172. நான் ஏன் ம(ன)தம் மாறினேன்?…9

இஸ்லாம் மதத்தைப் பற்றிய என் ஐயங்களை என் மதங்களைப்பற்றிய 7-ம் பதிவில் எழுப்பியிருந்தேன். பொதுவான சிலவற்றைப் பற்றிப் பேசிவிட்டு ‘இனி என் ஐயங்கள்’ என்று தலைப்பிட்டு 20 ஐயங்களைப் பட்டியலிட்டிருந்தேன். இதற்கு விளக்கமளிக்க வந்த பதிவுகளில் என் முதல் கேள்விக்குப் பதிலளிக்கப்பட்டுவிட்டது. நன்றி.

1.)பழைய ஏற்பாடு இரு (கிறித்துவம், இஸ்லாம்)மதத்தினருக்கும் பொது எனப்படுகின்றது. கிறித்துவர்களின் பைபிளில் ஆதாம் – ஏவாள் படைப்பைப் பற்றி சொல்லும்போது ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்பதை, இது ஓர் ஆணாதிக்க விளக்கம் என்று கூறியிருந்தேன். ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ? – இது என் கேள்வி.

(கேட்டிருக்கும் கேள்விகளில் இந்த முதல் கேள்வியை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அக்கேள்விக்கு நண்பர்கள் பதில் கொடுத்துவிட்டார்கள். அந்த முதல் பெண்ணுக்கு ‘அவ்வா’ (AWWA) என்று பெயர் குரானில் சொல்லியுள்ளதாக விளக்கியுள்ளார்கள். விளக்கத்திற்கு நன்றி. )

இதன் பிறகு சில பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவைகளை நான் கேள்விகளாகவே பொதுவில் வைக்கவில்லை. நான் அறிந்தவரையில் சொன்ன சில காரியங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அவற்றைப் பொறுத்தவரை எனக்கு அவைகள் அவ்வளவு முக்கியமானவைகளாகத் தெரியவில்லை. .

1) குர்ஆன் குகையில் கொடுக்கப்பட்டதா? – குரான் எப்படி எங்கே கொடுக்கப்பட்டது என்பது எனக்கு முக்கியமாகப் படவில்லை. கொடுத்தவைகளாகக் கருதப்படுபவைகளில் எனக்கு வந்த ஐயங்களைத்தான் நான் தொகுத்திருக்கிறேன்.

2) முஹம்மது நபி எழுதப்படிக்கத் தெரிந்த வர்த்தகரா ? – சில கருத்து வேறுபாடுகள் உண்டென்று படித்ததைக் கூறியுள்ளேன். அவர் கற்றவரா கல்லாதவரா என்ற விவாதத்தை நான் வைக்கவில்லை. எப்படியிருந்திருந்தாலும் அது எனக்கு உடன்பாடே.

3) சில போர்களில் தோற்றது ஏன்? god is always on the side of bigger battalion என்று சொல்லப்படுவது நினைவுக்கு வந்தது!

4) இஸ்லாத்தில் பெண்களின் நிலை:

Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார் . – தருமி

இதுவும் நான் கேள்வியாக வைக்காத ஒன்று. ஆயினும், நான் சொன்னதையும், அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலையும் (கீழே கொடுக்கப்படுள்ளது) படித்துவிட்டு, படித்தவர்கள் அவர்களே ஒரு தீர்மானத்திற்கு வந்து கொள்ளட்டும். அதில் எனக்கு விவாதத்திற்கு இடமோ தேவையோ இல்லை. நிச்சயமாக எனக்கு இந்த விளக்கம் சரியானதாக இல்லை. வளர்ப்பு மகனின் விவாகரத்திற்குப் பின் அந்தப் பெண்ணையே வளர்ப்புத் தந்தை மணம் புரிவது தவறல்ல என்ற இந்த கூற்று எனக்கு வியப்பையே அளிக்கிறது.

“இதில் என்ன குற்றம் கண்டீர்? ஒரு பெண்ணை கணவன் விவாக ரத்து செய்தபின் இன்னொருவர் மறுமணம் செய்யக் கூடாது என்கிறீர்களா? அல்லது வளர்ப்பு மகன் உண்மையான மகனாவான் என்கிறீர்களா ?”

5) படைப்புக்கொள்கை – “இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால் , நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான் ? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?”

 - இதற்கும் நான் பதில் சொல்லத் தயாரில்லை. முற்றிலும் குரானுக்கு எதிர்மறையான விவாதம் அது; முடிவிருக்காது; விவாதிப்பதில் எந்த பயனும் இருக்காது.ஆயினும் என் இரண்டாவது கேள்விக்குரிய பதிலாக இதை எடுத்துக் கொள்கிறேன்.

 -. 3-வது கேள்விக்கு அது கிறித்துவ மத நூல்களில் நடுவில் ஏற்பட்ட மாற்றங்களையும், திரிபுகளையும் பொருத்தது என்று கூறப்படலாம். அதனையும் ஒதுக்கி விடுவோம்.

 - 6-வது கேள்வி சுவனம் பற்றியது. நேரடி பதில் இதற்குக் கொடுக்கப்பட்டு விட்டதா என்பதை நடுநிலை நோக்கர்கள்தான் கூற வேண்டும்.

“56:22 (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்” அவர்கள் பெண்கள் என்பதானாலும், சுவனம் செல்லும் ஆண்களுக்கு “44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்). மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.” என்பதனாலும் – ஆண்களுக்கு இத்தகைய சுவனம் காத்திருக்கிறதென்றால் பெண்களுக்கு எப்படிப்பட்ட சுவனம் என்று கேட்டிருந்தேன். குதர்க்க விவாதம் என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டு விட்டது !

ஆக, என் 20 கேள்விகளில், முதல் கேள்வி, கேள்வியே தவறானது என்று ஒப்புக்கொள்கிறேன். இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டுள்ளன. அந்தப் பதில்களை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேனா என்பது வேறு விஷயம்.   அதன்பின் முக்கியமாக 4-வது கேள்வி – அது எனக்கு மிக முக்கியமாகப்படுகிறது. (இந்த வன்முறை கடவுளுக்கும்-மனிதனுக்கும் நடுவே வருவது ஆச்சரியம் மட்டுமல்ல; அதி பயங்கரமும் கூட.)மீதிக் கேள்விகளும் இருக்கின்றன.

இந்த நிலையில் புதிதாக ஒரு கேள்வியும் சேர்ந்து விட்டது. அதை பட்டியலில் சேர்த்து விடுகிறேன். திருப்திகரமான பதில் கிடைத்த முதல் கேள்வியை விட்டுவிட்டு இந்தக் கேள்வியை என் அந்தப் பழைய பதிவில் சேர்த்துள்ளேன். just an updating.

அந்தக் கேள்வியை இப்போது 5-வது கேள்வியாக:

குர்ஆன் 25 : 68:  ‘அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.(காரணத்தோடு கொல்லலாம் என்று பொருள் படுகிறதே?’ – கொலை செய்பவனுக்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதா பெரிது?)

5:32:  “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”  என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம்.

5:33  அல்லாஹ்வுடனும், அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு, பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல், அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுதல்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல்…

கிறித்துவத்தில் ‘கொலை செய்யாதே’ என்பது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; சமணத்தில் நுண்ணுயிர்களைக் கூட கொல்லக் கூடாதென்ற தத்துவம்; பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்கிறது தமிழ்மறை; எல்லா உயிரும் ஒன்றே, உயிர்க்கொலை தவறு என்கிறது இந்து மதம். இந்த கோட்பாடுகளில் எந்த clasue, sub-clause-ம் கிடையாது, அதாவது இந்தந்த மாதிரி நேரங்களில் மட்டும் கொலை செய்யலாம் என்ற விலக்குகள் தரப்படவில்லை. கொலை என்பது ஒட்டுமொத்தமாக தவறு; பாவம் என்றுதான எல்லா மதங்களும் போதிக்கின்றன.

இஸ்லாமியத்தில் மட்டும் கொலை செய்வதற்கு  ஏன் சில விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏதாவது ஒரு சரியான காரணம் கொண்டு -
கொலைக்குப் பழியாக -
குழப்பத்தைத் தடுக்க -
அல்லாஹுடனும், அவன் ரஸுலுடன் போர் செய்பவர்களை -
குழப்பத்தை உண்டாக்குபவர்களை -

இந்த சமயங்களில் கொலை செய்வது சரியா?

கொடூரக் கொலைகாரர்கள்கூட தங்கள் கொலைக்குக் காரணம் சொல்ல முடியுமே. அப்படியானால் ஒவ்வொரு கொலையும் யாரோ ஒருவரால் – நிச்சயமாக கொலை செய்தவனால் – காரண காரியங்களோடு நியாயப்படுத்த முடியுமே!  அதோடு பழி வாங்குவது, அதற்காகக் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறதே! இவைகள் எப்படி சரியாகும்.

புரிதலுக்காகவே இந்தக் கேள்வி.

163. நான் ஏன் மதம் மாறினேன்…? – 5

 

மற்றைய பதிவுகள்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 

 

இந்து மதம் – ஒரு பதில்.
இந்த சீரியல் பதிவுகள் போட்டபின் பல மாதங்கள் கழித்து இந்து மதத்தை ஏன் ‘ஆட்டைக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை’ என்ற ‘குற்றச்சாட்டு’டன்  இப்போது ஒரு பின்னூட்டம் வந்துள்ளது. அப்பின்னூட்டம் நீளமானதாகவும், என் பதில் அதனிலும் வெகு நீளமாகவும் ஆனதால் இதை ஒரு ‘பின்னூட்டப் பதிவாக’ இங்கு பதிவிடுகிறேன். தொடரின் எண்களை அதற்காக வேறு விதமாய் வரிசைப்படுத்தியுள்ளேன்.

பின்னூட்டம்:

பொன்ஸ் Says:
June 6th, 2006 at 5:19 pm e 

தருமி,
உங்க நான் ஏன் மதம் மாறினேன் 7 பாகமும் இப்போத் தான் படிச்சு முடிச்சு சுடச் சுடப் போடும் பின்னூட்டம்:

* உங்க உழைப்பு – பாராட்ட வார்த்தையே இல்லை.. இப்படிப் பட்ட பேராசிரியரோட அறிமுகமும், சரிக்கு சரியா பேசும் பாக்கியமும் கிடைச்சதுக்கு எனக்கு முதல்ல ஏற்பட்டது பெருமை தான். இந்தத் தொடர் முழுவதும் உங்க உழைப்பும், பக்குவமும் தெரியுது. ரொம்ப நல்லா இருக்கு.

* இஸ்லாமையும் கிறித்துவத்தையும் விமர்சிச்ச அளவுக்கு நீங்க இந்து மதத்தை விமர்சிக்கலைன்னு தோணுது. ஏனோ தடவிக் கொடுத்து விட்டுட்டீங்க.. இங்க இருக்கும் பிரச்சனைகளை ஏற்கனவே பல பேர் பல மாதிரி புத்தகங்களில் போட்டுட்டாங்க / வேண்டிய அளவுக்கு விமர்சிச்சிட்டிடாங்க என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். என்ன இருந்தாலும் எங்க மதத்தை நீங்க எப்படி விமர்சிக்காம, உங்க பாஷையில எங்களை மட்டும் எப்படி ஆட்டைல சேர்த்துக்காம விடலாம்?!! கொஞ்சம் கோபம் தான்

* உலகம் தழுவிய மதம்னு எதுவுமில்லை.. சரிதான்..
மதத்தைப் படைச்சது மனுஷன் .. சரிதான்..
ஆனா, மனிதம் என்னும் மதத்தைத் தழுவும் முன், மற்ற மதங்கள் தேவையா இருக்கு.
அந்த ultimate சரணாகதி நிலையை அடைபவன், மனிதாபிமானம் அல்லது இன்னும் விரிவானதா எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்வதுதான் கடவுள்ன்னு நிச்சயம் தெரிஞ்சு வச்சிருக்கான்.

நீங்க சொல்வது போல் இந்து மதம் எனக்குப் பல சமயங்களில் வெறும் சாயும் தூணா, பளுதாங்கிக் கல்லாத் தான் பயன் பட்டிருக்கு..

ஆனா, பல அறிவியல் உண்மைகளையும் மனிதவியல் உண்மைகளையும் மனிதர்களுக்குச் சுலபமாப் புரிய வைக்க மதத்தைத் தவிர வேற வழி இல்லை.

அழும் குழந்தைக்கு போலீஸ்மாமா கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்னு சொல்லி சாதம் ஊட்டுவது போல் தான். குழந்தை பெரியவன் ஆகும் போது ஒண்ணு போலீஸ் மேல பயம் போய்டும்.. தானே சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துக்கும்…  இல்லைன்னா, போலீஸ் மேல பெரிய அளவில் பயம் வரும்.. வெறுப்பு வரும். போலீஸுக்கு விரோதமா போகணும்னு தோணும்.. இது ஒரு obsession ஆகிடும்.. அவ்வளவு தான்.. தீவிர மதவாதிகள் இந்த இரண்டு திக்கில் ஒண்ணுல இருந்திடறாங்க..

போலீஸ் ஒரு கருவி தான்னு புரிஞ்சிக்கிடற குழந்தைகள், அப்படிச் சின்னவயசுல சாப்பிட உதவின போலீஸை மரியாதையா பார்க்கிறாங்க.. நன்றியோட இருக்காங்க.. தன் மக்களுக்கும் அதே சொல்லி சாப்பாடு கொடுக்கிறாங்க..
ஆக இந்த பரவச, தீவிர, தெளிவு நிலைக்குப் போகும்முன் மதம் வேணுமே? குழந்தை வளர்ந்து சாப்பிடுவதன் பெருமையை உணரும் முன்னே அதைச் சாப்பிட வைக்க போலீஸ் வேணுமே?

* அடுத்த கேள்வி, ஆதாரம்… எந்த தியரிக்கும் ஒரு base வேணும்.. அதாவது, Basic assumption… இது கடவுள் பத்தி கேள்வி கேட்கும் என் நண்பர்களுக்கு பொதுவா நான் சொல்றது..

a, b, c, dன்னு alphabets எங்கிருந்து வந்தது? இது தான் அ ந்னு சுழிச்சு எழுதினப்போ, எப்படி நம்பினீங்க? 1, 2ன்னு நம்பர்களை நம்பினாத் தானே, கூட்டல் கழித்தல்னு ஒரு கணக்குப் பாடத்துக்கு அடுத்து போக முடியும்?! சில விசயங்களைக் கேள்வி கேட்காம நம்பித்தானே ஆகணும்?

நம்மையும் மீறின ஏதோ ஒரு சக்தி இருக்கு.. அது gravitational force-o இல்லை, வேற ஏதாச்சும் attractive/repulsive force-ஆன்னு எப்படித் தெரியும்?

பொதுவா நியூட்டனோட “Every Action has equal and opposite Reaction” என்ற விதி (இரண்டாவது விதி??) எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்த reactive force-ஐ நான் பல விஷயங்களுக்குப் பொறுத்திப் பார்ப்பேன்.. எங்க வீட்டு மல்லிச் செடி கிட்ட நாளைக்கு நிறைய பூ பூக்கணும்னு சொல்லி தண்ணிவிட்டா, அதுவும் அடுத்த நாள் நல்லா பூக்கும்.. நாய் பூனை எல்லாம் நம்ம சொல்றதைக் கேட்பது ஒண்ணும் பெரிய விஷ்யம் இல்லை.. ஆனா, செடியும் பூவும் கேட்பது என்னை பொறுத்தவரை ஏதோ cosmic rays மாதிரி funda இருக்கணும்..எனக்கும் அந்தச் செடியோட எண்ண அலைகளுக்கும் நடுவில்.. – சில சமயத்தில் ஏதோ லூசுத் தனமான நம்பிக்கையா எனக்கே தோணினாலும், இதை நான் பார்த்திருக்கேன்..

