் ஆபிரஹாமிய மதங்களை நான் Organized religions என்றழைக்கிறேன். இங்கு அதற்கென ஒரே ஒரு “புத்தகமும்”, ஒரு தலைமையும், கட்டுக்கோப்பும் உண்டு. Chance to raise pointed questions are there only in these organized religions. அதற்காகவே அந்த மதங்களைப் பற்றி என் ஆய்வை கொஞ்சம் விஸ்தாரமாக வைத்தேன். ஆயினும் இந்து மதத்தை ‘ஆட்டைக்குக் சேர்க்கவில்லை’ என்றதும் அதற்கென சில வேடிக்கையான interpretations வந்தன.

//இந்த பரவச, தீவிர, தெளிவு நிலைக்குப் போகும்முன் மதம் வேணுமே? குழந்தை வளர்ந்து சாப்பிடுவதன் பெருமையை உணரும் முன்னே அதைச் சாப்பிட வைக்கபோலீஸ் வேணுமே? //
மதங்களை போலீசுக்கு பலரும் ஒப்பிடுவது ஒரு ஆச்சரியம்தான்.நீங்க சொன்னது ரொம்ப சரி. ஏன் அப்படி சொல்றேன்னா, நானும் அதத்தான் சொல்லியிருக்கேன். ” சிறு வயதில் கடவுள் பயம் தேவை – மனத்தை நல்வழிப் படுத்த;வயதும், மனமும் வளர வளர அந்தக் கடவுள் concept தேவையில்லை…”//எந்த தியரிக்கும் ஒரு base வேணும்.. அதாவது, Basic assumption… //
எந்த தியரிக்கும் ஒரு base வேணும்..அதைத்தான் hypothesis என்கிறோம். அது  thesis ஆவது எப்பொதென்றால் நமது hypothesis நிரூபிக்கப்படும்போது மட்டுமே. நிரூபிக்கப் பட முடியாது போனால் அது wrong  or disproved hypothesis என்றளவிலேதான் இருக்கும். இதற்கடுத்த alphabet, numerals, வைத்து நீங்கள் கொடுத்திருக்கும் உதாரணம் கொஞ்சம் உதைக்கிறது!

//சில விசயங்களைக் கேள்வி கேட்காம நம்பித்தானே ஆகணும்? //
அப்டியா? ஏன்? எதுக்காக?
நிச்சயமா எதையும் கேள்வி கேட்கலாமே. அதற்குப் பதில் கிடைக்கிறதா, இல்லையா என்பது வேறு. பைபிளில் ஒரு வசனம்: ‘கடவுள் பயமே ஞானத்தின் ஆரம்பம்’ என்று. அதைவிட ‘கேள்விகளே ஞானத்தின் ஆரம்பம்’ என்பது எனக்குப் பிடிக்கிறது.  கேள்வி கேட்பது தவறென்று சொல்வது மதங்களே. ஏனெனில் கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் எந்த மதமும் ஆட்டம் காணும் என்பது நிச்சயம். எனக்கு இந்து மதத்தின் மேல் முன்பு ஒரு விஷயத்தில் பிடித்திருந்தது. ஏகக் கடவுள் (ப்ரம்மம்), முப்பது முக்கோடித்தேவர், கடவுள் மறுப்பு (கபிலம்) இப்படி பல நம்பிக்கைகளையும் உள்ளடக்கி இருக்கிறதே; பரவாயில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் மனுவில் ப்ராமணன் எக்குற்றம் செய்யினும் மன்னிக்கப்பட வேண்டியவன்; ஆனால் கடவுளைப் பற்றி, வேதங்களைப் பற்றிக் கேள்வி கேட்டால் அவன் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் என்று இருப்பதாக அறிந்த போது, ஓகோ, இந்து மதமும் இந்த விஷயத்தில் இப்படிதானா என்று புரிந்து கொண்டேன்.! எல்லா மதங்களுமே இந்த “தற்காப்பு நடவடிக்கைகளை” நன்கு எடுத்து தயாராகவே இருக்கின்றன். எல்லாம் வரும் முன் காக்கும் செயல்தான்.

 

//எங்க வீட்டு மல்லிச் செடி கிட்ட நாளைக்கு நிறைய பூ பூக்கணும்னு சொல்லி தண்ணிவிட்டா, அதுவும் அடுத்த நாள் நல்லா பூக்கும்..//
எனக்கும் இந்த அனுபவம் உண்டு. ஆனால் என் பேச்சுக்கு அவைகள் சொன்னபடி கேட்பதேயில்லை. அதுவும் சில செடிகளைச் செல்லமாக வைத்திருந்து, ரொம்ப அன்பாகக் கூறியும் அவை பட்டுப் போயுள்ளன!

//சாதி வேறுபாடுகளைத் தவிர்த்து இந்துமதத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. //
இரண்டு பதில்கள்:
1. சாதி வேறுபாடுகள் தவிர்த்தும் பல பிரச்சனைகள் உண்டல்லவா? மேலே சொன்னபடி எதை எதையெல்லாம் இந்து மதத்திற்குள் கொண்டு வருவது? இந்து மதம் என்பது ஒரு -  is it a single entity? என்ற கேள்வி இப்போதுள்ள சூழலில் பூதாகரமாக வடிவெடுக்கிறதே. காஞ்சாயா இலியா (ஏன், நம் தமிழ் மணத்திலும் இப்போது இந்தக் கேள்வி பொதுவில் வைக்கப்பட்டுள்ளதே) சொல்வது போல பெரும்பானமை இந்தியர்களை (பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்) இந்துக்கள் என்றழைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாரே. அக்கருத்து எனக்கும் உடன்பாடே. அப்படியானால், நான் ஏற்கெனவே சொன்னதுபோல இந்துமதமும் ஒரு மைனாரிட்டி மதமே (கிறித்துவம், இஸ்லாம் மாதிரியே!) முதல் பிரச்சனையே: எது இந்து மதம்? என்பதே.