சில பேரோட நமக்கு ரொம்ப சீக்கிரமா ஒத்த அலைவரிசை வந்துடும்.. பழகுதல், பேசுதல் போன்ற அவசியங்கள் இல்லாம ஒண்ணும் காரணமே இல்லாம, சிலரைப் பிடிக்கும்.. பேசின பின், பழகின பின் அந்தக் கருத்துகள் உறுதிபெறும்.. இதுக்கு என்ன காரணம்? ஏதோ ஒரு கெமிஸ்ட்ரின்னு இப்போதைய சினிமாக்களில் சொல்றாங்க.. அந்த மாதிரி ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத attractive force ரெண்டு பேருக்கும்/பொருளுக்கும் இடையில் இருக்கு.. சரியா?

அப்போ அந்த force-உக்கு ஏதாச்சும் பேர் வேணுமே?

* மத்தபடி, உங்க கட்டுரை படிச்சு எனக்கு இந்து மதத்தின் மேல மதிப்பு அதிகமாய்டுச்சு.. சாதி வேறுபாடுகளைத் தவிர்த்து இந்துமதத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. மனிதனை மனிதனா மதிக்கணும்.. ஆடு மாடுகளையும் மற்ற அஃறிணை உயிர்களையும் மதிக்கணும், பெண்களை சக்தியின் உருவமாப் பாராட்டணும் என்பன போன்ற தத்துவங்கள் ரொம்ப உயர்ந்ததா தெரியுது. கடவுளை வணங்க இதில் கூறியிருக்கும் முறைகளும், மனிதர்கள் தானே விரும்பிச் செய்வது தானே – voluntary?! தீச்சட்டி தூக்குதல், மண்சோறு சாப்பிடுதல் போன்ற சில மூட நம்பிக்கைகளை (இதுவும் இடையில் வந்ததாகத் தான் இருக்கணும்) விட்டு பார்த்தால், இந்து மதத்தின் பல்வேறு கடவுள் பூஜை சமாச்சாரங்கள், உடல் அல்லது மனப் பயிற்சியே..

* இந்து மதத்தின் அறிவியல் பத்தி ஒரு புத்தகம் படிச்சிருக்கேன்.. பிரம்மா, விஷ்ணு, சிவன், பிள்ளையார், அம்மன், முருகன் எல்லாருடைய உருவத்தையும் நம்ம உடலின் பாகங்களுக்கு ஒப்பிட்டு வரும். அந்த விதத்தில் Xray, Microscope எதுவும் இல்லாமலேயே பல அறிவியல் சமாச்சாரங்களைக் கண்டு பிடிச்சு அனாயாசமா மதத்துக்குள்ள மறைச்சு வச்சிட்டு போன நம்ம முன்னோர்கள் மேல எனக்கு ரொம்ப மரியாதை உண்டு.

* அடுத்து எந்த மதமும் செக்ஸ் பத்தி ஓபனா பேசாதேன்னு சொல்லுது.. ஆனா, மதங்களில் அவற்றைப் பற்றி மறைமுக கருத்துச் சிதறல்கள் இல்லையா? எனக்கு மற்ற மதங்களைப் பத்தி அத்தனை ஆழமாத் தெரியாது.. என்னோட மதத்தைப் பத்தி சொல்றேன்.

மாதொரு பாகன், நெஞ்சில் இலக்குமியை வைத்திருக்கும் மகாவிஷ்ணு இப்படி பல விதங்களில் மறைமுகமா செக்ஸ் பத்தியும் மதங்கள் பேசுது.. என்ன, தெளிவா பேசுவது இல்லை.. தெரிஞ்சிக்க வேண்டிய நேரத்தில் மக்கள் அதைத் தெரிந்துகொண்டால் போதும் என்பது தான் முன்னோர்களின்(கவனிக்க, கடவுளின் அல்ல  ) கொள்கை. முன்னாடியே தெரிஞ்சால் இப்போ இருப்பது போல் நோய்கள் இன்னும் அதிகமாய்டும்..

இன்னோரு உளவியல் ரீதியான வியூவும் இருக்கு.. இதுவும் சமீபத்துல படிச்சது தான். ரொம்ப அது பத்தி பேசப் பேச, கொஞ்ச நாளில் மற்றவை(உணவு, உடை) போல செக்ஸும் அலுத்துப் போய்விடும் ஆபத்து உள்ளது. மறைபொருளாக வைத்திருப்பதில், அதில் ஒரு ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும்.. That will keep the marriage bonding more thicker.

I guess its becoming too long.. ultimately,

//உன்னையும் என்னையும் ‘மனிதம் உள்ள மனிதனாக’ வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த ‘வெளிச்சத்திற்கு’(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?// — இது உண்மை

ஆனால், இந்த வெளிச்சத்திற்கு வரும் முன், மதம் தேவை.. மனிதனை ஒரு நிலைப் படுத்த, மனிதன் மனிதம் உள்ள மனிதனாக இருப்பதன் அவசியத்தை வலியுறுத்த – அன்பாலோ, கட்டாயத்தாலோ!! இன்றைய காலகட்டத்தில் மதம் தேவை.. ஆனால் இன்னும் கொஞ்சம் நாளில் உலகமயமாக்கப் பட்ட நாடுகள் தழுவிய மதமாக உருவெடுக்கும்.. இல்லைன்னா, மதச் சண்டைகளால, அடுத்த உலக யுத்தம் வந்து மொத்தமா அழிஞ்சு போய் மறுபடி பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கும்..

இக்கேள்விகளுக்கு என் பதில்:

¼br /> பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றி.

//இந்து மதத்தை மட்டும் எப்படி ஆட்டைல சேர்த்துக்காம விடலாம்?!! //

முதல் பத்தியிலேயே ஒன்று சொல்லியிருந்தேனே…:இது ஒரு மதமல்ல; ஒரு வாழ்க்கை நெறி’ – எல்லோரும் சொல்லும் இதற்கு என்ன பொருள் என்று எனக்குப் புரிந்ததில்லை”. இந்து மதம் என்பதைஎப்படி வரையறுப்பது என்பதே ஒரு பிரச்சனையல்லவா?
1. ப்ராமணீய இந்து மதம் (உபநிஷத்தும், வேதங்களும் உள்ளடைக்கியது; மேலும் சாஸ்திர சம்பிரதாயங்கள் என்ற கட்டுக்கோப்பு உடையது); இவைகளோடு கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
2. இரண்டாவது, (இந்துமத) தத்துவங்கள் – இதை வரையறுப்பதிலும் குழப்பம் (எனக்கு) – உதாரணமாக, நம் ராதாகிருஷ்ணன்,ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஏன் ஓஷோவையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இவர்கள் பேசிய தத்துவங்களை இந்தியத் தத்துவங்கள் என்றழைப்பதா, இந்து மதத் தத்துவங்கள் என்றழைப்பதா?
3. smaller gods என்று சொல்லப்படும் சிறு தெய்வ வழிபாட்டைக் கைக்கொள்ளும் பெரும்பான்மை மக்கள் – சாதி அமைப்பில் கீழே தள்ளப்பட்ட இந்த மக்களை இந்துக்கள் என்றும், அவர்களின் ‘மதத்தை’ இந்து மதம் என்றும் அழைக்கலாமா? (ஏற்கெனவே நான் சொல்லியுள்ள காஞ்சையா இலியா-வின் கருத்துக்களை இங்கு நினைவில் கொள்ளவும்.)
அப்பாவுக்குப் பெயர் ராமன் (வைஷ்ணவ கடவுளின் பெயர்) என்று இருக்கும். பையனுக்கு முருகன் என்றிருக்கும். அப்பா வைணவர், பையன் சைவக்காரன் என்று கொள்ள முடியுமா? ப்ராமணர்களைத் தவிரவும் ,மற்றவர்களிடம் போய் நீங்கள் த்வைதிகளா, அத்வைதிகளா என்று கேட்டுப் பாருங்கள். படித்த நண்பர் ஒருவரிடம் – ப்ராமணர் அல்லாத இந்து – இந்து மத ‘பெருந்தெய்வங்களின்’ பெயர்களையும், உறவுகளையும் கேட்டுப் பாருங்களேன். அநேகமாக பலருக்கும் தெரிந்திருக்காது.

இப்படி ஒரு amalgamation- ஆக இருக்கும் ஒன்றே இந்து மதம் என்று பொத்தாம் பொதுவாக அழைக்கப்படுகிறது. ஏன் வேதங்களைப் பின்பற்றுகிறீர்கள் என்று தாழ்த்தப்பட்ட மக்களைக் கேட்டால் என்ன பதில் வரும்?  ஏன் சுடலைமாடனையும், மாரியாத்தாவையும் கும்பிட்டுக்கொண்டு, பாத யாத்திரை போய்க்கொண்டு, கடாவெட்டி பலிகொடுத்து, மண்சோறு சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால் முற்படுத்திக் கொண்டவர்கள் என்ன சொல்வார்கள்?  இருவருமே இது எங்கள் பழக்கம் இல்லல என்பார்கள். இங்கே பொதுவில் இந்து மதத்தை நோக்கி எந்தக் கேள்விகளையும் கேட்க முடியாது என்பதே நிதர்சனம்.
மற்ற மதங்களை அதுவும் ஆபிரஹாமிய மதங்களை நான் Organized religions என்றழைக்கிறேன். இங்கு அதற்கென ஒரே ஒரு “புத்தகமும்”, ஒரு தலைமையும், கட்டுக்கோப்பும் உண்டு. Chance to raise pointed questions are there only in these organized religions. அதற்காகவே அந்த மதங்களைப் பற்றி என் ஆய்வை கொஞ்சம் விஸ்தாரமாக வைத்தேன். ஆயினும் இந்து மதத்தை ‘ஆட்டைக்குக் சேர்க்கவில்லை’ என்றதும் அதற்கென சில வேடிக்கையான interpretations வந்தன.

//இந்த பரவச, தீவிர, தெளிவு நிலைக்குப் போகும்முன் மதம் வேணுமே? குழந்தை வளர்ந்து சாப்பிடுவதன் பெருமையை உணரும் முன்னே அதைச் சாப்பிட வைக்கபோலீஸ் வேணுமே? //
மதங்களை போலீசுக்கு பலரும் ஒப்பிடுவது ஒரு ஆச்சரியம்தான்.நீங்க சொன்னது ரொம்ப சரி. ஏன் அப்படி சொல்றேன்னா, நானும் அதத்தான் சொல்லியிருக்கேன். ” சிறு வயதில் கடவுள் பயம் தேவை – மனத்தை நல்வழிப் படுத்த;வயதும், மனமும் வளர வளர அந்தக் கடவுள் concept தேவையில்லை…”//எந்த தியரிக்கும் ஒரு base வேணும்.. அதாவது, Basic assumption… //
எந்த தியரிக்கும் ஒரு base வேணும்..அதைத்தான் hypothesis என்கிறோம். அது  thesis ஆவது எப்பொதென்றால் நமது hypothesis நிரூபிக்கப்படும்போது மட்டுமே. நிரூபிக்கப் பட முடியாது போனால் அது wrong  or disproved hypothesis என்றளவிலேதான் இருக்கும். இதற்கடுத்த alphabet, numerals, வைத்து நீங்கள் கொடுத்திருக்கும் உதாரணம் கொஞ்சம் உதைக்கிறது!

//சில விசயங்களைக் கேள்வி கேட்காம நம்பித்தானே ஆகணும்? //
அப்டியா? ஏன்? எதுக்காக?
நிச்சயமா எதையும் கேள்வி கேட்கலாமே. அதற்குப் பதில் கிடைக்கிறதா, இல்லையா என்பது வேறு. பைபிளில் ஒரு வசனம்: ‘கடவுள் பயமே ஞானத்தின் ஆரம்பம்’ என்று. அதைவிட ‘கேள்விகளே ஞானத்தின் ஆரம்பம்’ என்பது எனக்குப் பிடிக்கிறது.  கேள்வி கேட்பது தவறென்று சொல்வது மதங்களே. ஏனெனில் கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் எந்த மதமும் ஆட்டம் காணும் என்பது நிச்சயம். எனக்கு இந்து மதத்தின் மேல் முன்பு ஒரு விஷயத்தில் பிடித்திருந்தது. ஏகக் கடவுள் (ப்ரம்மம்), முப்பது முக்கோடித்தேவர், கடவுள் மறுப்பு (கபிலம்) இப்படி பல நம்பிக்கைகளையும் உள்ளடக்கி இருக்கிறதே; பரவாயில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் மனுவில் ப்ராமணன் எக்குற்றம் செய்யினும் மன்னிக்கப்பட வேண்டியவன்; ஆனால் கடவுளைப் பற்றி, வேதங்களைப் பற்றிக் கேள்வி கேட்டால் அவன் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் என்று இருப்பதாக அறிந்த போது, ஓகோ, இந்து மதமும் இந்த விஷயத்தில் இப்படிதானா என்று புரிந்து கொண்டேன்.! எல்லா மதங்களுமே இந்த “தற்காப்பு நடவடிக்கைகளை” நன்கு எடுத்து தயாராகவே இருக்கின்றன். எல்லாம் வரும் முன் காக்கும் செயல்தான்.

 

//எங்க வீட்டு மல்லிச் செடி கிட்ட நாளைக்கு நிறைய பூ பூக்கணும்னு சொல்லி தண்ணிவிட்டா, அதுவும் அடுத்த நாள் நல்லா பூக்கும்..//
எனக்கும் இந்த அனுபவம் உண்டு. ஆனால் என் பேச்சுக்கு அவைகள் சொன்னபடி கேட்பதேயில்லை. அதுவும் சில செடிகளைச் செல்லமாக வைத்திருந்து, ரொம்ப அன்பாகக் கூறியும் அவை பட்டுப் போயுள்ளன!

//சாதி வேறுபாடுகளைத் தவிர்த்து இந்துமதத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. //
இரண்டு பதில்கள்:
1. சாதி வேறுபாடுகள் தவிர்த்தும் பல பிரச்சனைகள் உண்டல்லவா? மேலே சொன்னபடி எதை எதையெல்லாம் இந்து மதத்திற்குள் கொண்டு வருவது? இந்து மதம் என்பது ஒரு -  is it a single entity? என்ற கேள்வி இப்போதுள்ள சூழலில் பூதாகரமாக வடிவெடுக்கிறதே. காஞ்சாயா இலியா (ஏன், நம் தமிழ் மணத்திலும் இப்போது இந்தக் கேள்வி பொதுவில் வைக்கப்பட்டுள்ளதே) சொல்வது போல பெரும்பானமை இந்தியர்களை (பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்) இந்துக்கள் என்றழைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாரே. அக்கருத்து எனக்கும் உடன்பாடே. அப்படியானால், நான் ஏற்கெனவே சொன்னதுபோல இந்துமதமும் ஒரு மைனாரிட்டி மதமே (கிறித்துவம், இஸ்லாம் மாதிரியே!) முதல் பிரச்சனையே: எது இந்து மதம்? என்பதே.

2. இன்று நம் சமூகத்தைத் தாக்கும் ஊழிக்காற்று இந்த சாதி வேறுபாடுகள்தான். இந்து மதத்தை விட்டு சாதிப் பிரிவுகளைப் பிரிக்க முடியாது. (பிரிக்கக் கூடாது என்று நம் தேசத்தந்தையே கூறி விட்டார்!) இந்து மதம் தழைக்கும் வரை சாதி வேறுபாடுகள் தொடர்ந்தே வரும். இதை விடவும் பெரும் பிரச்சனை இருக்குமா – இந்து மதத்தைப் பொருத்தவரை? இந்து மதமும், சனாதன தர்மமும் ஒன்றைவிட்டு ஒன்று இருக்குமா? முடியாதெனவே நினைக்கிறேன். ஆகவே இந்த ஒரு பிரச்சனை போதுமே! இதனால்தான் சாதிகளை ஒழிக்க இந்து மதத்தை ஒழிக்கணுமா என்ற ஒரு கேள்வி எழுகிறது.  அனால் அது தேவையில்லை. கிறித்துவம் இரண்டாக – கத்தோலிக்கர், பிரிவினைக்காரர்கள் – என்று பிரிந்தது போல, இங்கும் ஒரு மார்ட்டின் லூதர் வந்து இந்து மதத்தை இரு பிரிவுகளாகப் பிரித்தால் நலமாயிருக்கும் – ஒரு பக்கம் மைனாரிட்டிகளான ப்ராமணிய இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவர்கள்; ‘சிறு கடவுளர்களை’ வணங்கும் மற்ற பெரும்பான்மையான மக்கள் சார்ந்த இந்து மதம் என்ற இரு பிரிவுகளாக நமது மக்கள் கணக்கெடுப்பில் மாற்றினால் இந்த சாதிகள் ஒழிய வழிகிடைக்குமா?  இங்கும்கூட கிறித்துவத்தில் உள்ளது போலவே பிரிவினைக்காரர்கள் என்ற பெயரை இரண்டாம் குழுவிற்குக் கொடுத்துவிடலாம்.

//பல அறிவியல் சமாச்சாரங்களைக் கண்டு பிடிச்சு அனாயாசமா மதத்துக்குள்ள மறைச்சு வச்சிட்டு போன நம்ம முன்னோர்கள் மேல எனக்கு ரொம்ப மரியாதைஉண்டு.//
மஞ்சட்காமாலைக்கு கீவாநெல்லி சரியான மருந்து என்று நம் முன்னோர் எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள்? – இது போன்றே பல மூலிகைகள் குணம் பற்றி – without மஞ்சட்காமாலைக்கு கீவாநெல்லி சரியான மருந்து என்று நம் முன்னோர் எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள்? – இது போன்றே பல மூலிகைகள் குணம் பற்றி – without any chemical analysis – எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள் என்ற ஆச்சரியம் எனக்கும் உண்டு. இதே போல் வானியல், கட்டிடக்கலை போன்ற பல விஷயங்களைப் பார்த்து நானும் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனா. இந்த விஷயங்களோடு ‘அறிவியல் சமாச்சாரங்களை மதத்துக்குள்ள மறைச்சு வச்சிட்டு’ என்பது எனக்கு ஒரு கேள்விக்குறியே. நம் மதத்தை உண்மையான மதம் என்று நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தோடு பல விஷயங்கள் எங்கள் மதத்திற்குள் மறைந்திருக்கின்றன என்று கூறிக் கொள்வது எல்லா மதத்தினரும் கைக்கொள்ளும் ஒரு தேவையற்ற போட்டி என்றுதான் நான் நினைக்கிறேன். அணுவின் அமைப்பு நடராசர் சிலையில் உள்ளடங்கி

இருப்பதாக இந்துக்கள் கூறுவதும், எதிர்காலத்தை அப்படியே எங்கள் வெளிப்பாடுகளில்’ (revelation) சொல்லப்பட்டுள்ளது என்று கிறித்துவர்கள் சொல்வதும், space பற்றி எங்கள் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்று இஸ்லாமியர் கூறுவதும் எனக்கு உடன்பாடில்லை. அப்படியே அங்கே அந்தந்தக் கடவுளர்கள் ‘புட்டு புட்டு’ வைத்திருந்தால் ஏன் அவைகள் பெரும்பாலும் மறைந்த மொழியில் சொல்லப்படவேண்டும். straight-ஆக 2+2=4 என்பதுபோல் சொல்லியிருக்கலாமே!

//எந்த மதமும் செக்ஸ் பத்தி ஓபனா பேசாதேன்னு சொல்லுது.. ………..தெரிஞ்சிக்க வேண்டிய நேரத்தில் மக்கள் அதைத் தெரிந்துகொண்டால் போதும் என்பது தான்முன்னோர்களின்(கவனிக்க, கடவுளின் அல்ல  ) கொள்கை. //
உடன்படுகிறேன். ஆனால், செக்ஸ் என்றாலே அது ‘பாவம்’ , அருவருக்கத்தக்க ஒரு விஷயம், celibacy உயர்ந்த விஷயம்(கிறித்துவம்), ‘பெண்ணென்னும் மாயப்பிசாசை’ பார்த்தும்விடாதே; மூடி வை (இஸ்லாம்) என்பது போன்ற மனப்பான்மையை பொதுவாக மதங்கள் (இந்துமதம் இதில் ஒரு விலக்காக இருக்கலாம்)மக்கள் மனதில் ஏற்படுத்துவது தேவையா?

//இந்த வெளிச்சத்திற்கு வரும் முன், மதம் தேவை.. மனிதனை ஒரு நிலைப் படுத்த, மனிதன் மனிதம் உள்ள மனிதனாக இருப்பதன் அவசியத்தை வலியுறுத்த – அன்பாலோ, கட்டாயத்தாலோ!!//
இதையேதான் நானும் சொல்லியுள்ளேன். சிறு வயதில் கடவுள் பயம் தேவை – மனத்தை நல்வழிப் படுத்த; வயதும், மனமும் வளர வளர அந்தக் கடவுள் conceptதேவையில்லை;   என்று சொல்லி, அதோடு………”உன்னையும் என்னையும் ‘மனிதம் உள்ள மனிதனாக’ வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த   என்று சொல்லி, அதோடு………”உன்னையும் என்னையும் ‘மனிதம் உள்ள மனிதனாக’ வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த‘வெளிச்சத்திற்கு’(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?” – என்று முடிவாகச் சொல்லியுள்ளேன்.

ஆக, நம் இருவரின் முடிவுரையும் ஒன்றே!

 

பொன்ஸ்: 

விவாதத்திற்குத் தொடர்புடைய புதிய சுட்டிகள்:

1. http://whatiwanttosayis.blogspot.com/2006/06/blog-post.html – அருள் குமார்
2. http://thekkikattan.blogspot.com/2006/06/blog-post_09.html – Thekkikattan
3. http://pithatralgal.blogspot.com/2006/06/103.html – நாமக்கல் சிபி

154. பிள்ளையாரும் பால் குடித்தார்…

 

 

அது நடந்து எத்தனை வருஷம் இருக்கும்னு தெரியலை; ஆனா எல்லாருக்கும் நினைவில் இருக்கும் என்றே நம்புகிறேன். ஊரென்ன உலகமே ஒரு ஆட்டம் ஆடிப்போச்சு. லண்டன் பிள்ளையார் கோவிலில் குடம் குடமா பிள்ளையார் குடிக்கிறதுக்காகப் பால்  ஊத்தினதைப் படமாக எல்லாம் பத்திரிக்கைகளில் போட்டிருந்தார்கள்.
அன்றைக்கு நடந்தது இன்னும் நல்லா நினைவில் இருக்கு. வீட்டுக்கு வெளியே நான் என் குடும்பத்தாரோடு நின்று கொண்டிருந்தேன் – ஏதோ தெருவும் ஊரும் வித்தியாசமான கல கலப்போடு இருந்தது மாதிரி இருந்ததால். அப்போது எதிர்த்த வீட்டுப் பையன் – ஒன்பதாவது படிக்கிறவன் – அவன் அம்மாவோடும், அக்காமார்களோடும் விரைந்து எங்கேயோ போய்க்கொண்டிருந்தான். வேகமாக எங்களிடம் வந்து ‘பிள்ளையார் சிலை பால் குடிக்கிறதாம்’ என்றான். சரியாக விஷயம் புரிபடாமல் ‘என்னப்பா? ‘ என்று கேட்டேன். அடுத்த தெருவில் ஒரு வீட்டில் உள்ள பிள்ளையார் சிலை பால் குடிக்கிறதாம்; பார்க்கப் போகிறோம்’ என்று சொல்லிவிட்டு ஓடி விட்டான். பிள்ளையாராவது, பால் குடிக்கிறதாவது என்று சிரித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தோம். ஆனாலும் தெருவில் சல சலப்புக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் நாங்கள் – நாங்கள்தான் கிறிஸ்துவர்கள் ஆயிற்றே – வேற சாமி பால் குடிச்சி அதிசயம் பண்ணுதுன்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா என்ன?

கொஞ்ச நேரம் ஆச்சு; அடுத்த தெருவுக்குப் போன எதிர் வீட்டு பையன் ஓடிவந்து ‘நிஜமா அந்த வீட்டுல இருக்கிற பிள்ளையார் பால் குடிச்சார்’ அப்டின்னு சொல்லிட்டு ஓடிப் போய்ட்டான். அப்பவும் நான் கண்டுக்கவில்லை. ஆனால் அடுத்த பத்து பதினைந்து நிமிடத்தில் மீண்டும் ஓடிவந்த பையன் பரவசத்தோடு, ‘எங்க வீட்டுப் பிள்ளையாரும் குடிக்கிறார்; அப்பா உங்களைக் கூப்பிட்டு வரச் சொன்னாங்க’ அப்டின்னான். சரி, பிள்ளையாரத்தான் போய் பார்த்துட்டு வந்துருவோமேன்னு போனேன். அங்கே ஏற்கெனவே பிள்ளையார் பால் குடிச்சிருந்தார். பையனோட அப்பா, நம்ம நண்பர் ராமச்சந்திரன் ஒரு தட்டில் இருந்த பிள்ளையார் முன்னால் அமரிக்கையாக  உட்கார்ந்து பால் குடுக்க, நல்ல பிள்ளையாக பிள்ளையார் கொடுத்த பால் முழுவதையும் குடித்துக்கொண்டிருந்தார்.  ஒரு ஸ்பூனில் பாலைக் கொண்டு போய், அவரது தும்பிக்கை வயிற்றிற்கு மேல் வளைந்து இருக்கும் இடத்தில் வைத்ததும், பிள்ளையார் பாலை சர்ரென்று ஒரு உறிஞ்சு உறிஞ்சார் பாருங்க…அப்படியே நான் அசந்துட்டேன். என்னடா இது கலிகாலமா போச்சேன்னு நின்னுக்கிட்டு இருந்த போது நண்பர் என்னிடம் ஸ்பூனை நீட்டினார். நானும் பாலை ஸ்பூனில் கொடுக்க பிள்ளையார் அதே மாதிரி சர்ருன்னு உறிஞ்சிட்டார். வெலவெலத்துப் போய்ட்டேன்.

இருந்தாலும் புத்தி கேட்கலை. வேற வேற இடத்தில வச்சுப் பார்த்தேன். சில இடத்தில பால் உறிஞ்சப்பட்டது; சில இடத்தில் இல்லை. கொஞ்ச நஞ்சம் இருந்த மூளை கொஞ்சம் வேலை செய்ய, நான் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் ஒரு கதவு இருந்தது. அந்தக் கதவைச் சுவற்றில் இணைப்பதற்காக உள்ள கீலில் இருந்த சின்ன இடைவெளியில் ஸ்பூனை வைத்தேன்.இப்போவும் பால் சர்ரென்று உறிஞ்சப்பட்டது. நண்பர் ஐயப்பர் பக்தர். அந்த சிலை ஒன்று சிறியது இருந்தது. ஐயப்பனையும் பால் குடிக்க வைத்தேன். நண்பர் குடும்பத்தினருக்கு என்ன நடக்குதுன்னு புரியலை. பிள்ளையார் மட்டுமல்லாமல், ஐயப்பன் குடிச்சாகூட பரவாயில்லை; கதவின் கீல் கூட குடிக்குதேன்னு ஆச்சரியம். ‘எப்படி அங்கிள்’ என்ற பையனிடம் ‘தெரியலைப்பா; ஏதோ இயற்பியல் விஷயம் இருக்கு; ஒருவேளை capillary action ஆக இருக்கும்’ என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்தேன். (பின்னால் அது surface tension என்று சொன்னார்கள்.)

எங்கள் வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகள் என்னாயிற்று என்று கேட்டார்கள். ‘கொஞ்சம் பாலும் ஒரு ஸ்பூனும் கொடுங்கள்’ என்று சொல்லிவிட்டு, வீட்டில் இருந்த மேரி மாதா சிலை ஒன்றை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன். மாதாவின் கால் பக்கம் உள்ள வரை ஒன்றிலும், கூப்பிய கைகளுக்கு அருகிலும்  ஸ்பூனை வைத்ததும் மாதாவும் பால் குடித்தார்கள்! பிள்ளைகளிடமும் கதவுக் கீல் பால் குடிப்பதையும் காண்பித்தேன்.

அடுத்த நாள் கல்லூரியிலும் பரபரப்பு. கிறித்துவ நண்பர் அகஸ்டின் நம்பிக்கையில்லாமல் ‘அதெப்படி பிள்ளையார் பால் குடிப்பார்; சுத்த ‘இதுவா’ இருக்கேன்னார். நான் ‘என் கண்ணால் பார்த்தேன்’ என்றேன். அதெப்படி என்றார். நடந்ததைச் சொன்னேன். இயற்பியல் துறை ஆட்களிடமும் கேட்டேன். அவர்களும் என் தியரி சரியாக இருக்கலாமென்று சொன்னார்கள்.

இது நடந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி இருக்கும். பிள்ளையார் கதை எல்லாம் ஆறின கேஸாக ஆகிப் போயிருந்தது. அப்போது ஒரு நாள் நண்பர் அகஸ்டின் ஒரு ஃபோட்டோ காப்பி ஒன்றுடன் என்னிடம் விரைந்து வந்தார். எத்தியோப்பாவில் அமெரிக்க சிப்பாய் ஒருவன் sand storm ஒன்றைப் படம் எடுத்து அதைப் பிரிண்ட் செய்து பார்த்த போது அந்த சூறாவளியில் ஏசுவின் முகம் தெரிந்ததாக ஆங்கிலப் புத்தகம் ஒன்றில் வந்திருந்த படத்தின் நகல் அது. பயங்கர பிரமிப்புடன் அதை என்னிடம் கொண்டு வந்து அதைக் காண்பித்தார் – ஒரு மத நம்பிக்கையற்றவனை எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் நோக்கமாக அது எனக்குத் தோன்றியது!

‘ஏனய்யா, ஒரு வருஷத்துக்கு முன்பு வேற மதத்து சாமி பால் குடிக்கிதுன்னு சொன்னப்போ, ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அதெப்படி நடக்கும் என்று அன்று கேள்வி கேட்க முடிந்தவருக்கு, இன்று நீங்கள் நம்பும் மதம் என்றால் மட்டும் எப்படி அப்படியே நம்ப முடிகிறது?’ என்றேன். அதோடு, இதே மாதிரியாக கொடைக்கானல் மலை,மேகம் இவைகளின் ஊடே கண்ணாடி போட்ட மாணவன் ஒருவனின் முகம் தெரிவது போல விளையாட்டாக நான் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த புகைப்படம் ஒன்றையும் காண்பித்தேன். உண்மையை முழுவதுமாக ஒத்துக்கொள்ள முடியாத அரைகுறை மனதோடு சென்றார்.