2. இன்று நம் சமூகத்தைத் தாக்கும் ஊழிக்காற்று இந்த சாதி வேறுபாடுகள்தான். இந்து மதத்தை விட்டு சாதிப் பிரிவுகளைப் பிரிக்க முடியாது. (பிரிக்கக் கூடாது என்று நம் தேசத்தந்தையே கூறி விட்டார்!) இந்து மதம் தழைக்கும் வரை சாதி வேறுபாடுகள் தொடர்ந்தே வரும். இதை விடவும் பெரும் பிரச்சனை இருக்குமா – இந்து மதத்தைப் பொருத்தவரை? இந்து மதமும், சனாதன தர்மமும் ஒன்றைவிட்டு ஒன்று இருக்குமா? முடியாதெனவே நினைக்கிறேன். ஆகவே இந்த ஒரு பிரச்சனை போதுமே! இதனால்தான் சாதிகளை ஒழிக்க இந்து மதத்தை ஒழிக்கணுமா என்ற ஒரு கேள்வி எழுகிறது.  அனால் அது தேவையில்லை. கிறித்துவம் இரண்டாக – கத்தோலிக்கர், பிரிவினைக்காரர்கள் – என்று பிரிந்தது போல, இங்கும் ஒரு மார்ட்டின் லூதர் வந்து இந்து மதத்தை இரு பிரிவுகளாகப் பிரித்தால் நலமாயிருக்கும் – ஒரு பக்கம் மைனாரிட்டிகளான ப்ராமணிய இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவர்கள்; ‘சிறு கடவுளர்களை’ வணங்கும் மற்ற பெரும்பான்மையான மக்கள் சார்ந்த இந்து மதம் என்ற இரு பிரிவுகளாக நமது மக்கள் கணக்கெடுப்பில் மாற்றினால் இந்த சாதிகள் ஒழிய வழிகிடைக்குமா?  இங்கும்கூட கிறித்துவத்தில் உள்ளது போலவே பிரிவினைக்காரர்கள் என்ற பெயரை இரண்டாம் குழுவிற்குக் கொடுத்துவிடலாம்.

//பல அறிவியல் சமாச்சாரங்களைக் கண்டு பிடிச்சு அனாயாசமா மதத்துக்குள்ள மறைச்சு வச்சிட்டு போன நம்ம முன்னோர்கள் மேல எனக்கு ரொம்ப மரியாதைஉண்டு.//
மஞ்சட்காமாலைக்கு கீவாநெல்லி சரியான மருந்து என்று நம் முன்னோர் எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள்? – இது போன்றே பல மூலிகைகள் குணம் பற்றி – without மஞ்சட்காமாலைக்கு கீவாநெல்லி சரியான மருந்து என்று நம் முன்னோர் எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள்? – இது போன்றே பல மூலிகைகள் குணம் பற்றி – without any chemical analysis – எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள் என்ற ஆச்சரியம் எனக்கும் உண்டு. இதே போல் வானியல், கட்டிடக்கலை போன்ற பல விஷயங்களைப் பார்த்து நானும் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனா. இந்த விஷயங்களோடு ‘அறிவியல் சமாச்சாரங்களை மதத்துக்குள்ள மறைச்சு வச்சிட்டு’ என்பது எனக்கு ஒரு கேள்விக்குறியே. நம் மதத்தை உண்மையான மதம் என்று நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தோடு பல விஷயங்கள் எங்கள் மதத்திற்குள் மறைந்திருக்கின்றன என்று கூறிக் கொள்வது எல்லா மதத்தினரும் கைக்கொள்ளும் ஒரு தேவையற்ற போட்டி என்றுதான் நான் நினைக்கிறேன். அணுவின் அமைப்பு நடராசர் சிலையில் உள்ளடங்கி

இருப்பதாக இந்துக்கள் கூறுவதும், எதிர்காலத்தை அப்படியே எங்கள் வெளிப்பாடுகளில்’ (revelation) சொல்லப்பட்டுள்ளது என்று கிறித்துவர்கள் சொல்வதும், space பற்றி எங்கள் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்று இஸ்லாமியர் கூறுவதும் எனக்கு உடன்பாடில்லை. அப்படியே அங்கே அந்தந்தக் கடவுளர்கள் ‘புட்டு புட்டு’ வைத்திருந்தால் ஏன் அவைகள் பெரும்பாலும் மறைந்த மொழியில் சொல்லப்படவேண்டும். straight-ஆக 2+2=4 என்பதுபோல் சொல்லியிருக்கலாமே!

//எந்த மதமும் செக்ஸ் பத்தி ஓபனா பேசாதேன்னு சொல்லுது.. ………..தெரிஞ்சிக்க வேண்டிய நேரத்தில் மக்கள் அதைத் தெரிந்துகொண்டால் போதும் என்பது தான்முன்னோர்களின்(கவனிக்க, கடவுளின் அல்ல  ) கொள்கை. //
உடன்படுகிறேன். ஆனால், செக்ஸ் என்றாலே அது ‘பாவம்’ , அருவருக்கத்தக்க ஒரு விஷயம், celibacy உயர்ந்த விஷயம்(கிறித்துவம்), ‘பெண்ணென்னும் மாயப்பிசாசை’ பார்த்தும்விடாதே; மூடி வை (இஸ்லாம்) என்பது போன்ற மனப்பான்மையை பொதுவாக மதங்கள் (இந்துமதம் இதில் ஒரு விலக்காக இருக்கலாம்)மக்கள் மனதில் ஏற்படுத்துவது தேவையா?

//இந்த வெளிச்சத்திற்கு வரும் முன், மதம் தேவை.. மனிதனை ஒரு நிலைப் படுத்த, மனிதன் மனிதம் உள்ள மனிதனாக இருப்பதன் அவசியத்தை வலியுறுத்த – அன்பாலோ, கட்டாயத்தாலோ!!//
இதையேதான் நானும் சொல்லியுள்ளேன். சிறு வயதில் கடவுள் பயம் தேவை – மனத்தை நல்வழிப் படுத்த; வயதும், மனமும் வளர வளர அந்தக் கடவுள் conceptதேவையில்லை;   என்று சொல்லி, அதோடு………”உன்னையும் என்னையும் ‘மனிதம் உள்ள மனிதனாக’ வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த   என்று சொல்லி, அதோடு………”உன்னையும் என்னையும் ‘மனிதம் உள்ள மனிதனாக’ வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த‘வெளிச்சத்திற்கு’(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?” – என்று முடிவாகச் சொல்லியுள்ளேன்.

ஆக, நம் இருவரின் முடிவுரையும் ஒன்றே!

 

பொன்ஸ்: 

விவாதத்திற்குத் தொடர்புடைய புதிய சுட்டிகள்:

1. http://whatiwanttosayis.blogspot.com/2006/06/blog-post.html – அருள் குமார்
2. http://thekkikattan.blogspot.com/2006/06/blog-post_09.html – Thekkikattan
3. http://pithatralgal.blogspot.com/2006/06/103.html – நாமக்கல் சிபி

162. ரவி சிரினிவாஸுக்கு ஒரு பதில்.

 

 

Saturday, June 03, 2006
 

கடைசியாக வந்து இன்னாபாது ஒண்ணுமே பிரியலையே என்று கேட்பவர்களுக்கு இந்த லிங்க். மத்தவங்க அப்படியே அலாக்கா சாப்பிடலாம்.

 

BSRB-யை இழுத்து மூடியாச்சி என்பதை ஒப்புக்கொள்ளுகிறீர்கள். அதற்குப் பதிலாக ஒவ்வொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியும் தனித்தனியே ஆட்களை வேலைக்கு அமர்த்த தேர்வுகள் நடத்துகிறார்கள் என்கிறீர்கள். உண்மைதான். (‘உலக மகா புளுகு’விற்கு மன்னிக்க) நல்லது. BSRB இருக்கும்போது ஒரே தேர்வின் வழியாக எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால் …

1. இப்போது ஒவ்வொரு வங்கியும் தனித்தனியே நடத்தும் தேர்வுகள் ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்றனவா?