இதைத்தான் நான் எனது மதங்கள் பற்றிய பதிவுகளில் நம்பிக்கையாளர்கள் கடவுள் பெயரால் எதைச்சொன்னாலும் எப்படி நம்பி விடுகிறார்கள் என்பதைப் பற்றியும் (gullibility), அவர்களால் எப்படி இது பற்றிய காரியங்களில் objectivity – யோடு பார்க்க முடிவதில்லை என்றும் முதல் பதிவின் முதல் பாயிண்டாகவே கூறியுள்ளேன். அதை இங்கே பாருங்கள்.என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள்; பிறந்ததிலிருந்து ஊட்டப்பட்ட விஷயங்களிலிருந்து மனதை விடுவிப்பது என்பது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய காரியமல்லவே! Every coin has got two sides  என்பது அவர்களுக்கு என்றுமே புரியாதது மட்டுமல்ல, புரிந்துகொள்ள தயாராகவும் இருப்பதில்லை. அவர்கள் முயல்களுக்கு மூன்றே கால்கள்…

Š

133. I DON’T BELIEVE IN THE GOD …

NO, I DON’T BELIEVE IN …

….the God who condemns man by surprise in a sin of weakness,
….the God who always demands 100% in all examinations,
….the God who says and feels nothing about the agonsing problems of
suffering humanity,
…. the God who, to make us happy, offers us a happiness divorced from
our human nature,
….the God who can give a verdict only with rule book in his hands,
….the God incapable of smiling at many of man’s awkward mistakes,
….the God who “plays at” condemning,
….the God who “sends” people to hell,
….the God who says, “you will pay for that”,
and above all
….the God who makes himself feared.
-
-
-
-
-
-

- Taken from Juan Arias’ “THE GOD I DON’T BELIEVE IN”

104. இந்தப் புத்தகம் வாங்கிப் படிக்கணும்…

தமிழ்மணத்துக்குள் நான் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே இங்கு மதங்கள் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. என் கருத்துக்களை வைப்பதற்கு இஃது ஓர் ஊக்கியாக இருந்தது. என் எண்ணங்களை ஒரு தொடராக எழுத ஆரம்பித்தபோதே நிறைய பின்னூட்டங்கள் கேள்விகளாகவும், விவாதங்களாகவும், விளக்கங்களாகவும் வர ஆரம்பித்ததால் நான் முழுமையாக எழுதி முடிக்கும் வரை பின்னூட்டங்களுக்குக் ‘கதவைச் சாத்திவிட்டு’ 7 பதிவுகளாக நான் பதித்து முடிந்ததும் பின்னூட்டக் கதவைத் திறந்தபோது, கேள்விளும், விளக்கங்களும், பதில்களும் வெள்ளமாய் வரும் என்ற நம்பிக்கையோடு இருந்த போது – தொடர்ந்து வந்த மெளனம் – eerie silence -கொஞ்சம் அதிசயமாக இருந்தது; ஆச்சரியமளித்தது.

எல்லா மதங்களுக்கும் உள்ள ஓர் ஒற்றுமை – சில கேள்விகளுக்கு பதில் எதுவும் இருக்காது; தர முயற்சிப்பது வீணே. நம்பிக்கை ஒன்றே பதிலாக இருக்கும். நாம் கேட்ட கேள்விகளுக்கு பதிலேதும் இல்லாததால்தான் இந்த மெளனம் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆயினும், ஒரு புதிய பதிவாளர் ஒரே ஒரு கேள்வி கேட்க, அதற்கு நான் அளித்த பதிலுக்கு அவரிடமிருந்து மீண்டும் எந்தவித எதிர்வினையுமில்லாமல் இருந்த போதுதான், இந்த மெளனம் ஒரு concerted effort என்ற தோற்றம் எனக்குப் புலானாயிற்று.

நான் கிறித்துவன் என்பதாலேயே நான்சொல்வதை மற்ற கிறித்துவப் பதிவாளர்கள் கேட்டு, அதன்படி நடந்து கொள்வார்களா, என்ன? நிச்சயமாக நான் அவர்களை அப்படிக் கட்டுப் படுத்தவும் முடியாது; அப்படி ஒரு முயற்சியை நான் மேற்கொள்ளவும் மாட்டேன். They will retain their own identity and remain as individuals.

இந்த வலிந்த மெளனம் எனது கேள்விகளுக்காக நான் எதிர்பார்த்த விளக்கங்களோ, பதில்களோ கிடைக்காததால் அந்தக் கேள்விகள் பதிலற்ற கேள்விகளாகவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாக எனக்குள் ஒரு கற்பனை!

ஆனாலும் மதங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேறு வழிகள் திறக்கத்தான் செய்கின்றன.

08.11.’05 அன்று THE HINDU நாளிதழில் வந்த ஒரு சேதி அப்படி ஒரு வழியாகத் தெரிகிறது. http://www.hindu.com/2005/11/08/stories/2005110805730900.htm
Irshad Manji என்ற கனடா நாட்டு, தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் இஸ்லாமியப் பெண்மணியின் ,The Trouble with Islam Today என்ற புத்தகம் வரும் 10-ம் தேதி டெல்லியில் வெளியிடப் படுகிறதாம். என் பதிவுகளில் நான் எதிர்பார்த்ததையே அவரும் எதிர்பார்க்கிறார் போலும்: “I am much more interested in sparking conversations. … That is why, at the end of my book, I invite readers to tell me where I have gone wrong.” இந்த சொற்றொடர் என் பதிவுகளுக்கு நான் எதிர்பார்த்தது போலவே அவரும் பதில்களை / விளக்கங்களை எதிர்நோக்கியுள்ளார் என்பது தெரிகிறது.

அவரது நேர்காணலில் அவர் கொடுத்துள்ள சில விஷயங்கள் எனக்கு மிக அருகாமை உணர்வைத் தருகின்றன:

* “We .. are raised to believe that because the Quran comes after the Torah and the Bible, it is the final and therefore perfect manifesto of God’s will. This supremacy complex is dangerous because it inhibits the moderates from asking hard questions about what happens when faith becomes dogma.”

* “I believe that we Muslims are capable of being more thoughtful and humane than most of our clerics give us credit for. That is why I wrote this book.”

அவரிடம் கேட்கப் பட்ட கடைசி வினா:

* “Is it true that you are not going to India to promote the book because you have received threats? ”

வேறு நாடுகளில் இல்லாத எதிர்ப்பு நம் நாட்டில் என்பது வியப்பாக மட்டுமல்ல, கொஞ்சம் வேதனையாகவும் இருக்கிறது. இந்த மதத்தீவிரம் பற்றிதான் நான் என் மதங்கள் பற்றிய பதிவில் 21-ம் கேள்வியாகக் கேட்டிருந்தேன்.

அந்த நல்ல நாளுக்காக – விடியலுக்காகக் – காத்திருப்போம்…

49. நான் ஏன் மதம் மாறினேன்…? – 1

ஏனைய பதிவுகள்:  1, 2, 3, 4, 5, 6, 7, 8.

முதலில் பதித்த நாள்: 16.08.05

‘மிஸ்ஸியம்மா” படம் பார்த்திருப்பீர்களோ, இல்லையோ, ‘வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ என் கதையை’ என்ற பாடலைக்கேட்டிருப்பீர்கள். படம் பார்த்திராதவர்களுக்கு ஒரு கதைச் சுருக்கம்: நடிகையர் திலகம் சாவித்திரி (மேரி) -க்கும் சாம்பார் -(sorry, ஜெமினி கணேசனின் அந்தக்காலத்துச் செல்லப்பெயர்) -க்கும் காதல், ஊடல் அது இதுன்னு வந்து கடைசி சீனில் இரண்டுபெருக்கும் கல்யாணம். பெண் – கிறித்துவள் (ஆனால், உண்மையில் சிறு வயதிலேயே இந்துக்குடும்பத்திலிருந்து காணாமல்போன, கதாநாயகனின் முறைப்பெண்தான்); ஆண்: இந்து. மதுரையில் இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ‘சிடி சினிமா’ தியேட்டரில் (இப்போது வெறும் parking lot ஆக மாறியுள்ளது)படம் பார்த்து விட்டு வெளியே வந்ததும் ரொம்ப ஆத்திரத்துடன் நான் என் அப்பாவிடம் கேட்ட கேள்வி: ‘அது எப்படி? ஒரு கிறித்துவப் பெண் ஒரு இந்துவைக் கல்யாணம் பண்ணலாம்?’.பெரும் மத அடிப்படைவாத உணர்வு (utter fundamentalism) தெரிகிறதா, இந்தக் கேள்வியில்? அந்தக் கேள்வியைக் கேட்ட எனக்கு அப்போது வயது என்ன தெரியுமா? பன்னிரண்டோ, பதின்மூன்றோ. ஒரு கிறித்துவர் இன்னொரு கிறித்துவரைத்தான் மணந்துகொள்ள வேண்டுமென்ற கருத்து அந்த இளம் வயதிலேயே என் மனத்தில் அவ்வளவு ஆழமாகப் பதியக் காரணம் என்ன? ஒரு குழந்தை கேட்கும் குழந்தைத்தனமான கேள்வி அது அல்ல என்பது
நிச்சயம். அந்த வயதிலும் மத உணர்வுகள் அவ்வளவு ஆழமாய் என் மனதில் பதிந்திருந்ததென்றால் அது ஒருவகை ‘மூளைச் சலவை’யன்றி வேறென்ன? அதோடு இது குழந்தைப்பருவத்தில் மட்டுமே இருந்த ஒரு நிலையும் அல்ல. ஏனெனில், முதுகலை வகுப்பில் நாத்திகரான என் ஆசிரியர் ‘பைபிள்’ பற்றி ஏதோ கேலியாகச் சொல்ல, அப்போதே அதி வன்மையாக அவர் கூற்றை நான் கண்டித்தேன் – அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி அறிந்திருந்தும். அந்த அளவு என் மதத்தின் மேல் எனக்கு ஈர்ப்பு, ஈடுபாடு…

மதங்களை, அவைகள் சொல்லும் கடவுள் கோட்பாடுகளைக் கண்ணை மூடிக் கொண்டால் மட்டுமே நம்பமுடியும்; கண்ணையும், காதையும் கொஞ்சம் திறந்தாலோ, நம் மதங்களாலும், பெற்றோர்களாலும், பிறந்தது முதல் நமக்குக் கற்பிக்கப்பட்ட, ஊட்டப்பட்ட விஷயங்களிலிருந்து கொஞ்சம் விலகி நின்று – with an OBJECTIVE VIEWING – பார்த்தால் (அப்படிப் பார்ப்பது மிக மிகக் கடினம் என்பது நிஜம்; என் மதம்; என் கடவுள் என்ற நிலைப்பாட்டை அறுத்து ‘அவைகளை’ யான், எனது என்ற பற்றற்றுப் பார்ப்பது அநேகமாக முடியாத காரியம்தான்). அப்படிப் பார்ப்பது எளிதாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! கடினமானதுதான்; ஆனால், முடியாததல்ல. என்னால் முடிந்திருக்கிறது.

அதிலும், நான் அறிந்தவரையில் semitic religions என்றழைக்கப்படும் யூதமதம், கிறித்துவ மதம், இஸ்லாம் மதம் என்ற இந்த மூன்று மதங்களுமே தங்கள் மதத்தினரை தங்கள் (கெடு) பிடிக்குள் இறுக்கமாக வைத்திருக்க முடிவதற்குறிய காரணம் எனக்குப் பிடிபடுவதில்லை. அவர்களிடம் கேட்டால், எங்கள் தெய்வமே உண்மையானது; எங்கள் மார்க்கமே சரியானது; ஆகவேதான், எங்கள் மதத்தை நாங்கள் இறுகப்பற்றியுள்ளோம் என்பார்கள். அப்படியானால், அந்த மூன்றில் எது உண்மையான வேதம்? மூவருக்கும் பொதுவானது – பழைய ஏற்பாடு. யூதர்கள், மோசஸ்வரை பழைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்; கிறித்துவர்களுக்கு அதன் பின்பு – புதிய ஏற்பாடு; இஸ்லாமியர்களுக்கு – கடைசி ஏற்பாடு. இருப்பினும் அவர்களுக்குள்தான் சண்டையே அதிகம்?! ஆனாலும், ஒரு ஒற்றுமை – மூவருமே தங்கள் மதத்தின்மேல் முழு, ஆழ்ந்த, கேள்விகளற்ற – அதைவிட, கேள்வி கேட்கப்பட்டாலே அதை blasphemy என்று நினைக்கும் அளவிற்கு – நம்பிக்கை; கிறித்துவர்களின் மொழியில் – விசுவாசம், இஸ்லாமியரின் வார்த்தைகளில் – Fidelity.

நானும் மேற்சொன்ன மாதிரியே முழுக்கிறித்துவனாக, முழு விசுவாசமுள்ள கத்தோலிக்க கிறித்துவனாக இருந்துவந்தேன். சாதாரணமாக, இளம் வயதில் மதத்தைவிட்டுச் சற்றே விலகியிருந்து, பின் கல்யாணமெல்லாம் ஆகி குழந்தை குட்டி என்று சம்சார சாகரத்தில் மூழ்கி, – இந்துக்கள் சொல்வதுபோல், ‘க்ரஹஸ்தன்” என்ற நிலைக்குப் பிறகு வரும் மாற்றம் போல் – மறுபடியும் கடவுளைச் சரணடைவதுதான் இயல்பு. ஆனால், என் கேஸ் கொஞ்சம் வித்தியாசம். நான் ஏறத்தாழ 40 -43 வயதுவரை என் மதத்தின் மேல் மட்டற்ற நம்பிக்கையும், என் மதக் கடவுள் மேல் பக்தியும் கொண்ட ஒருவனாகவே இருந்து வந்தேன். அப்படியிருந்த நான் ஏன் இப்படி ஆனேன்? அது ஒரு நாளிலோ, சில மாதத்திலோ ஏற்பட்ட மாற்றமில்லை; Theist என்ற நிலையிலிருந்து agnostic என்று என்னை நானே கூறிக்கொள்ளவே பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று; பின் athiest என்று என்னை நானே – பலத்த தயக்கங்களுக்குப் பிறகே – கூற மேலும் பல ஆண்டுகள் ஆயிற்று. ஆக, இது மிக மிக தயங்கித் தயங்கி, நின்று நிதானித்து, மெல்ல மெல்ல எடுத்துவைத்த அடிகள். எந்தவித ஆவேசமோ, யார் மீதோ அல்லது எதன் மீதோ ஏற்பட்ட ஏமாற்றங்களினாலோ, கோபதாபங்களாலோ வந்த மாற்றம் இது இல்லை. எனக்கு நானே பரிட்சித்துப்ப்பார்த்து, கேள்வியும் நானே; பதிலும் நானே என்றும், அதோடு, பதிலுக்காக அங்கங்கே அலைந்தும் எனக்கு நானே பதிலளித்து அதன் மூலம் வந்த முடிவுகளை ஏற்றுக்கொண்டேன். இது ஒரு evolution – a very slow ‘blossoming’! (Evolution என்ற சொல்லுக்கே அதுதான் பொருள்). மற்றவர்களின் சமய எதிர்ப்புக்கொள்கைகள் எதையும் அப்போது நான் என் காதில் வாங்கிக்கொண்டதில்லை. எனெனில், என் கருத்துக்களுக்கு நான் மட்டுமே பொறுப்பாயிருக்கவேண்டுமென்று விரும்பினேன். உதாரணமாக, ‘Why I am not a Chrisitian?” என்ற Bertrand Russel எழுதிய புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து முதல் 30 ப்க்கங்களோடு நிறுத்திக்கொண்டேன். ஏனெனில், (prayer) ஜெபம் பற்றி நான் நினைத்ததையே அவரும் கூறுவதாகப்பட்டது. அதோடு, அந்தப் புத்தகத்தின் தாக்கம் என்மீது எவ்வகையிலும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

‘சுயம்பு’ என்று வைத்துக்கொள்வோமே!!