2. ஜாதிவாரியான, BSRB-ஆல் கடைப்பிடிக்கப்பட்ட, roster system இப்போதும் கடைப்பிடிக்கப் படுகிறதா?

3. எல்லா வங்கித் தேர்வுகளுமே ஒரே model-யைப் பின்பற்றுகின்றனவா? இல்லை, எந்தவித coaching classes மூலம் பயிற்றுவிக்க முடியாதபடி ஒவ்வொரு வங்கியும் ‘கொண்டதே கோலம்’ என்ற முறையில் முற்படுத்திக் கொண்டோருக்கு வசதியாகத் தேர்வு முறைகள் நடக்கின்றனவா?

4. இந்த தேர்வுகள் எல்லாமே ஒரே மாதிரியான, பொருத்தமான difficulty level கொண்டனவைதானா?

5. ஏதாவது ஒரு பொது அமைப்பினால் இந்தத் தேர்வுகள் monitor செய்யப்படுகின்றனவா?

வரைமுறையற்று நடத்தும் இந்தத் தேர்வுகளைக் காண்பித்து BSRB போனாலும், வங்கிகள் தேர்வுகள் வைத்தே காலியிடங்களை நிரப்புகின்றன என்ற உங்கள் வாதம் – நான் இதுவரை என் பதிவுகளில் பயன்படுத்தாத சொல் – வெறும் ஜல்லியடிப்பின்றி வேறென்ன? பெரும்பான்மை மக்கள் திறமை வாய்ந்தவர்களால், திறமையாக ஏமாற்றப் படுகிறார்கள் என்பதே உண்மை. இதைத்தான் “சாணக்கியத் தனம்” என்றேன்.

அடுத்து SSC-க்கு வருவோமா, ரவி? SSC still exists. அது இப்போது இல்லை; எடுக்கப்பட்டுவிட்டது என்ற என் ‘உலக மகா புளுகு’விற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்; தவறுதான்..ஆனால், இங்கும் அந்த ‘நீக்கமற நிறைந்திருக்கும் சாணக்கியத்தனம்’ SSCயை எப்படி வைத்திருக்கிறது என்று எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்:

மண்டல் கமிஷன் வந்ததும் – நிறுத்த முயன்றும் முடியாமல் வந்துவிட்ட பின் – மத்திய அரசு ஊழியர்களின் வேலை ஓய்வு வயதை 58-லிருந்து 60 ஆக ஆக்கி விட்டீர்கள்..மன்னிக்கணும்..ஆக்கிவிட்டார்கள். This is just the first aid – இருப்பவர்களின் இருப்பை கொஞ்சம் நீட்டியாகி விட்டது.

ரவி, சின்ன வயதில் என்னைப் போன்ற மக்குப் பசங்களிடம் ஆசிரியர் கேள்வி எதுவும் கேட்டால் – எட்டும் எட்டும் எத்தனை என்று கேட்டார் என்று வைத்துக் கொள்வோம் – மனசுக்குள்ளேயே அல்லது முதுகுக்குப் பின்னால் கை விரல்களை வைத்து எண்ணிக்கொண்டே, சார், நானா சார்,…என்னையா கேட்டீர்கள் சார், என்று கேட்டு காலம் கடத்திக் கொண்டே ஒரு வழியாக விரல்களை எண்ணி கடைசியில ஒரு பதிலை – சரியாகவோ, தவறாகவோ சொல்வோம். இந்த ஓய்வு வயதை நீட்டித்தது இது போன்ற ஒரு ஓட்டைத் தந்திரம்தான். ஓய்வு பெறும் வயதை நீட்டித்து, இருப்பவர்களைக் கொஞ்சம் தக்க வைத்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நன்றாக காய் நகர்த்தப் பட்டது. எப்படி என்கிறீர்களா…இப்படித்தான்…

1. LDC என்கிற lower division clerk என்ற வேலைக்கு +2 முடித்த தகுதி போதும். SSC இருந்தபோது ஒரே தேர்வு; அதுவும் objective type questions / multiple choice questions மட்டும். இதில் ‘விளையாட்டு’ எதுவும் விளையாடமுடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா? இப்போது SSC தேர்வுகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு UPSC (IAS, IPS…)தேர்வுகள் போல இரண்டு பேப்பர்கள்; முதல் Prelim பேப்பரில் மட்டும் objective type questions; இரண்டாவது பேப்பரில் ஏதோ மக்கள் IAS IPS தேர்வுகள் எழுதுவது போல subject paper. எந்த +12 மாணவன் ஐயா இந்த பேப்பரை எழுதித் தேர்வடைவது? இந்த இரண்டாவது பேப்பர் descriptive answers.
2. அது மட்டுமல்ல. IAS, IPSதேர்வுகள் கூட அவனவன் தன் தாய்மொழியில் எழுத முடியும்; இந்த SSC தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் எழுத முடியும். (இதைத்தான் ‘ஆப்பு வைப்பது’ என்று கூறுகிறார்களோ??)

3. இந்தத் தேர்வுகளை என்னைப் போன்ற ‘மொடாக்குகள்’ கனவிலும் நினைத்துப் பார்க்காத உயரத்தில் வைத்துவிட்டு, எவனும் இதற்கென்றே கோச்சிங் வகுப்புகள் எதற்கும் சென்றுவிடக் கூடாதென்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முறைகள் மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன என்பது (There is no standard type of questions; level of toughness of the tests varies year after year.) ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் சிலரை அணுகிக் கேட்டுப் பாருங்களேன்.

ஏன் சார், தெரியாமல்தான் கேட்கிறேன்; IAS, IPS தேர்வுகளைவிடவும் ஒரு lower division clerk post-க்குக் கடினமான தேர்வுகள் வைத்து filter பண்ணணுமா என்ன? (எதற்காக இந்த filtering என்பதையும் பிறகு பார்ப்போமா?)

மேற்கூறியவற்றில் 3,4,7 & 9 பாயிண்டுகள் தேர்வுகளின் நிலையற்ற தன்மை, கடினத்தன்மை இவைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். இது தேர்வு எழுதும் எல்லோருக்கும் பொதுவானதுதானே; இதில் என்ன ஏற்றத் தாழ்வு என்று ‘பொட்டில் அடிச்சது மாதிரி’ கேட்கலாம். ஜாதிகளைக் கூட விட்டு விடுவோம். நகர்ப்புற மேட்டுகுடி மக்களையும், நாட்டுப்புறத்து ஏழை மக்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க வேண்டாம் என்பதுதானே இட ஒதுக்கீட்டின் ‘தாத்பர்யமே’! அப்படியாயின், இது போன்ற tough exams யாருக்கு advantageous ஆக இருக்கும்?

இப்போது filtering and the problem of creamy layer-க்கு வருவோம். இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்சனை பற்றிய என் பதிவுகளில் இந்த இரண்டாம் பிரச்சனையான creamy layer-க்கும் இட ஒதுக்கீடு நீட்டிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை நானே எழுப்பி உள்ளேன். ஆனால் ‘வேறு வழி’ என்ன என்ற கேள்விக்கு முழுமையான, சரியான, நடைமுறைப் படுத்தக்கூடிய முறை இப்போதைக்குத் தெரியவில்லை. சரியான முறை காணும் வரை – மாறனும், அன்புமணி பிள்ளைகளும் பயன்பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் – அது தொடரவேண்டியது ‘காலத்தின் கட்டாயம்’! ஏனெனில் மாறனோடும், அன்புமணி பிள்ளைகளோடும் அரசாங்கப் பணியில் இருக்கும் என் போன்ற மக்களும், SSC- மூலமாய் LDCஆன மக்களும் அல்லவா மாட்டிக் கொள்வார்கள் / கொள்வோம்.

இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடும் அறிவு ஜீவிகளும், மேற்சொன்ன filtering நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யும் மிகப் பெரிய அறிவி ஜீவிகளும் நன்கு திட்டமிட்டே காரியமாற்றுகின்றனர். மண்டல் கமிஷன் வந்த பிறகே SC. ST இடங்கள் பலவும் அரசுப் பணியில் ‘ஆட்கள் கிடைக்கவில்லை’ என்ற நொண்டிச் சாக்குடன் நிரப்பப்படாமல் இருந்ததைக் கண்டு பிடித்து, அதன் பின் ஒரு drive என்ற பெயரில் அந்த இடங்கள் ஓரளவாவது – முழுமையாக இல்லை – நிரப்பப் பட்டன. ‘ஆளே வரலைன்னா நாங்க என்ன செய்றது’ என்ற பதில் தயாராக இருப்பதால், இந்த filtering நடைமுறைப் படுத்தப் படுகிறது. இதை ஒட்டியே இந்த creamy layer விவாதமும். creamy layer-யை ‘வெட்டி’ விட்டு விட்டால் பிற்படுத்தப் பட்டோருக்குரிய இடங்கள் நிரப்பப் படாமல் போக வாய்ப்புகள் அதிகம். பல இடங்களை நிரப்பாமல் வைத்திருந்து அந்த இடங்களில் ‘பிறரை’ ஆள் கிடைக்காத காரணத்தால் வேலையில் சேர்க்க அல்லது அந்த இடங்கள் நிறையாமலே இருந்தாலும் சரிதான் என்ற பரந்த மனப்பான்மையே இதற்குக் காரணம். இந்தக் கடைசி பத்தியில் சொல்லப்பட்டவைகளுக்கு ஆதாரம் கொடுக்க முடியாதென எனக்கு நன்கு தெரியும். நடப்புகளை வைத்துக் கணிக்கும் ஒரு கணக்கு….அவ்வளவே!

posted by திராவிட தமிழர்கள்

 

“ரவி சிரினிவாஸுக்கு ஒரு பதில்.”
5 Comments -Show Original Post
Collapse comments
 

வழிப்போக்கன் said…
நல்ல பதிவு !

3:39 PM
 குழலி / Kuzhali said…
அய்யய்யோ தருமி அய்யா இதில் இத்தனை உள்குத்து இருக்கின்றதா? தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதாக கேள்விப்பட்டேன் ஆனால் 10இலட்சம் ஆசிரியர்கள் பயிற்சி முடித்து காத்துள்ளனர், 10ல் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்றாலும் குறைந்தது ஒரு இலட்சம் தாழ்த்தப்படவர்கள் ஆசிரியர் பயிற்சி முடித்து இருக்க வேண்டும் ஆனால் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஆள் கிடைக்கவில்லையென்று சில ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தெரியவில்லை, இது தொடர்பாக தகவல் சேகரித்து வருகின்றேன், விரைவில் இது தொடர்பாக கூறுகின்றேன்

நன்றி

3:56 PM

Anonymous said…
‘நிறப்பப்படாமல் ‘

‘நிறப்பப் பட்டன’

‘நிறப்பாமல் ‘

4:49 PM

திராவிட தமிழர்கள் said…
எழுத்துபிழைகளை சுட்டி காட்டிய அனானி நண்பருக்கு நன்றி…
பிழைகள் திருத்தப்பட்டிருக்கின்றன.

6:17 PM

PRABHU RAJADURAI said…

உங்களில் யாரும் இதை அறிந்திருக்கிறீர்களா என்பது தெரியாது. மண்டல் கமிஷன் பரிந்துரையினை ஏற்று மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்பட்ட பிறகு, இட ஒதுக்கீட்டினையே கேலிக்குறியதாக்கும் ஒரு மோசடி நடைபெற்றது. அதாவது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களை பொது வகுப்பில் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கீட்டு பிரிவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் விளைவு தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவருக்கான ஐம்பது சதவீதம் போக மீதி ஐம்பது சதவீதம் இவர்கள் அல்லாத முற்படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

இப்படி நடக்க முடியுமா என்று யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், இத்தகைய ஒரு செயலை எதிர்த்து, எனது நண்பர் சென்னையிலுள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (CAT)ஒரு வழக்கு தொடர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட முழு விபரத்தினையும் தர முடியும். வேடிக்கை என்னவென்றால், இந்த தீர்ப்பினை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அந்த வழக்கினை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்தது வேறு விஷயம்.

சிலருக்கு நினைவிருக்கலாம். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் ஏதோ ஒரு வேலைக்கான அல்லது மேற்படிப்பு தேர்வுக்கான விளம்பரத்தில் oc என்பதற்கு ‘other castes’ என்று முழு விளக்கம் அளித்திருந்தார்கள். உடனடியாக இதனை கவனித்த திராவிடர் கழக தலைவர் திரு.கி.வீரமணி போராட்டம் நடத்தினாரோ அல்லது வழக்கு தொடர்ந்தாரோ தெரியவில்லை…எம்ஜிஆர் அதனை உடனடியாக open competition என்று மாற்ற உத்தரவிட்டார். அப்போது அதனை தற்செயல் என நினைத்தேன்…

6:32 PM

161. நான் கண்ட மண்டல் கமிஷன்.


ஏற்கெனவே திராவிட தமிழர்களின் தளத்தில் பதிக்கப்பட்ட இப்பதிவை என் தளத்தில் மீண்டும் ஒரு முறை பதிவிடுகிறேன்.  மீள்பதிவிற்கு அனுமதியளித்த தலைவர் முத்துவிற்கு நன்றிகள். அப்பின்னூட்டத்திற்கு வந்த பின்னூட்டங்களையும் சேர்த்தே பதிவேற்றியுள்ளேன்.