இந்த பரிணாமத்தைத்தான் மெல்ல உங்களிடம் சொல்ல வந்துள்ளேன். என் தவறுகளைத் திட்டாமலேயே திறுத்துங்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு நீண்ட நெடும் தேடல்… தொடர்ந்த தேடல். முடிவைத்தொட்டு விட்டேன் என்று கூறவில்லை. நான் சென்ற எல்லை வரை உங்களை அழைத்துச் செல்ல ஆசை – ஒரே ஒரு நிபந்தனை; கஷ்டமானதுதான். உங்கள் மனக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொள்ளுங்களேன்…

53. நான் ஏன் மதம் மாறினேன்…? – 2

 
ஏனைய பதிவுகள்:  1, 2, 3, 4, 5, 6, 7, 8.  

 

முதலில் பதிந்த நாள்: 18.08.05

இரண்டு விஷயங்கள்:
ஒன்று – இந்தப் பதிப்பில் வேறு வழியில்லாததால் சில பல கிறித்துவத்திற்கே உரித்தான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கொஞ்சம் நெருடலாக இருக்கலாம். அந்தச் சொற்கள்: விவிலியம் ( பைபிள்), யேசு, ஜெபம் (prayer), பூசை (Holy Mass), பாவம், நரகம், மோட்சம், விசுவாசம் (faith), தேவதூஷணம் (blasphemy) சாத்தான் (satan). . .
இரண்டு – நிறைய விஷயங்களில் கீழே வரும் பகுதி கிறித்துவத்திற்கும், இஸ்லாமுக்கும் பொருந்தியே வரும்.எண்பதுகளின் கடைசிகளில் என்றுதான் நினைக்கிறேன். ஒரு புத்தாண்டு தினம்; இரவுப் பூசை. மதுரை தூய மரியன்னை ஆலயம். பூசையின்போது நடுவில், முந்திரிப்பழ ரசம் யேசுவின் ரத்தமாக மாறுவதாக ஒரு கட்டம்; எழுந்தேற்றம் என்பார்கள். எல்லோரும் தலை வணங்கி, ஆராதிக்கும் இடம். அன்று, அந்த நேரத்தில் மனசுக்குள் ஒரு பொறி; இதெல்லாமே ஒரு அடையாளம்தானே; உண்மையிலேயே அப்படியேவா ரசம் யேசுவின் ரத்தமாக மாறுகின்றது என்ற எண்ணம். ச்சீ..ச்சீ ..இப்படியெல்லாம் நினைப்பதே பாவம் – என்னை நானே கடிந்துகொண்டு மேலும் தீவிரமாக பூசையில் ஜெபிக்கலானேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. எண்ணம் தீவிரமானது. இவை எல்லாமே வெறும் அடையாளங்கள் ஒரு simulation என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது. இந்த எண்ணங்கள் எல்லாம் சாத்தானின் வேலைதான்; இதிலிருந்து வெளிவரவேண்டும் என்று உறுதிகொண்டேன். அதற்காகவே தினமும் ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். ‘கடவுளே, எனக்கு சந்தேகங்களைக் கொடுக்காதே; அப்படியே கொடுத்தாலும், அதற்குரிய பதில்களையும் கொடு’ என்று உண்மையாக வேண்டினேன். ஆனால் மனதில் மேலும் மேலும் கேள்விகள் தோன்ற ஆரம்பித்தன. புதுப் புதுக் கேள்விகள். ஜெபமும் தொடர்ந்தது. பயன்தான் ஏதுமில்லை.

இப்போது ஜெபத்தின் மீதே ஒரு கேள்வி. ஜெபங்கள் கேட்கப்படுமா? “கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்” என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறதே – அது உண்மைதானா என்ற ஒரு புதுக்கேள்வி இப்போது. சந்தேகங்கள் திரண்டு ஒரு புது தொடர் கேள்வி கீழ்க்கண்டவாறு உருவானது.

‘கடவுள்’ இருந்தால் – ‘அது’ முழு வல்லமை பொருந்தியதாக இருக்கவேண்டும். – omniscient

முழு வல்லமை பொருந்தியதாக இருப்பின் ‘முக்காலமும்’ உணர்ந்ததாக இருக்கவேண்டும்.

அவனன்றி அணுவும் அசையாது – என்ற நிலை. நடப்பதெல்லாம் நாராயணன் (கடவுளென வாசிக்கவும்) செயல்தானே!

அதாவது, எல்லாக் காரியங்களுமே, predetermined ஆக இருக்க வேண்டும்; அந்த நிலை – PREDETERMINISM.

(உன் தலையில் உள்ள ஒவ்வொரு முடியும் கூட எண்ணப்பட்டுள்ளது..)( தேவனன்றி எதுவும் எழுவதுமில்லை, விழுவதுமில்லை…) இப்படியாக பைபிளில் பலவாராகவும் கூறப்பட்டுள்ளது.

எல்லாமே predetermined ஆக இருந்தால், எல்லாமே ‘அவன்’ திட்டப்படி நடப்பதாக இருந்தால் – மனிதன் என்னதான் ஜெபம், தவம் செய்தாலும் எல்லாமே கடவுளின் திட்டப்படிதானே நடக்கும்; நடக்க வேண்டும்.
ஜெபத்தால் நடக்குமென்றால், கடவுளின் திட்டம் மாறக்கூடியதா? மாறக்கூடியதாயின், predeterminism என்னாவது?

predeterminism-கேள்விக்குள்ளானால், ‘கடவுளின்’ முழு வல்லமை என்னாவது?

ஆகவே, ஜெபத்தால் முடியாதததில்லை என்ற கிறித்துவத்தின் அடிப்படைக் கருத்து எனக்குக் கேள்விக்குறியானது.

கடவுளின் குமாரனாகக் கருதப்படும் யேசு பல இடங்களில் ஜெபம் செய்ததாக பைபிளில் கூறப்பட்டாலும், சிலுவையில் அறையப்படுவதற்கு சிறிது முன்பு, ‘முடியுமானால் இந்தக் கடினமான பாத்திரம் என்னை விட்டு அகலக்கடவது; ஆனால், அது உம் எண்ணப்படியே ஆகட்டும்’ என்று ஜெபித்ததாகத் தெரியும். ஆனால் அவரது ஜெபமே கேட்கப்படவில்லை! அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஏனெனில், அது ஏற்கெனவே இப்படி நடக்குமென்று எழுதப்பட்டு விட்டது . அதைத்தான் நான் சொன்னென் – predeterminism என்று. அப்படியானால், கிறித்துவம் சொல்லும் ‘ஜெபமே ஜெயம்’ என்ற கூற்று என்னாவது?

இதனைத் தொடர்ந்த இரண்டாம் கட்டம்:

மனிதனுக்கு FREE WILL (தமிழில்..? – தன்னிச்சைச் செயல்நிலை-சரியாக இருக்குமா?) கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது; அதை அவன் நல்ல முறையில் செயல்படுத்தவேண்டும் என்பது கிறித்துவத்தில் கூறப்பட்டுள்ளது. கடவுள் = omniscient; அப்படியாயின், அவனன்றி அணுவும் அசையாது; அசையக்கூடாது. ஆடுபவனும் நானே; ஆட்டுவிப்பவனும் நானே! – என்ற தத்துவமே சரியானதாக இருக்கவேண்டும். அப்படியாயின், நடக்கும் காரியங்களுக்கு கடவுள்தானே பொறுப்பு? மனிதன் (ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்? ) எப்படி பொறுப்பாவான். கடவுளின் திட்டம் நிறைவேற மனிதன் ஒரு பகடைக்காய்தானே? FREE WILL உண்மை என்றால் PREDETERMINISM தவறாகாதா? PREDETERMINISM உண்மையெனின் FREE WILL தவறாகாதா? இரண்டில் ஒன்றுதானே இருக்கமுடியும். கடவுளின் omniscience சரியா? மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் freewill சரியா?

மதத்தை எதிர்த்தும், கடவுள் கோட்பாட்டையே கேள்வி கேட்கிறோமே என்ற அச்சநிலையிலிருந்து – எதுவும் கேள்விக்குட்பட்டதே என்ற நிலை நோக்கி நகரத்தொடங்கினேன். பெருத்த தயக்கமான தருணங்கள் அவை.

இந்த நேரத்தில் எனக்கு நானே ஒரு “பத்துக்கட்டளைகள்” ஏற்படுத்தியிருந்தேன். (இப்போது அதில் ஒன்றை மறந்து விட்டேன்!! இப்போது ஒன்பதுதான்!!) அதில் – என் இரண்டாவது கட்டளை: you open YOUR own eyes. உன் கண்களை நீயே திறந்து கொள். எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்; எனக்குள் இருக்கும் எண்ணங்கள் எல்லாம் பிறர் சொல்லிக்கொடுத்து வந்தது. எனக்கு நானே ஏன் உண்மை என்ன என்பதைக் காணக்கூடாது? காணக் கண் திறந்தேன் – என் கண்களை எனக்கு நானே திறந்துகொண்டேன். இந்த நேரத்தில் தான் நான் முன்பு சொன்னபடி எந்தவித வெளித் தாக்கங்களின்றி, என்னைக் காத்துக்கொண்டு, எனக்கு நானே ஆசானாய் மாறி, எனக்கு நானே மாணவனாய் மாறி…மெல்ல..மெல்ல…மாறினேன். அந்த மாற்றங்களைப்பற்றி சொல்வதற்கு முன் உங்களிடம் தனியாக ஒரு வார்த்தை.

நான் முன்பு (சமய நம்பிக்கையோடு)இருந்த நிலையில் வாசிப்பவர்கள் நீங்கள் யாராவது இருப்பின் உங்களுக்காக ஒரு கேள்வி; உங்கள் பதிலும் -நியாயமான, உண்மையான- பதிலும் தேவை:

நீங்கள் ஒரு கிறித்துவரோ, இஸ்லாமியரோ இரண்டில் எதுவாயினும் (இந்துக்களை இந்த ‘ஆட்டை’யில் சேர்த்துக்கொள்வதாயில்லை; காரணம் உங்களுக்கே புரியும். அதோடு அதைப்பற்றி பிறகு பேசுவதாக ஒரு திட்டம். நீங்கள் அப்போது, அங்கே கோபித்துக்கொள்ளலாம்; சரியா ? ) சரி; ஒரு பேச்சுக்காகவேகூட, உங்களால் உங்கள் மதத்தைத் தவிர அடுத்த மதம் உண்மையானதாக இருக்கக்கூடும் என்று ஒத்துக்கொள்ள முடியுமா? Can you accept for the sake of argument that a faith other than yours could be the RIGHT one? ஒரு வேளை ஒத்துக்கொள்ளலாமோ என்று நினைத்தாலும், நம்மோடு பிறந்து வளர்ந்த நம் மத உணர்வுகள் நம்மை அப்படி ஒத்துக்கொள்ள விடாது என்பதே உண்மை. அதேபோல், நீங்கள் ஒரு கிறித்துவர் என்று கொள்வோம்; இஸ்லாம்தான் / யூதமதம்தான் உண்மையான மதம்; நம்மை உய்விக்கும் மதம் என்று கூறினால் ஒத்துக்கொள்வீர்களா? அதைப்போலவே, நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருப்பின், கிறித்துவம்தான் நம்மை இறைவனோடு ஐக்கியப்படுத்தும் உண்மையான மார்க்கம் என்று கூறினால் … ?

அனேகமாக, இரு தரத்தாரும் ஒரே பதிலைக்கூறுவீர்கள் என்று நினைக்கிறேன். ‘எங்கள் மதம் / மார்க்கம் சரியென்று தெரிந்தபிறகு எதற்காக அடுத்த மதம் சரியென்று நான் சொல்லவேண்டும்’ – என்றுதான் இந்நேரம் நினைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படித்தான் நினைக்க முடியும்; ஏனெனில், நாம் அனைவரும் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதம் அப்படி. “என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை” என்று இரண்டு மதமும் போதிக்கின்றன; அவற்றில் வளர்ந்த நம்மால் அடுத்த மதத்தில் உண்மை இருக்கலாம் என்று நினைக்கவும் முடியாது. தன்னிலைப்படுத்துதல் = subjectivity -இதுதான் மதங்கள் விஷயத்தில் நாம் கொள்ளும் நிலைப்பாடு. இதிலிருந்து மீள, மாற, மீற நம்மால், மதங்களைப்பொறுத்தவரை obectivity -யோடு (obectivity = தமிழ்ச்சொல் ? ) நடந்துகொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மதங்கள் எல்லாமே பொதுவாக பிறப்போடு வருவது. நம்பிக்கைகளின் மேல் கட்டப்பட்ட விஷயம். நம்பிக்கையென்றாலே, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட காரியங்கள். அங்கே, rationality is the first victim – இங்கே, rationality என்பதற்கு ‘ பகுத்தறிவு’ என்று மொழியாக்கம் செய்தால் சரியாக வராது. கேள்விகளுக்கு இங்கு அளிக்கப்படும் அந்தஸ்து – தேவதூஷணம். நம்மை நாமே ஒரு வட்டத்துக்குள் வைத்துக்கொள்கிறோம். அதிலிருந்து வெளியே தலை நீட்டுவதே பாவம் என்ற கருத்தோடு வளர்க்கப் பட்டவர்கள் நாம்.

இதில் கஷ்டமான விஷயம் என்னவென்றால், என் மதம்தான் சரியென்ற கருத்து நம் எல்லோரிடமும் மிக ஆழமாகப் பதிந்துபோய் விடுகிறது. என் அம்மா நல்லவர்கள் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், என் அம்மாதான் நல்லவர்கள் என்று சொல்வதுதான் தவறு.

இதைவைத்தே யோசிப்போமே; நம் தாய், தந்தையர்கள் எல்லோரும் தவறே இல்லா புனிதர்களா என்ன; ஆயினும், நம் அப்பா, அம்மா என்ற பாசத்தில், பிரியத்தில் அவர்களிடம் நாம் ஒட்டியிருக்கிறோமே அதுபோலத்தான் மதங்களோடு நம் உறவு. தாய், தந்தையரையாவது ஒரு கட்டத்தில் அவர்களின் தவறுகளை வைத்துக் கணிப்போம். ஆனால், நம் மதத்தில் தவறுகள் இருக்கக் கூடும் என்ற நினைவே நமக்கு ஒவ்வாதது .

சிக்கெனப்பிடித்தது மதம்.

55. நான் ஏன் மதம் மாறினேன்…? 3

ஏனைய பதிவுகள்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 

 

முதலில் பதிந்த நாள்: 23.08.05

சில வேண்டுகோள்கள்:என் வயது தெரிந்துவிட்டதால் என் வயதுக்கு மட்டுமாவது மரியாதையைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உங்கள் எல்லோருக்கும் கொடுத்துவிட்டேன் போலும். வலைஞர்களுக்குள் வயதென்ன வயது? என் அப்பா சொல்வதுபோல் கழுதைக்குக் கூடத்தான் வயதாகிறது! ஆனாலும், உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம்தான்; அதற்குத்தானே புனைப்பெயர் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே இந்த சார், அய்யா எல்லாம் இல்லாமல் ‘தருமி’ என்றுமட்டும் எல்லோரும் என்னை அழைத்தால் நானும் கொஞ்சம் ‘நார்மலாக’ இருக்கமுடியும். So, it is a deal, okay!இந்தத் தலைப்பில் நான் எழுதும் கட்டுரையை ஒரு தொடராக 4 – 5 பகுதிகளாக எழுதுவதாக ஒரு திட்டம். இந்த கட்டுரையின் ஆங்கில ஆக்கம் ஆரம்பித்து ஏறக்குறைய நான்கைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எங்கள் கல்லூரியில் open house ஒன்றை நண்பர்கள் சிலருடன் நடத்தும்போது அதில் பேசுவதற்காக என்று தயாரிக்க ஆரம்பித்து வளர்ந்துகொண்டே வந்த கட்டுரை அது. ‘இங்கு’ வந்தபின் ‘இந்தக் கருத்துக்களையும்’ எழுதக்கூடிய இட்ம் என்பதறிந்து எழுதலானேன். ஏதோ நல்லடியாருக்காகவே நான் எழுதுவதுபோல் யாரும் நினைத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல இது எந்த ஒரு மதத்தையும் தாக்குவதற்காக அல்ல – எல்லா மதத்தையுமே முடிந்தவரை, எனக்குத் தெரிந்தவரை அலசுவதற்காகவே எழுதப்படுகிறது. கிறித்துவனாகப் பிறந்ததால் முதலில் அந்த மதமும், அதை ஒட்டியே வந்த மதம் என்பதால் அடுத்ததாக இஸ்லாமும் என் பார்வையில் முக்கிய இடம் பெறும். தவறுகள் – factual mistakes – சுட்டிக்காட்டப்பட்டால் உடனே திருத்திக் கொள்கிறேன். கருத்துக்கள் தவறு என்று நீங்கள் நினைத்தால் நினைத்துக்கொள்ளுங்கள்; அது உங்கள் உரிமை. உங்களின் அந்தக் கருத்துக்களை ஏற்பதும், ஏற்காதிருப்பதும் என் உரிமை.

எழுதப்படும் கட்டுரைகளில் நான் அவ்வப்போது எழுதி வரும் விஷயங்களை மட்டும் வைத்து, ஆதரவாகவோ, எதிராகவோ உங்கள் கருத்துக்களைப் பதிவிட அழைக்கிறேன். நான் எழுதாத கருத்துக்களைப் பற்றி கட்டுரையின் முடிவில் எல்லோருமாக பொதுவாக விவாதிப்போமே. அப்போதுதான், உடனுக்குடன் பதில் சொல்லவேண்டிய கருத்துக்கள் தவறாது இடம்பெரும்; விவாதங்கள் ‘சுடச்சுட’வும் இருக்கும்! சுடச்சுட இருப்பது ‘சூடாகவும்’ இருக்க வேண்டியதில்லையே!

ஞானபீடம் அவர்களின் பின்னூட்டத்திற்கு என் பதில்:

‘யோபு’ கதையைப் படிக்கச்சொல்லியிருந்தீர்கள்; தெரிந்த கதைதான்; இருந்தும் படித்தேன். இப்போது படித்தபோது மனதில் எழுந்த கேள்வி: இந்தக்கதை அப்படியே நம்ம ஊரு அரிச்சந்திரன் கதைதானே. இரண்டுக்கும் நடுவே 6 வித்தியாசங்கள் கூட கிடையாது, இல்லையா? அரிச்சந்திரன் கதையில் at least, moral of the story என்று ஒன்று இருக்கிறது. எல்லாம் interesting ஆன கதைகள்.

யோனாவின் கதை – திமிங்கிலத்தின் வயிற்றில் மூன்று நாட்கள் – இதுபோல் எந்த மதத்தில்தான் கதைகள் இல்லை? இந்தக் கதையை அடுத்த மதத்தினர் நம்புவார்களா? இது உங்கள் மதக் கதை; நீங்கள் நம்புவீர்கள். நரி பரியான இந்துக்கதையை நீங்கள் நம்புவீர்களா?

உன்னதப்பாட்டு, பிரசங்கியும் நமக்கு இங்கு தேவையில்லையென்று நினைக்கின்றேன்.

நல்லடியாரின் பின்னூட்டத்திற்கு என் பதில்:

நான் ஒரு கேள்வி என் கட்டுரையில் கேட்டிருந்தேனே -
“ஒரு பேச்சுக்காகவேகூட, உங்களால் உங்கள் மதத்தைத் தவிர அடுத்த மதம் உண்மையானதாக இருக்கக்கூடும் என்று ஒத்துக்கொள்ள முடியுமா? Can you accept for the sake of argument that a faith other than yours could be the RIGHT one?” -
இதற்கு உங்கள் பதில் என்ன?(1)

//நல்லவை நடந்தால் அதற்கு ‘தானே’ காரணமென்றும், கெட்டவை நடந்தால் பிறர் (இளிச்சவாயர்?)மீதோ அல்லது யாரும் கிடைக்காவிட்டால் கடவுள் மீதோ போடுவது மனிதனின் இயல்பு.//

அப்படியே மாற்றிச்சொல்கிறீர்கள். கிறித்துவ மதத்தைப் பொருத்தவரை உலகில் நடக்கும் நல்லவை எல்லாவற்றிற்கும் தூய ஆவி காரணம்; மற்றவற்றிற்கு சாத்தான் காரணம். நிச்சயம் உங்கள் மத நம்பிக்கைப்படி நல்லவை அல்லாவிடமிருந்து வருவதாகத்தானே நம்புகிறீர்கள்? மறுபடியும் தயவு செய்து என் முதல் கட்டுரையில் நான் சொல்லியுள்ள predeterminism பற்றி படித்தால் உங்கள் கேள்வியில் உள்ள கருத்து தவறெனப் புரியும்.

“நல்லதும் கெட்டதும் கடவுளால் தீர்மானிக்கப்பட்டு, வேதமும் தூதரும் அனுப்பப்பட்டு, சிந்திக்க மூளையும் கொடுத்து, நல்லது செய்தால் சுவர்க்கமென்றும், தீயது செய்தால் நரகம் என்றும் போதித்து, மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுள் மட்டுமே பொறுப்பு எனச்சொல்வது பாரபட்சமாக இல்லையா?”
predeterminism vs omnipotence – பற்றிய எனது விவாதம் இதற்குப் பதிலாக அமையவில்லையா? இந்தக் கருத்துக்கும் உங்கள் பதிலை எதிர்நோக்குகிறேன் (2)

“எல்லா மதங்களும், தத்துவங்களும் நல்ல நோக்கத்தில்தான் போதிக்கப்பட்டன. அதனை பிரயோகப்படுத்தும் முறையில்தான் மனிதன் வேறுபடுகிறான்.”
இதற்குரிய பதிலுக்கு நீங்கள் என் முடிவுரை வரை பொறுக்கவேண்டும்.

“கடவுளை மறுப்பவர்களெல்லாம் நல்லவர்கள் என்ற முடிவுக்கு வர எந்த முகாந்திரமும் இல்லை.” யார் சொன்னது கடவுளை மறுப்பவர்களெல்லாம் நல்லவர்கள் என்று??!!
உங்கள் ப்ளாக்கின் முகவரியாக உங்கள் குரான் வாசகம் ஒன்று கொடுத்திருக்கிறீர்களே, அதேபோல, பைபிளில் ‘உனக்கு உன் அயலான் என்ன செய்யவேண்டுமென்று நீ நினைக்கிறாயோ, அதை நீ அவனுக்குச் செய்துவிடு” என்று சொல்லியுள்ளது. எனக்கு பைபிளில் மிக மிக பிடித்த வாசகம் இது.
மனிதநேயம் மட்டுமே ஒரு மனிதனை, மனிதனாக, நல்லவனாக வைத்திருக்க முடியும்; மதங்களல்ல – எம்மதமாயினும்! (இந்த இடத்தில் எனது 10 / 9 கட்டளைகளில் முதலாவது கட்டளையைச் சொல்வது நன்கிருக்கும் என்று எண்ணுவதால் அதைத் தருகிறேன்: Dont try to become a god in vain; be a man – fist and last

“தருமி சார், உங்கள் முந்தைய மத நம்பிக்கை தவறு என்ற முடிவுக்கு வர சுமார் 45 வருடங்கள் எடுத்துக் கொண்ட நீங்கள், கடவுள் மறுப்பே சரியென்று எப்படி உடனே முடிவுக்கு வந்தீர்கள்?” -
- கொஞ்சம் சரியாக வாசித்துவிடுங்கள்: 40-43 வருடம் நம்பிக்கையோடானது. பிறகு, ஏறத்தாழ 10 ஆண்டுகளில் மன மாற்றம். இதுதான் என் பரிணாமம் என்று எழுதியிருந்தேனே!

“வெவ்வேறான மனிதர்களை கடவுள்தான் படைத்தான் (அல்லது குரங்கிலிருந்து வந்தான் என்றாலும்) ஒருவன் நல்லவனாகவும் மற்றொருவன் கெட்டவனாகவும் இருப்பது ஏன்?”
- ஒருவன் ஏழையாகவும், மற்றொருவன் பண்க்காரனாகவும், ஒருவன் மொடாக்காகவும், இன்னொருவன் புத்திசாலியாகவும் இருப்பது ஏன்? கடவுள் ஏன் இப்படி படைத்தார் ? – என்று இன்னும் நிறைய கேட்கலாமே! ஆனால், இது எல்லாம் நல்லடியார் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள். விஞ்ஞானக் கேள்வியாகக் கேட்டால் genome, genes, D.N.A. எல்லாம்தான் இந்த variations-க்குக் காரணம் என்று என்னைப்போன்ற infidels சொல்லுவோம்; உங்களைப்போன்ற நம்பிக்கைவாதிகள் இந்த வேறுபாடுகளுக்கு என்ன பதில் கொடுப்பீர்கள். கடவுள் ஏன் இந்த வேறுபாடுகளோடு மனிதர்களைப் படைத்தார்? தருமி இப்படி infidel-ஆக இருப்பதற்கும், நல்லடியார் ஆழ்ந்த இஸ்லாமியராக இருப்பதற்கும் யார் / எது காரணம். “எல்லாம் அவன் செயல்” (predeterminism) என்பது உண்மையென்றால்….?

“தேடல்களின் தொடர்ச்சி பகுத்தறிவா? தேடியதில் முடிவுக்கு வருவது பகுத்தறிவா?”
- இல்லாமல் வேறென்ன, சொல்லுங்கள். எனது தேடல், தொடர் தேடல் என்று சொல்லியுள்ளேன். like science. Science never puts a ‘full stop’; it always ends with a comma . தொடர் தேடல் – இலக்கணக் குறிப்பு: வினைத்தொகை தானே !!

ஞானபீடம், நல்லடியார் – உங்கள் பின்னூட்டத்திற்கு வார்த்தைக்கு வார்த்தை பதிலளிக்க முயற்சி செய்துள்ளேன்; பழிக்குப் பழி…அதாவது, வாதத்திற்கு வாதம்..?

over to chennai !

59. நான் ஏன் மதம் மாறினேன்…? .. 4

 ஏனைய பதிவுகள்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8.  

முந்திய பதிவுக்குரிய பின்னூட்டங்களை முடித்துக் கொள்ளலாமென நினக்கிறேன். அதோடு, இத்தலைப்பில் இனி எழுதப்பபோகும் பதிவுகளில் தற்காலிகமாகவேனும் பின்னூட்டங்களைத் தடை செய்ய நினைத்துள்ளேன். காரணங்கள்: நான் ஏற்கெனவே கேட்டிருந்தபடி என் பதிவுகளில் வரும் கருத்துக்களை மட்டும் வைத்துப் பின்னூட்டங்கள் வந்தால் அதைப் பற்றி விவாதிக்க எளிதாயிருக்குமென நினைத்தேன். ஆனாலும், வரும் பின்னூட்டங்கள் அந்த LOC-யைக் கடைப்பிடிக்க முடிவதில்லை. அது இயல்பும் கூட. அதோடு, நான் சொல்லவரும் விதயங்களுக்கு முன்பே அதைப்பற்றிய கேள்விகள் வந்து விழுந்து விடுகின்றன. எஞ்சுவது சிறிது குழப்பமும், குழப்பத்தில் “மீன் பிடித்தலுமே’.ஆகவே, நான் எழுத நினைத்துள்ள பகுதிகளை எழுதி முடித்ததும் I hope to have a refined discussion covering all aspects. ஒருவேளை அப்போது கருத்துக் கலந்துரையாடல் எளிதாகலாம். ஏனெனில், என் பதிவுகள் நான் ஏற்கெனவே கூறியபடி என் பல ஆண்டுகளின் தொடர் தேடலால் வந்த கருத்துக்கள். எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் அல்லது தனி மனிதனுக்கும் குறிவைத்து எழுதப்பட்டதல்ல.அப்படியான கருத்துக்களை முழுவதுமாகத் தந்த பிறகு மதத்தைப்பற்றிய என் முழு முகமும் உங்களுக்குத் தெரியவரும். அப்போது வரும் கேள்விகள் பொருளோடும், மிகச்சரியாகவும் வரும் என்ற நம்பிக்கை உண்டு.

ஆகவே, இந்தப் பதிவில் ஆர்வம் காட்டி வரும் அனைவரையும் சிறிது பொறுமை காக்கக் கேட்டுக்கொள்கிறேன். எனது பதிவுகள் ஓரளவுக்கு முடிந்ததும் ‘அணைக்கதவுகளைத்’ திறக்கிறேன். அப்போது உங்கள் கருத்து வெள்ளம் பொங்கிப்பிரவாகமாய் வருமென நம்புகிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுமாய் வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி.

***********************

இதுவரை முதல் ஐயம் விதையாய் மனத்தில் விழுந்த விதத்தையும், அதை நான் வளர்த்த விதத்தையும் எழுதினேன். முதலில் நம் மதத்தைப்பற்றி ஐயம் எழுப்புகிறோமே என்ற குற்ற உணர்வு; அதனால் ‘ஜெபம்’; அது தோற்றதால் ஏன் கேள்விகள் கேட்கக்கூடாது என்ற மனச்சமாதானமும், தைரியமும் வர மேலும் மேலும் கேள்விகளை எனக்கு நானே கேட்க ஆரம்பித்தேன். அதனால் ‘விசுவாசம் என்று கிறித்துவர்கள் சொல்லும் ‘மத நம்பிக்கை’ படிப்படியாகக் குறைந்தது. இந்த நிகழ்வுகளை மூன்று நிலைகளாகப்(Phases) பிரித்துத் தருகிறேன்.

PHASE: I

பள்ளியில் பயிலும்போது வருடத்திற்கு ஒரு முறை எங்கள் பள்ளியின் கத்தோலிக்கக் கிறித்துவ மாணவர்களுக்கு மூன்று நாட்களுக்கு ‘தியானம்’ கொடுப்பார்கள். இந்த நாட்களில் நாங்கள் கடவுளைப் பற்றியும், மதக்கருத்துக்களைப் பற்றியும் தியானிக்கவேண்டும். ஆனால், எங்களுக்கு ஒத்த வயதினரோடு ஒரே இடத்தில் தங்கி, உண்டு, உறங்கி நாட்களைக் கழிப்பதில் தனி மகிழ்ச்சி. குதித்து கும்மாளத்தோடு வருவோம். ஆனால், முதல் நாள் முதல் ‘பிரசங்கத்திலேயே’ தியானம் கொடுக்க வரும் குரு (சாமியார்) , ‘பாவம்’ (sin) என்பது பற்றியும், இந்தப் பாவத்தின் சம்பளமான சாவு பற்றியும், சாவுக்குப்பிறகு கிடைக்கக் கூடிய ‘மோட்சம்-நரகம்’ (heaven & hell) பற்றிக் கூறுவார். இதில் மோட்சம் பற்றிக் கூறுவதை விடவும், நரகம், அதன் கொடுந்தண்டனைகள் பற்றியும், அது எப்படி ‘நித்தியம் (eternal) , என்பது பற்றியும் சொல்லுவார். நன்கு நினைவில் இருக்கிறது; அந்தச் சின்ன வயதில் இந்த சேதிகள் எவ்வளவு ஆழமாகப் பதிந்தது என்று. எல்லோருமே பயந்து நடுங்கியிருப்போம். அன்று இரவு தூக்கத்தில் அவனவன் பயந்து உளறுவது சர்வ சாதாரணம். ஆட்டமெல்லாம் இரண்டாம் நாளிலிருந்துதான் !