 

Monday, May 29, 2006
தருமி பார்த்த மண்டல் கமிஷன்
என் பிள்ளை 90 மார்க். அடுத்த வீட்டுப் பையன் 92; அவனுக்கு உயர்கல்விச் சாலையில் சீட் கிடைத்துவிட்டது. என் பையனுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அடுத்த தெருக்காரரின் பையன் 87தான். அவர் பையனுக்குச் சீட் கிடைத்துவிட்டதே. இது என்ன நியாயம்?

நல்ல கேள்விதான்.  காலங் காலமாக யார் யாரெல்லாமோ – என் தாத்தாக்களாகவே அவர்கள் இருந்துவிட்டுப் போகட்டும் -செய்த தவறுக்குரிய தண்டனை என் தலையில், என் பிள்ளை தலையில் விழுவது என்ன நியாயம்?

நாம் எல்லோரும் எந்த விஷயத்தையுமே என்னை இது எப்படி பாதிக்கிறது என்ற சுய நிலைக் கண்ணோட்டத்தில்தான் பார்ப்போம். அது இயற்கையும் கூட.  இப்படித்தான் பலராலும் பார்க்க முடியும். அதைத் தவிர்த்து சமூகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதற்கு எல்லோராலும் முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

இதையெல்லாம் தாண்டி, மண்டல் கமிஷன் வந்ததென்றால் அதற்குரிய மரியாதையை வி.பி. சிங் அவர்களுக்குக் கொடுத்தேயாக வேண்டும். ஆனால், அவர் செய்த நல்ல காரியத்தை ‘அழகாக’ neutralise செய்து, அதனால் பெரிய லாபம் ஏதும் பிற்படுத்தப்பட்டோர் பெற முடியாத அளவு திறம்பட செயல் பட்டவர்களை என்னென்று சொல்வது. மண்டல் கமிஷன் வந்த பிறகு, பொதுவாக மத்திய அரசு வேலை பெற ஏதுவான S.S.C. (Short Service Commison), BSRB (Banking Service Recruitment Board) இரண்டையும் சுத்தமாகக் காலி செய்தாகி விட்டது. எந்த அமைப்புகளால் அரசு வேலைக்குள் செல்ல முடியுமோ அந்த வாசல்களை முழுவதுமாக அடைத்தாகி விட்டது. வீட்டுக்கு நுழைவதற்குப் பாதை போட்டுக் கொடுத்தது மண்டல் கமிஷன்; ஆனால், வாசல் கதவுகளைச் சுத்தமாக அடைத்துவிட்டார்கள். அடைத்தவர்கள் புத்திசாலிகள். ஆனால், மண்டல் நமக்கு வழி போட்டுவிட்டது என்ற நினைப்பில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். அது ‘ஏட்டுச் சுரைக்காய்’ என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இதைக் குள்ள நரித்தனம் என்பதா, சாணக்கியத்தனம் என்பதா?

இப்போது நடப்பதற்கு இரண்டாம் மண்டல் கமிஷன் என்று பெயராம். (அன்று – பெயர் என்ன பாலாஜியா? – ஓர் உயிர்ப்பலி கொடுத்து மண்டலை நிறுத்த முயற்சி நடந்தது. அந்த உயிர்ப்பலி பற்றி பின்பு வந்த ‘வேடிக்கையான’ செய்திகளைப் புறந்தள்ளி விடுவோம்.) இன்றைக்கு ஒதுக்கீட்டுக்கு எதிராக நடக்கும் ‘அறப் போராட்டங்களையும்’ மீறி இத்திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கும் உண்டு. காத்திருந்து பார்க்க வேண்டும்.

வேடிக்கை என்னவெனில், இதற்காக போராட்டம் நடத்தவேண்டிய ‘பிற்படுத்தப் பட்டோர்’ இதைப் பற்றிய கருத்தாக்கங்கள்கூட இல்லாமல் இருப்பதாகவே எனக்குப் படுகின்றது.  சட்டம் நிறைவேற்றப் பட்டாலும், அதன் பிறகு ‘வாசல்களையடைக்கும்’ சாணக்கியத் தனத்தையும் நாம் எதிர் கொள்ள வேண்டியதிருக்கலாம்.அதைவிடவும் இன்னொன்றை இங்கு குறிப்பிட வேண்டியதிருக்கிறது. அந்த விஷயம்  பத்ரி அவர்களால் ஒருதனிப் பதிவாகப் போடப்பட்டுள்ளது. மேலும் பலரை அதை அடையவேண்டியது அவசியமென நினைப்பதால் அவர் கூற்றை இங்கு மேற்கோளிடுகிறேன்:

//இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் பலரும் சொல்வது – பிற்படுத்தப்பட்டோரின் நலன் நிஜமாகவே பாதுகாக்கப்படவேண்டும் என்றால் அவர்களுக்கு நல்ல தொடக்கக் கல்வி தாருங்கள், உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதுதான். உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா என்னும் விவாதத்தை சற்றே பின்னுக்குத் தள்ளுவோம். முதலில் நல்ல தொடக்கக் கல்வியை எல்லோருக்கும் வழங்கவேண்டும் என்பதிலாவது அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோமே என்று ஒரு சந்தோஷம்.ஆனால் நிலைமை என்ன?அர்ஜுன் சிங் தலைமையிலான மனிதவளத்துறை அமைச்சகம் “கல்வி ஓர் அடிப்படை உரிமை” என்ற பெயரில் ஒரு மசோதாவை உருவாக்கி வருகிறது.

தி ஹிந்துவிலிருந்து:

The Union Human Resource Development Ministry has dropped its move to impose 25 per cent reservation for children from the weaker sections in unaided schools at the elementary level.Though such reservation had been included in all the draft legislation drawn up by the Ministry to operationalise the Fundamental Right to Education, it finds no mention in the current draft under consideration.தொடக்கக்கல்வி எனும்போது மெரிட் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடக்கக்கல்வி அளவில் நுழைவுத்தேர்வு, நேர்முகம் என்று எதுவும் கூடாது என்று உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது. அப்படியும் பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்கள் பொதுவாக ஆங்கில மீடியம் தனியார் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. இத்தனைக்கும் அவர்கள் அனைவருமே இந்த “சிறப்புப் பள்ளிகள்” கேட்கும் கட்டணத்தைக் கட்டத் தயாராகத்தான் உள்ளார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவழியாக ஒதுக்கப்படுகிறார்கள்.அப்படி இருக்கையில், அர்ஜுன் சிங் அமைச்சகம் ஏன் தனியார் தொடக்கப் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டை சத்தமின்றி நீக்கியுள்ளது? தொடக்கப் பள்ளிகளில் சாதிக்க முடியாததை உயர் கல்வி நிலையங்களில் எப்படி சாதிக்கப்போகிறார்கள்?இப்பொழுது மனித வள அமைச்சகம் எடுத்திருக்கும் முடிவால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வெகுவாக பாதிக்கப்படுவர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் அவசரமாகப் போராடவேண்டிய மசோதா இதுதான். உயர்கல்வி நிலையங்கள் மீதான மசோதா மீது ஒரு கண்ணை வைத்திருக்கும் அதே நேரத்தில் தொடக்கக் கல்வியினை விட்டுவிடக்கூடாது.//