1 *** பைபிளில் என்னவோ ஒரே ஒரு ‘வசனம்’ மட்டுமே வருகிறது (Math. 14:50). ஆனால் அது போதும் – பயங்கரமான ஒரு oral and visual effect கொடுப்பதற்கு!! ஒரு மனிதன் மிஞ்சிப்போனால் எத்தனை ஆண்டுகள் உயிரோடிருப்பான். நூறு ஆண்டுகள்? அதில் அவன் என்ன தவறு செய்தாலும் ‘நித்தியத்திற்கும்’ அவனுக்குத் தண்டனை என்பது எனக்கு ஒரு பெரிய முரண்பாடாகத் தோன்றியது. கடவுள் கருணை நிரம்பியவர் என்று ஒரு புறம்; ஆனால், மறுபுறமோ eternal punishment! ஒத்து வரவில்லை. இப்படித் தண்டனை அனுபவிப்பதற்கு என்னைப்பொறுத்தவரை மூன்றே மூன்று மனிதர்களுக்கு மட்டுமே தகுதியுள்ளதாகப் பட்டது: ஹிட்லர், போல்பாட், இடி அமின் ! ஆனால், இந்தத் தண்டனை எனக்கும், உனக்கும் என்பது பொருந்தியதாகத் தெரியவில்லை. இதைப் பார்க்கும்போது நீ செய்த ‘கர்ம வினை’களுக்கு ஏற்றாற்போல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இறுதியில் ‘முக்தி’ பெறு என்று சொல்லும் இந்து மதக் கோட்பாடில் ‘மனித தர்மம்; மனித நீதி’ இருப்பதாகப் பட்டது. (அதற்காக அம்மதக் கோட்பாடுகள் அனைத்தும் எனக்கு உடன்பாடு என்று பொருள் கொள்ள வேண்டாம்.) கடவுளின் தர்மமும், நீதியும் நம் தர்மத்தையும், நீதியையும்விட மேலானதாக இருக்கவேண்டாமோ?

2 *** அடுத்ததாக, நாம் நம் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்து கற்பிக்கப்பட்ட காரியங்களை எந்தவித ஐயமும் இன்றி, தொட்டிலில் தொடங்கியதைக் கடைசிவரை முழுமையாக நம்புகிறோம். அது ஒரு முழுமையான உண்மைதானா என்று நமக்கு நாமே எப்போதாவது கேள்வி கேட்பதுண்டா; இல்லவே இல்லை. பைபிளில் யேசுவால் சொல்லப்பட்ட பல சிறுநீதிக்கதைகள் (parables) மிகவும் பிரசித்தம். அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பகுதிகள். இப்போது இவைகளில் எனக்கு ஐயம். எல்லோருக்கும் தெரிந்த ‘ஊதாரிப்பிள்ளை” (prodigal son) கதையில் தறுதலையாகச் சுற்றி, சொத்தையெல்லாம் அழித்து வந்த சின்ன மகன் திரும்பிவந்து மன்னிப்பு கேட்டதும் தடபுடல் விருந்து – கொளுத்த ஆட்டை அடித்து விருந்து; அப்பாவோடேயே இருந்து கஷ்டப்பட்டு உழைத்த மகன் தன் நண்பர்களோடு விருந்துண்ண தடை. இது கதை. நம் வாழ்க்கையில் இது போல் நடந்தால் பெரியவன் புதிதாகக் கெட்டுப் போவான்; சின்னவன் மீண்டும் கெட்டுப்போவான். தந்தை இருவரையுமே இழப்பதே நடக்கும். நடப்புக்குச் சரியாக வருமா இந்தக்கதை?

3 *** அடுத்து – இன்னொரு கதை. (Math: 20: 1-16) காலையில் வேலை கேட்டுவரும் ஒருவனுக்கு முழுநாள் வேலைக்கு ஒரு பணம் என்று பேசி வேலை பார்க்கச் சொல்லுகிறார் ஒரு முதலாளி. நேரம் கழித்து வேறு சிலரை தாமே அழைத்து வந்து வேலை தருகிறார். அதன் பின்னும் வேறு சிலருக்கு; மதியம் இன்னும் சிலருக்கு; கடைசியாக வேலை முடியப்போகும் மாலையில் வருபவனுக்கும் வேலை. எல்லாம் சரி. வேலை முடிந்ததும் எல்லோருக்கும்ஒரே கூலி! இது நியாயப் படுத்தப்படுகிறது ! முதலில் வந்து வேலை செய்து முறுமுறுப்பவனுக்குக் கொடுக்கப்படும் பதில்: “என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா?” மிக மோசமாக தேர்வு எழுதிய என் மாணவன் ஒருவனையும், நன்கு எழுதிய மாணவன் ஒருவனையும் நான் ஒரேமாதிரியாக மதிப்பிடலாமா? இருவருக்குமே பத்துக்குப் பத்து என்று மதிப்பெண் அளித்தால் என்ன நியாயம்? தொழிலாளி – முதலாளி என்ற உறவை வைத்தே பார்த்தாலும், அந்த முதலாளிக்கு நல்ல தொழிலாளிகளே கிடைக்காதுதான் போகும்! பைபிளில் சொல்லப்பட்டதாலே இக்கருத்துக்கள் சரியாகுமா?

4 *** அடுத்ததாக வந்த ஐயம் ஆழ்ந்த கிறித்துவர்களுக்குக் கோபம் வரவைக்கும் ஐயம்’ ஆனால், நானென்ன செய்வது? யேசு இரண்டே இரண்டு வசனங்களைத் தவிர ஏனைய இடங்களில் எல்லாம் தான் இஸ்ரயேலர்களுக்காக மட்டுமே வந்ததாகக் கூறுகிறார்.
Math 10;5, 6:”….பிற இனத்தாரின்எப்பகுதிக்கும் செல்லவேண்டாம்….மாறாக, வழிதவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்
John 17;6 “நான் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன்.
John 17;9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். …
இந்த வசனங்கள் தரும் செய்தி என்ன? அவர் தன்னை ஒரு சாதியினரோடு – இஸ்ரயேலரோடு மட்டும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லையா?

இதைவிட, ‘ஐயா, எனக்கு உதவியருளும்’ என்று பேய் பிடித்த தன் மகளைக் காப்பாற்ற வேண்டி,தன் முன்னே வந்து நின்ற கானானியப் பெண்ணிடம்(வேற்று ஜாதியைச் சேர்ந்தவள்) “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்று சொல்ல (Math 15:25) அந்தப் பாவப்பட்ட பெண் மேலும் இரந்து நிற்க, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” (Math 15:26)(Mark 7:26)என்று ஒன்றல்ல இரண்டு இடங்களில் தேவகுமாரன் சொன்னதாகச் சொல்கிறது விவிலியம். இந்தப்பகுதிக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் விளக்கம் இன்னமும் வேதனையாக இருக்கும். கடவுள் அப்பெண்ணின் நம்பிக்கையைச் சோதிக்கவே அப்படிப் பேசினாராம். எனக்கு இதில் எந்தவித நியாயமோ, லாஜிக்கோ தெரியவில்லை. ‘விசுவாசம்’ என்ற ‘கறுப்புக் கண்ணாடி’யைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் எனக்குத் தெரிவது “ஜாதித் துவேஷமே”.

மேலும், வேற்று ஜாதியினரை ஒதுக்கிவைக்கும் யேசு, தன் உறவினர்களான மார்த்தா, மரியாவின் சகோதரனான லாசர் இறந்தது அறிந்து …யேசு உள்ளங்குமுறிக் கலங்கி…அப்போது யேசு கண்ணீர் விட்டு அழுதார்…யேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்குச் சென்றார்.” John 11:33, 35, 38Rev: 7:4-ல் அவரது குலமான் இஸ்ரயேல் மக்களைச் சேர்ந்த 12 குலத்தவர்களுக்கு, குலம் ஒன்றுக்கு பன்னிரண்டு ஆயிரம் என்ற கணக்கில் மொத்தம் 1,44,000 பேர் முத்திரையிடப்பட்டு மோட்சத்திற்கு வருகிறார்கள்.-ல் அவரது குலமான் இஸ்ரயேல் மக்களைச் சேர்ந்த 12 குலத்தவர்களுக்கு, குலம் ஒன்றுக்கு பன்னிரண்டு ஆயிரம் என்ற கணக்கில் மொத்தம் 1,44,000 பேர் முத்திரையிடப்பட்டு மோட்சத்திற்கு வருகிறார்கள்.மொத்தத்தில், ஒரு ஜாதி அல்லது குலம் காக்க வந்த ஒரு tribal leader என்றே எனக்கு யேசு தெரிகிறார். அவ்ர் நல்லவர் என்பதையோ, சொன்ன கருத்துக்களில் பல கருத்துக்கள் நல்லவை என்பதிலோ எனக்கு மாற்றுக்கருத்துக்கள் கிடையாது.

-ல் அவரது குலமான் இஸ்ரயேல் மக்களைச் சேர்ந்த 12 குலத்தவர்களுக்கு, குலம் ஒன்றுக்கு பன்னிரண்டு ஆயிரம் என்ற கணக்கில் மொத்தம் 1,44,000 பேர் முத்திரையிடப்பட்டு மோட்சத்திற்கு வருகிறார்கள்.மொத்தத்தில், . அவ்ர் நல்லவர் என்பதையோ, சொன்ன கருத்துக்களில் பல கருத்துக்கள் நல்லவை என்பதிலோ எனக்கு மாற்றுக்கருத்துக்கள் கிடையாது.5 *** அடுத்தது – கடவுளின் படைத்தல் பற்றியது. பல கேள்விகள்; என்ன, கொஞ்சம் ”கண்ணைத்திறக்கணும்”.
1. ‘எல்லாம் வல்ல’ கடவுளுக்கு, படைத்தலுக்கு எதற்காக 6 நாட்கள்? ‘வா’ என்றால் வந்துவிடாதா எல்லாமே?
2. கடவுளுக்கு இந்த படைத்தல் ஒரு களைப்பு தரும் வேலை போலவும், அவர் அதனால் ‘ஓய்வு’ எடுத்ததாகவும், அதுவே ‘ஞாயிற்றுக்கிழமை’ (சிலர், இல்லை..இல்லை..அவர் சனிக்கிழமை ஓய்வெடுத்தார் என்றும்) என்பதாகச்சொல்வது எனக்கு kid stuffபோலத்தான் தெரிகிறது. சிறு பிள்ளைகளுக்குச் சொல்லப் படும் கதைகள் போலில்லை இவை?
3. கடவுள் ஆதாமைப் படைக்கிறார்; ஏதேன் (garden of Eden) அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. “பின்பு, ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று …Gen. 2:18 (on second thought?) ஏவாளைப்(Eve) படைத்தார்.
4. Gen. 1:27-ல் ‘தன்னுருவில் ஆணும் பெண்ணுமாய் மானிடரைப்படைத்தார்’ என்றும், Gen. 2: 21-ல் ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப் பட்டதாகவும் உள்ளது. ஒரே புத்தகத்தில் உள்ள வேறுபாடுகள் இவை.
5. இன்னும்கூட பல கிறித்துவர்களும் தங்கள் வழிபாட்டிடங்களில் ஏவாள் இப்படிப் படைக்கப்பட்டதால் எல்லாஆண்களுக்கும் ஒரு விலா எலும்பு குறைவு என்று சொல்ல நானே கேட்டிருக்கிறேன். விசுவாசம் ?? (சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்த கதை நினைவுக்கு வருகிறது ! )
6. படிமங்களாலும் (fossils), விஞ்ஞானத்தாலும் நிறுவப்பட்டுள்ள extinction of species (examples: dinosaurs ) அழிந்து மறைந்து பட்ட உயிரினங்கள் பற்றி ஒரு கேள்வி: கடவுளால் எல்லாமே படைக்கப்பட்டிருந்தால் ஏன் சில வாழமுடியாது அழிந்துபட்டன. God’s misconception or miscalculation?? இவை எல்லாமே கடவுளின் “திருவிளையாடல்” என்று மட்டும் கூறிவிடக்கூடாது.

The philosopher John Dewey (1859-1952) writes in “A Common Faith”: “……..developments in astronomy and geology had made the genesis story of the seven days of creation seem like a fairy tale, that modern views of the spatiotemporal universe had made the doctrines of ‘heaven above and hell below’ and christ’s ascension into heaven unacceptable to the modern mind’.

7. ஆதாம் ஏடனில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறான். கடவுள் எல்லாம் உனக்கே என்று சொல்லி, பிறகு ஒரு ‘rider’ வைத்து விடுகிறார் – ஒரே ஒரு மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாதென்று! மீதிக்கதை எல்லோருக்கும் தெரியும்தானே. பாம்பு வருகிறது; ஏவாளை வார்த்தைகளால் ஏமாற்றுகிறது. தின்னக்கூடாதென சொல்லப்பட்ட கனி “அறிவு பெருவதற்கு விரும்பத்தக்கதாக இருந்ததாகக்” கூறப்படுகிறது. பிறகு அவர்கள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட, கடவுள் “நீ எங்கிருக்கிறாய்:” என்று கேட்டார்.(Gen: 3:9). சிறு பிள்ளைத்தனமாய் இருக்கலாம். ஆனாலும், சில கேள்விகள்: கடவுளுக்கு அவர்கள் இருக்குமிடம் தெரியலையா?
கடவுள் இந்தப் ‘பரிட்சை’யில் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்தும் ஏன் அந்த பரிட்சை? (வேண்டுமென்றே தேர்வைக் கடினமாக்கி மாணவனைப் பழிவாங்கும் ஆசிரியர் நினவுக்கு வருகிறார்.)ஏற்கெனவே கூறியுள்ள predetermined vs freewill என்ற விவாதத்தை இங்கு நினைவு கொள்வது நலம்.

“……Adam ‘s decision to disobey God originated with Adam and not with God eluded by the claim that God foreknew from eternity that just that eternity that decision would be made. The ruse here is the insistence that God foreknew from eternity that Adam would freely choose to disobey God. But the very notion of freedom as originative causality loses its meaning in such an interpretation” Reason and Religion: An introduction to the philosophy of Religion by Rem B. Edwards; pp 180

7. யேசுவின் வாழ்க்கையில் 12 வயதிலேயே ஆலயத்தில் உள்ள பெரிய குருமார்களிடம் தர்க்கம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதன் பிறகு பல வருடங்கள் கழித்து தன் 33-வது வயதில் மறுபடி வெளி வாழ்க்கைக்கு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ‘மறைந்த ஜீவியம்’ என்று சொல்லப்படும் காலத்தின் தேவை என்ன?

8. “கடவுளின்மேல் பயமே ஞானத்தின் ஆரம்பம்” (Prov. 1:9 )
“ஞானிகளின் ஞானத்தைஅழிப்பேன்;அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்”(Cor. 1:19 )
“ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என் ஆண்டவர் அறிவார்” (Cor. 3:20) இந்த மேற்கோள்கள் ஒரு வினாவை என்னுள் எழுப்புகின்றன: ஏன் (பொதுவாக எல்லா மதங்களுமே ) கிறித்துவம் ‘ஞானத்தை’, அறிவை (fruit of wisdom was forbidden) ஏன் புறந்தள்ளுகின்றன?

அன்பை மையப் புள்ளியாகவைத்தே கிறித்துவம் இயங்குவதாகக் கூறப்படுகிறது’ ஆனால், அன்பு அல்ல கடவுளின் மேல் ‘பயமே’ ஞானத்தின் ஆரம்பம் என்று விவிலியத்தில் கூறப்படுகிறது. ஏனிந்த முரண்பாடு?

ஏற்கெனவே சொன்னது போல இந்த ஐயங்கள் வர வர ஜெபம் செய்தேன் – ஐயங்கள் விலகட்டும் அல்லது பதில் கிடைக்கட்டுமென்று. இரண்டும் நடக்கவில்லை. அதனல், அடுத்த நிலைக்குச் சென்றேன். அது – கிறித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் உரசிப்பார்ப்பது என்ற நிலை.

அந்த இரண்டாம் நிலை இனி வரும்…

64. நான் ஏன் மதம் மாறினேன்…?..6

ஏனைய பதிவுகள்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8.
   

முதலில் பதிந்த நாள்: 07.09.05இனி நான் சாராத மற்ற சில சமயங்களைப் பற்றி நானறிந்த வரை ஓர் அலசல்: இந்து மதம்:
‘இது ஒரு மதமல்ல; ஒரு வாழ்க்கை நெறி’ – எல்லோரும் சொல்லும் இதற்கு என்ன பொருள் என்று எனக்குப் புரிந்ததில்லை. இந்த மதம் ஒரு ‘அவியல்’ என்று சொல்லலாம்; ஏனெனில், இங்கு, ‘சக்தி’/ ஒளி (energy) வழிபாடு என்று இயற்கையை ஒட்டிய கருத்தும் உண்டு; முப்பது முக்கோடி தெய்வமும் உண்டு. எல்லா உயிரும் ஒன்றே என்ற கொள்கை ஒரு பக்கம்; ஆடு, கோழி பலி என்பது அதன் மறு பக்கம். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற கருத்து ஒரு பக்கம்; கடவுள் மறுப்புக் கொள்கையோடு கபிலரின் தத்துவம் இன்னொரு பக்கம். [It is a religion of conglomeration of different contrasting concepts. `Any attempt to describe Hinduism as one whole leads to startling contrasts. The same religion enjoins self-mortification and orgies; has more priest, rites and images....' (Intro to Asian Religions, Geoffrey Parrinder, pp31) ]
‘நான் ஏன் ஒரு இந்து அல்ல?’ என்ற காஞ்சையா இலியாவின் நூலைப் படித்த பிறகோ நாம் சாதாரணமாகக் கருதும் இந்து மதம் இரண்டு பட்டுத் தெரிந்தது: ஒன்று, பிராமண(ர்களின்) இந்து மதம்(brahminic hinduism); இரண்டு, மற்றவர்களின் “இந்து” மதம். முதல் வகையில் வழிபடப்படும் கடவுளர்களும் “பெரிய கடவுள்கள்” (High gods). இரண்டாவது வகையில் “சின்னக் கடவுள்கள்” (small gods). அவர்கள் வைத்துக்கொள்ளும் பெயர்கள்கூட இந்த இருவகைப்படும். ஜாதி வேறுபாடுகள் அவர்களின் பெயரிலேயே தெரியும்படி இருக்கும். பெரிய கடவுள்களின் பெயர்கள் ‘உயர்ந்த சாதி’க்கும், அடுத்த படியில் சின்னக் கடவுள்களின் பெயரும், மூன்றாவது நிலையில் ‘தாழ்ந்த சாதிக்கு’ உயிரற்ற பொருட்களின் பெயருமாய் இருந்து வருறது. சாதிப்படிகளில் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு ‘முன்னோர் வழிபாடு’தான் மதமாய், சம்பிரதாயங்களாய் (rituals) இருந்துவருவது கண்கூடு. இதைப் பார்க்கும்போது பிராமணர்களின் மதமான’இந்து’மதமும் ஒரு சிறுபான்மை மதமாகவே எனக்குத் தோன்றுகிறது.சமய பழக்க வழக்கங்கள் எல்லாவிற்றிலுமே பெருத்த வேறுபாடுகளோடு இருப்பினும் இந்த ‘இந்து’ என்ற பெயர் மட்டுமே அவர்களைச் செயற்கையாக ஒன்றுபடுத்தி வருகின்றது. அவர்கள் ஒன்றுபட ஒருவழி உண்டு. அது, ஜாதியை இந்து மதத்திலிருந்து பிரித்தெடுப்பது. சாதிகள் போனபின் அவர்கள் நடுவே உள்ள சமய வேறுபாடுகள் மறையலாம். ஆனால், இது நடக்கக்கூடிய காரியமா? சாதியை இந்து மதத்திலிருந்து பிரிக்கவே முடியாது. இந்தச் சாதிகள் மக்களை என்றும் பிரித்தே வைத்திருக்கும். ‘அவனன்றி அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஓர் இந்து, இந்த சாதிப்பிரிவினையும் கடவுளால் வந்தது; இவன் இன்ன சாதிக்காரனாக இருக்க வேண்டும் என்பது கடவுளின் திருவுள்ளம்; அதை மாற்ற நாம் யார் என்று கேட்டால் – அந்த நம்பிக்கையை யாரால் மாற்ற முடியும்? கடவுள்நம்பிக்கைகளுக்கும் ‘பகுத்தறிவு’(rationality)-க்கும் எந்த மதத்தில்தான் தொடர்பிருக்கிறது? வேதங்கள்: ஏறத்தாழ 1500 – 1200 B.C. என்ற கால கட்டத்தில் மேற்கிலிருந்து இந்தியாவின் வடக்கினில் நுழைந்து, பின் இந்தியாவின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் காலூன்றிய ஆரியர்களின் சமய நூலாக எழுதப்பட்ட நான்கு வேதங்கள் brahminic hinduism-த்தின் அடிப்படை நூல்களாக உள்ளன. இந்தியாவின் கொடூரமான,வேதனையான சாதி வேறுபாடுகள் இந்த வேதங்கள் தந்த பரிசு. இந்த வேதங்களில் கூறப்படும் வருணன்,ருத்ரன், இந்திரன் போன்ற தெய்வங்களின் ‘மவுசு’ குறைந்து காலப்போக்கில் இந்தக்கடவுள்கள் இல்லாமலே போய்விட்டனர்; இதேபோல் வர்ணாசிரமக் கொள்கைகளான சாதி வேறுபாடுகளும் இல்லாதொழிந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும்.உபநிஷத்துகள்:வேதங்கள் பல கடவுளர்களைப் பற்றிப் பேச, உபநிஷத்துக்கள் ஒரே ஒரு ‘பரம்பொருளை’ப் பற்றிப் பேசுகின்றன. உபநிஷத்துகள் ‘வேதாந்தங்கள்’ (வேதம் + அந்தம்) என அழைக்கப்பட்டன. வாய்வழிச் செய்திகளாக வந்த இவை 800 B.C.யில் எழுத்துருவுக்கு வந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகின்றன. “ஓம்” என்னும் அருட்சொல்லின் பெருமையும், தியானத்தின் அருமையும் உபநிஷத்துக்களின் கொடை. பரம்பொருளும், மனிதனும் இணைந்ததுவே இந்தப் பிரபஞ்சம்; இவ்வுலக வாழ்வு ஒரு ‘மாயை’யே. ‘கர்ம வினை’தீர்க்கும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வினை அறுத்து,இறுதியில் பரம்பொருளோடு ‘ஆத்மா’ இணைந்து ‘முக்தி’ பெறவேண்டும். எல்லா உயிர்க்கும் இதுவே அளிக்கப்பட்ட ‘விதி’. வேதங்கள் தந்த பல-கடவுள்-தத்துவம், உபநிஷத்துக்களின் மூலம் ஒரு-கடவுள்-தத்துவமாக மாறுகின்றது.த்வைதம், அத்வைதம்பின்வந்த ராமானுஜர், சங்கரர் போன்றவர்களால், இதில் சில திரிபுகள் ஏற்பட்டன. த்வைதம் – dualilty- இரட்டை நிலை பற்றிப் பேசுகிறது. உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் தெரியும் ஒரே பிம்பம் போல், உயிர்களில் பரப்ப்ரும்மம் இருக்கிறது; ஆயினும், ஆத்மா ப்ரம்மத்திலிருந்து வேறுபட்டே இருக்கிறது; முக்தி அடையும்போதே ‘இரண்டும்’ ஒன்றாகிறது.
அத்வைதமோ, ஆத்மாவும், ப்ரம்மும் ஒன்றே; ஓர் அறையினுள் காற்று எங்கும் இருக்கிறது, ஆனால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள பானைகளில் உள்ள காற்று தனித்தனி; இருப்பினும், அந்தப் ‘பானை’ உடைந்து அதில் உள்ள காற்று ‘வெளிக்காற்’றோடு ஒன்றுகிறது – என்று சொல்வது அத்வைதம்.
இந்து மதம் என்றால் ‘புராணங்களே’ நமக்கு முக்கியமாகப் படுகின்றன. ஆனால், அவைகளயும் தாண்டி அதிலுள்ள பல விதயங்களை யாரும் அதிகமாகக் கண்டுகொள்வதில்லை. எல்லா உயிரையும் ஒன்றாய் எண்ணுவது, semitic மதங்களான கிறித்துவம், இஸ்லாமில் சொல்வது போலன்றி, (eternal punishment) நித்திய தண்டனை என்று ஒன்றில்லாமல் பல பிறப்பு-பின் இறுதியில் முக்தி என்னும் உய்விப்பு, – இவைகள் எல்லாமே மனித நியாயங்களோடு இருப்பதாக எனக்குத் தெரிகிறது. இவைகள் நான் இந்து மதத்தில் பார்க்கும் சில பாசிட்டிவான் கருத்துக்கள். ஆனாலும் இந்து மதம் என்பது இது மட்டும்தான் என்றில்லையாதலால் இம்மதத்தோடும் எனக்கு ஒன்றுதல் இல்லை. அதுவுமின்றி, சாதியமைப்புக்குச் சமயச் சாயம் பூசி, இந்த வேறுபாடுகள் கடவுளிடமிருந்து வந்தவை என்று சனாதன தர்மம் பேசும்போது அந்த மதமே ஒரு எட்டிக்காயாக எனக்கு மாறிவிடுகிறது.சீக்கியம்:15-ம் நூற்றாண்டில் இந்து, இஸ்லாம் இரண்டு மதத்தில் உள்ள நல்ல விதயங்களை ஒன்றிணைக்கப் பலர் முயன்றனர். அதில் கபீர் (1440) என்னும் முஸ்லீம், நெய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த இவர், ஒரு கவிஞராக வாழ்ந்தார். இறைவனின் மேல் காதலுற்று, அவன் முன்னிலையில் பரவசப்படுபவதாக அவர் எழுதிய கவிதைகள் இந்து சமயச் சாயலோடு அமைந்தன. இந்தக் கவிதைகளாலும், கபீரின் கருத்துக்களாலும் கவரப்பட்ட நானக் (1469-1538)என்பவர், இந்து மதத்தில் பிறந்தவராயினும் இஸ்லாமின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டார். அவர் கடவுளின் ‘தரிசனம்’ கிடைத்து, அதில் கடவுளால் ஏவப்பட்டு புதிய மதமாக சீக்கிய மதத்தை உருவாக்கியதாக அம்மதத்தினரின் நம்பிக்கை. குரு நானக்கின் இந்த சீக்கியமதம் இந்து-இஸ்லாம் மதங்களுக்கும் பொதுவானதுவாகத் தோன்றிய புது மதம்.ஜைன மதமும் புத்த மதமும்

ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த இரு மதங்களில் பல ஒற்றுமைகள்: இரண்டுமே, கர்மம், ஆன்மா, மறுபிறவிகள், நிர்வாண நிலை – என்ற இந்து மதக்கொள்கைகள் பலவும் கொண்டிருந்தும் ‘பரப் ப்ரும்மம்’ என்ற கடவுள் கொள்கையில் மாறுபடுகின்றன. இரண்டுமே கடவுள் மறுப்பை சொல்லும் மதங்களாக ஆரம்பிக்கப் பட்டு, பின் அப்படி சொன்னவர்களையே கடவுளர்களாக மாற்றிய ‘அற்புதம்’ நடந்துள்ளது. இந்தியாவில் பிறந்த புத்தமதம் இங்கிருந்து விரட்டப்பட்டதற்கு முக்கிய காரணம்: இந்து மதத்தில் இருந்த பிராமணீய சாதியக் கொள்கைகளுக்கு எதிராக எழுந்தது புத்த மதம். அதன் காரணமாகவே, இங்கு வேறூன்றியிருந்த இந்து மதத்தின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது புத்த மதம் அது பிறந்த மண்ணிலேயே காலூன்றமுடியாது போயிற்று.புத்தம், கன்ஃபியூஷனிஸம், தாவோயிஸம் இந்த மூன்றுமே ‘சைனாவின் முக்கிய மூன்று மதங்கள்’ (?) என்றே அழைக்கப்படுகின்றன. இந்த மூன்றுமே, ‘ஒரே இடத்திற்கு செல்லும் மூன்று பாதைகள்’ என்றே கருதப்படுகின்றன. பொதுவாகவே, எல்லா கீழ்த்திசை நாடுகளிலும் ‘முன்னோர் வழிபாடு’ என்பது நிலவிவருகிறது. அதிலும், சீன சமுதாயத்தில் இது எல்லா சமயங்களிலும் ஊடுறுவியுள்ளது.குங் ஃபு ட்ஸூ (Kung Fu Tzu – Latinised as Confucius by Western missionaries) – இவரது கொள்கைகள் எல்லாமே சமூகச்சிந்தனை பற்றியதாகவே இருக்கின்றன. “அடுத்தவர்கள் எனக்கு எதைச் செய்யக்கூடாதென்று நான் நினைக்கிறேனோ, அதை நான் அவர்களுக்குச் செய்யக்கூடாது” ( பைபிள் ?)தாவோயிஸம்: (Tao -என்ற சொல்லின் பொருள்: ‘வழி’). தாவோஸித்தின் முக்கிய நோக்கம்: இறுதியில் இறையோடு இணைவது’ ( அத்வைதம்?) இந்த மதக்கோட்பாட்டின் ‘மூன்று தூயவர்கள்’ தத்துவம் (Trinity of Christianity & Hinduism ?) கிறித்துவ, இந்து மதக்கோட்பாடுகளோடு ஒத்துள்ளன. ஜென்(Zen)தத்துவங்கள் இம்மதக் கோட்பாட்டிலிருந்து பிறந்தவையே. கருத்துக்கள் மறைமுகமாகவே வெளிப்படுத்தப்படுகின்றன. ஒரு உதாரணம்: ட்ஸூ ஒரு பட்டாம்பூச்சி ஒன்றை கனவில் காண்கிறார். பின்பு, “நான் இப்போது ஒரு பட்டாம்பூச்சியாக இருந்து ஒரு மனிதனைக் கனவில் காண்கிறேனோ? இரண்டில் எது உண்மை?”, என்று கேட்கிறார்.இந்தக் கீழ்த்திசை சமயங்களைப் பற்றி மட்டும் போதும் என்றே
நினைக்கிறேன். கடைசியாக இஸ்லாம் பற்றி…