இந்த நேரத்தில், நான் ஏற்கெனவே சொல்லியபடி நம்மில் ஏறக்குறைய எல்லோருமே சுயநலக் கண்ணோட்டத்தோடுதான் (subjectivity) எதையும் பார்ப்போமென்றாலும், நம் பதிவர்களில் வெகு சிலர் இந்த நிலையைத்தாண்டி ஒரு பொதுநலப் பார்வையோடு இந்த விஷயத்தை மனதாரக் காணும் நாகரீகத்திற்கும், பறந்த மனதுக்கும் என் சிறந்தாழ்ந்த வணக்கங்கள்.அவர்களில் பத்ரியும் ஒருவர்.

posted by திராவிட தமிழர்கள் at 12:47 PM |

 

 

 

 

Post a Comment On: திராவிட தமிழர்கள் வலைத்தளம் “தருமி பார்த்த மண்டல் கமிஷன்”
15 Comments
 

Anonymous said…
S.S.C.- Staff Selection Commission
BSRB had been abolished.Banks have
the freedom to advertise, administer exams and choose from
those applied and qualified in the
exam conducted by bank.Earlier BSRB
would conduct tests and recurit from candidates and would allocate
them to various banks (e.g IOB,PNB,
BOB,Indian Bank etc).SBI has its
own cell for recuriting staff at
various levels.Thus only the process has changed and the no.
of vacancies has come down for
many reasons.

1:02 PM
 Vaa.Manikandan said…
//இன்றைக்கு ஒதுக்கீட்டுக்கு எதிராக நடக்கும் ‘அறப் போராட்டங்களையும்’ மீறி இத்திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கும் உண்டு. காத்திருந்து பார்க்க வேண்டும்.//

நிறைவேற வேண்டும். நிறைவேறும்.

1:14 PM
 சந்திப்பு said…
ஐயா தருமி, நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு சத்தியமா புரியலை! உங்களுடைய கருத்து இதுதான் என தெளிவாக சொன்னால்தான் சாதாரண திராவிடர்களுக்கு புரியும். சுற்றி வளைக்காதீர்…

3:22 PM
முத்து ( தமிழினி) said…
சந்திப்பு அவர்களே,

நிஜமாகவே புரியவில்லையா அல்லது அந்த சாதாரண திராவிடர் என்ற எள்ளலான வார்த்தைகளுக்கும் உங்களுக்கும் புரியாததற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?:))

4:14 PM
ravi srinivas said…
மண்டல் கமிஷன் வந்த பிறகு, பொதுவாக மத்திய அரசு வேலை பெற ஏதுவான S.S.C. (Short Service Commison), BSRB (Banking Service Recruitment Board) இரண்டையும் சுத்தமாகக் காலி செய்தாகி விட்டது. எந்த அமைப்புகளால் அரசுவேலைக்குள் செல்ல முடியுமோ அந்த வாசல்களை முழுவதுமாக அடைத்தாகி விட்டது. வீட்டுக்கு நுழைவதற்குப் பாதை போட்டுக் கொடுத்தது மண்டல் கமிஷன்; ஆனால், வாசல் கதவுகளைச் சுத்தமாக அடைத்துவிட்டார்கள். அடைத்தவர்கள் புத்திசாலிகள். ஆனால், மண்டல் நமக்கு வழி போட்டுவிட்டது என்ற நினைப்பில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். அது ‘ஏட்டுச் சுரைக்காய்’ என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இதைக் குள்ள நரித்தனம் என்பதா, சாணக்கியத்தனம் என்பதா?

———————————-
இது உலக மகா புளுகு. இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பதற்காக எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதுவதா?.

4:50 PM
Anonymous said…
ravi,

do you mean SSC and BSRB are not yet dismantled?

7:03 PM
 Sivabalan said…
// Vaa.Manikandan said… நிறைவேற வேண்டும். நிறைவேறும். //

இதை நான் வழிமொழிகிறேன்..

8:44 PM
ravi srinivas said…
Pls read what he has written.BSRB has been dismantled.But that does not mean that there has no been
no recuritment in banks.In general
in the 1990s due to various factors
employment in govt. depts and public sector banks did not increase as much as it was in
the previous decade. That affected the employment opportunities of everybody, not just OBCs. But as OBCs had 27% quota, the probability
of getting a central govt. job was high for them.Bear this also in mind.In late 70s and 80s public sector banks expanded rapidly
and hence expansion in recuirtment also followed.Technology enabled banks to do more business with less staff.Although public sector banks were late to use the information technologies they soon
discovered the benefits.They figured that they needed less staff
and hence there was little addition
in terms of employment.So BSRB was
not needed. What was done by BSRB was left to the banks.
Even otherwise SBI had its own
recuirment board.Railways and
public sector units etc still
continued to recurit in the 1990s
Dharmi gives a misleading picture.

9:05 PM
ravi srinivas said…
UPSC still there.Thus the doors are
not closed as he claims.The number of persons entering through the doors has been reduced.But this applies to all not just OBCs.

9:07 PM
வவ்வால் said…
//மண்டல் கமிஷன் வந்த பிறகு, பொதுவாக மத்திய அரசு வேலை பெற ஏதுவான ssc (Staff Selection Commission), BSRB (Banking Service Recruitment Board) இரண்டையும் சுத்தமாகக் காலி செய்தாகி விட்டது. எந்த அமைப்புகளால் அரசுவேலைக்குள் செல்ல முடியுமோ அந்த வாசல்களை முழுவதுமாக அடைத்தாகி விட்டது//

பி.எஸ்.ஆர்.பி. வேண்டுமானல் முடக்கப்பட்டிருக்கலாம் ஆனலும் இன்னும் BSRB அவ்வபோது வேலை வாஇப்பு விளம்பரம் தருகிறது ,SSC செயல்பட்டே வருகிறது!ssc வலைமனையில் புதிய அறிவிப்புகள்,மற்றும், முந்தைய தேர்வுக்கான ,முடிவுகள் வந்துள்ளது! ஏன் தமிழகத்தில் அம்மையார் காலத்தில் புதிய பணி நியமனம் கூடாது எனக்கூறி TNPSC கு உலைவைத்தாரே அது மறந்து விட்டது!

SSC வலைமனை!http://ssc.nic.in/

//இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் பலரும் சொல்வது – பிற்படுத்தப்பட்டோரின் நலன் நிஜமாகவே பாதுகாக்கப்படவேண்டும் என்றால் அவர்களுக்கு நல்ல தொடக்கக் கல்வி தாருங்கள், உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதுதான். உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா என்னும் விவாதத்தை சற்றே பின்னுக்குத் தள்ளுவோம். முதலில் நல்ல தொடக்கக் கல்வியை எல்லோருக்கும் வழங்கவேண்டும் என்பதிலாவது அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோமே என்று ஒரு சந்தோஷம்//

இதெல்லாம் போகாத ஊருக்கு வழி காட்டுவது .. எத்தனை தொடக்க பள்ளிகள் உள்ளது அவை அனைத்திலும் தரமான கல்வி வழங்க அரசுக்கு எத்தனை காலம், பிடிக்கும் ,எத்தனை நிதி வேண்டும், முறையாக செய்தால் கூட தரம் வருமா உடனே.தொடக்க கல்வியில் தரமான கல்வி வழங்கிய பிறகு அனைவரும் சமம் ஆகி படிக்கலாமே என்றால் அது வரைக்கும் இந்த IIT,IIM,AIIMS எல்லாம் மூடி வையுங்கள்.அரசால் இயலாத ஒன்றை வாதத்துக்கு கூறி மீண்டும் வெளியே தள்ளிவிட்டு உயர் கல்வியை அனுபவிக்க சொல்லும் நாசகாரத்திட்டம் இது!

//அப்படி இருக்கையில், அர்ஜுன் சிங் அமைச்சகம் ஏன் தனியார் தொடக்கப் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டை சத்தமின்றி நீக்கியுள்ளது? தொடக்கப் பள்ளிகளில் சாதிக்க முடியாததை உயர் கல்வி நிலையங்களில் எப்படி சாதிக்கப்போகிறார்கள்?//

தனியார் தொடக்க பள்ளிகளில் இட ஒதுகீடே இது வரை இல்லை ,இட ஒதுகீடு கொண்டுவரலாம் என ஒரு முடிவு எடுக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளது!எனவே எப்படி அதனை சத்தமின்றி நீக்கினார்கள் எனக்கூற முடியும்.உயர்கல்வியில் இட ஒதுக்கீடு கோருவது அரசு கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளில் அல்ல. இட ஒதுக்கீடு எனில் முதலில் அரசு கல்லூரிகளில் முழுதாக வரட்டும்,அதை வர விடுங்கள்,இருக்கிற உரிமையை கேட்டால் எதிர்கால உரிமையை கேளு முதலில் என சாமர்த்தியமாக திசை திருப்பவே கட்டுரை ஆசிரியர் முயற்சிக்கிறார்.ஏற்கனவே தனியார் பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தர அரசு நிர்பந்திக்கூடாது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது, எனவே அது கருத்தியே தனியார் தொடக்க கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கோரும் மசோதா பின் வாங்கப் பட்டிருக்கும்!

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு பற்று பேசுபவர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு மசோதா ஒன்று கைவிடப்பட்டது பற்றியும் கூறி இருக்கலாம்.உதவாத இட ஒதுக்கீடு எனில் தராமல் விட்டது ஏன் என்று மிகவும் பரிவாக!!?? கேட்பார் போல் உள்ளது.

இந்த கட்டுரையாசிரியர் சுற்றி வளைத்து இட ஒதுக்கீடு கோராதீர்கள் என்பதையே மறைமுகமா சொல்ல வருகிறார் போல் உள்ளது.சரியான உள்குத்து கட்டுரை:-))

9:15 PM
இரா.சுகுமாரன் said…
//இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் பலரும் சொல்வது – பிற்படுத்தப்பட்டோரின் நலன் நிஜமாகவே பாதுகாக்கப்படவேண்டும் என்றால் அவர்களுக்கு நல்ல தொடக்கக் கல்வி தாருங்கள், உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதுதான். உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா என்னும் விவாதத்தை சற்றே பின்னுக்குத் தள்ளுவோம். முதலில் நல்ல தொடக்கக் கல்வியை எல்லோருக்கும் வழங்கவேண்டும் என்பதிலாவது அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோமே என்று ஒரு சந்தோஷம்.//

இப்படி சொல்லி திசை திருப்புவதும் ஒரு முயற்சிதான்.

//தொடக்கக்கல்வி எனும்போது மெரிட் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடக்கக்கல்வி அளவில் நுழைவுத் தேர்வு, நேர்முகம் என்று எதுவும் கூடாது என்று உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது. அப்படியும் பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்கள் பொதுவாக ஆங்கில மீடியம் தனியார் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை. இத்தனைக்கும் அவர்கள் அனைவருமே இந்த “சிறப்புப் பள்ளிகள்” கேட்கும் கட்டணத்தைக் கட்டத் தயாராகத்தான் உள்ளார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவழியாக ஒதுக்கப்படுகிறார்கள்.

அப்படி இருக்கையில், அர்ஜுன் சிங் அமைச்சகம் ஏன் தனியார் தொடக்கப் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டை சத்தமின்றி நீக்கியுள்ளனர்? தொடக்கப் பள்ளிகளில் சாதிக்க முடியாததை உயர் கல்வி நிலையங்களில் எப்படி சாதிக்கப்போகிறார்கள்?//
தொடக்க கல்விக்கும் இட ஒதுக்கீட்டை அமல் படுத்த கோருவதே சரி. உயர் கல்விக்கு வேண்டாம் சொல்வது சரியல்ல.

2:22 PM
முத்து ( தமிழினி) said…
பி.எஸ்.ஆர்.பி கலைக்கப்பட்டாலும் தனிப்பட்ட முறையில் வங்கிகள் ஆட்களை தேர்வு செய்யும்போது மண்டல் கமிஷனை ஏற்றுத்தான் காலியிடம் அறிவிக்கப்படுகிறது.

(ஆட்களை நிரப்புவதில் தான் பிரச்சினை)

9:52 AM
 Dharumi said…
வவ்வால், சுகுமாறன்,

ஒரு சிறு குழப்பம் இப்பதிவில். நான் என் கருத்துக்களை முதல் 3 பத்தியிலும், கடைசிப் பத்தியிலும் சொல்லிவிட்டு, இடையே பத்ரி அவர்களின் பதிவில் வந்த ஒரு சேதியை மேற்கோளிட்டேன்.

எனது கருத்தாக இட ஒதுக்கீட்டிற்கான என் ஆதரவையும், ஆதங்கத்தையும் சொல்லியுள்ளேன். அதன் பின் பத்ரியை மேற்கோள் காட்ட இரண்டு காரணம்:

1. பொதுவாகவே நம் எல்லோராலும் எந்த ஒரு விஷயத்தையும் subective ஆகவே – சுய கண்ணோட்டத்தோடுமே – பார்க்க முடியும். ஆனாலும் சிலர் தன் சொந்த நிலை தாண்டி பொதுச் சிந்தனையோடும், தார்மீகக் கண்ணோட்டத்துடனும், சமூகச் சிந்தையோடும் இருப்பது கண்டு, சந்தோஷமுற்று அவர்களுக்கு நன்றி சொல்ல அதனைப் பதிந்தேன்.

2. பத்ரி குறிப்பிட்டது போல தொடக்கப் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு மிக அவசியம். அவரோ, நானோ தொடக்கப் பள்ளிகளில் மட்டுமே இட ஒதுக்கீடு தேவை; உயர்நிலைகளில் அது தேவையில்லை என்ற பொருளில் ஏதும் கூறிவிடவில்லை. உயர்கல்வி நிலையங்கள் மீதான மசோதா மீது ஒரு கண்ணை வைத்திருக்கும் அதே நேரத்தில் தொடக்கக் கல்வியினை விட்டுவிடக்கூடாது – என்ற இந்த கருத்து மிக முக்கியமானதாகப் பட்டதால் இதனை மேற்கோளிட்டேன்.
நுனிக் கிளையில் இருந்து அடிக் கிளையை வெட்டிவிடக் கூடாதே என்ற கரிசனமே.

சுகுமாறன் நீங்கள் தடி எழுத்துக்களில் போட்டிருக்கும் பகுதிக்கு முன்பு (இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் பலரும் சொல்வது..) என்ற இந்த வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். பலரும் சொல்வது இது…(என்பதி)இதிலாவது அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோமே என்று ஒரு சந்தோஷம். சரியா?

வவ்வால்,
“தனியார் தொடக்க பள்ளிகளில் இட ஒதுகீடே இது வரை இல்லை ,இட ஒதுகீடு கொண்டுவரலாம் என ஒரு முடிவு எடுக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளது!” – தகவலுக்கு நன்றி.

இங்கும் இட ஒதுக்கீடு தேவை என்பதையே பத்ரி கூறியுள்ளார். நானும் வழி மொழிந்தேன்.
எப்படி உங்களல் – “இந்த கட்டுரையாசிரியர் சுற்றி வளைத்து இட ஒதுக்கீடு கோராதீர்கள் என்பதையே மறைமுகமா சொல்ல வருகிறார் போல் உள்ளது.சரியான உள்குத்து கட்டுரை:-))”// இந்த முடிவுக்கு வரமுடிந்தது? ஒருவேளை சொல்ல வந்த கருத்தை முறையாகச் சொல்லாமல் விட்டு விட்டேனா…அல்லது நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களா? முதல் காரணமாயிருப்பின், மன்னிக்க.{சரக்கு அவ்ளோதான் :-) }

1:36 AM
 Dharumi said…
சந்திப்பு,
புரியக் கூடிய விஷயத்தை புரிய முடியாதபடி எழுதி சா.தி. களுக்குக் கொடுத்த கஷ்டத்திற்காக ரொம்ப கோவிச்சுக்காதீங்க…

1:36 AM
 Dharumi said…
ravi srinivas,
i have responded to your comments in a separate post. have a look at that.

10:59 PM

160. இன்னொரு guinea pig – மதுமிதாவிற்கு.

வலைப்பதிவர் பெயர்: G. Sam George
வலைப்பூ பெயர் : தருமி
சுட்டி(url) : http://dharumi.weblogs.us/

ஆங்கில வலைப் பூ: http://sixth-finger.blogspot.com
புகைப்படங்களுக்கான வலைப்பூ: http://singleclicks.blogspot.com/
ஆயினும் அளிக்கப்படும் தகவல்கள் என் தமிழ்ப்பதிவை அடிப்படையாகக் கொண்டவையே.

ஊர்:  மதுரை
நாடு:  நம் நாடுதான்.

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: அது ஒரு விபத்துதான்.(விபத்து எனக்கல்ல!)முதலில் பார்த்தது தேசிகனின் பதிவு. அதன் மூலம் மெரினா கடற்கரைப் பதிவர் கூட்டத்திற்கு ஆஜர். அங்கே கிடைத்த உந்துதல்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :24.04.05

இது எத்தனையாவது பதிவு:160

இப்பதிவின் சுட்டி(url):http://dharumi.weblogs.us/2006/05/30/225

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: கொஞ்சூண்டு மொழிக் காதல்; இத்தினிக்கூண்டு சமூக அக்கறை; அதோடு, 37 ஆண்டு ஆசிரியனாக இருந்து, நித்தம் நித்தம் பத்து ஐம்பது பேரை ஆடியன்ஸாக வைத்திருந்து, ஓய்வு பெற்றதும் ஏற்பட்ட ‘காலி இடம்’ — இம்மூன்றின் ஒட்டு மொத்தக் கூட்டுதான் பெருங்காரணி.

சந்தித்த அனுபவங்கள்:

சந்தோஷமான அனுபவங்கள்: (சின்னச் சின்ன வயது ஆட்களிடமிருந்தும்கூட) ஆச்சரியப்பட வைக்கும்  தீர்க்கமான சிந்தனைகள்; ஆழமான அறிவு; மொழிப் பற்று; மொழி ஆளுமை.

வருத்தமான அனுபவங்கள்: படித்துப் பட்டம் மட்டுமின்றி பெருந்தொழிலில் இருப்பது மட்டுமின்றி, நல்ல அறிவிருந்தும் அதை அற்பவழியில் செலவிடும் பலரைப் பார்ப்பது.

பெற்ற நண்பர்கள்: நிறைய; ஆயினும் அந்த நண்பர்களில் மிகப்பலரும் (ஒரு சீனியர் பதிவாளர் அறிவுறுத்தியதுபோல்) out of sight out of mind என்பார்களே அதே போல் பதிவிட்டால் மட்டுமே இந்த நட்பு இருக்கும் என்ற நிலையில் இருப்பது ஒரு சோகம்.

கற்றவை: வலைப்பதிவர் உலகம் ஒரு microcosm. வெளியுலகத்தின் சிறு நகல். எல்லாவித மனிதக் குண நலன்களையும் இச் ‘சிறு வெளியில்’ பார்ப்பதே ஒரு தொடர்கல்விதான். முடிவில்லாதது.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: முழுசு.  நினைத்ததை எழுதுகிறேன்.

இனி செய்ய நினைப்பவை: இதுவரை செய்ததையே மேலும் தொடருவது.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
 முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு இங்கே…

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
தமிழ்ப் பதிவுகள் இன்னும் முதிர்ச்சியடையவில்லை; இன்னும் தவழும் குழந்தைதான். ஆனால், இது வளர்ந்து சமுதாயத்தின் ‘நான்காவது தூணின்’ முக்கிய ஒரு பகுதியாக உயர்ந்து, சமூகத்தின் ‘thinking tank’ ஆக மாறும் நாள் விரைவில் வர பேராவல்.
நகைச்சுவைப் பதிவுகளும், மற்ற வித light hearted பதிவுகளே அதிகமாக வந்து கொண்டிருந்தாலும், சமூகத்தைப் பிரதிபலித்து – ஏன், அந்தச் சமூகத்தை வழி நடத்தவும் – தமிழ்ப் பதிவுகள் எல்லோராலும் உற்று நோக்கப்படும் காலம் வரவேண்டும். பேராசை இல்லையே?

 

if need be: http://i2.tinypic.com/1198htd.jpg