176. மாங்கா மடையர்களா…?

இன்று (18.08.’06) மதியம் ஒன்றரை மணி சன் டிவி செய்திகளில் ஒன்று: சென்னையில், விமான நிலையம் அருகில் விளம்பரப் பலகைகளுக்காகப் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் விமானப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக விமான நிலையம் கொடுத்த புகாரில், அந்த விளக்குகளுக்குத் தொடர்புகள் மாநகராட்சியால் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் விளம்பரதாரர்களால் போடப்பட்ட வழக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, மாநகராட்சிக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. அதுவரைகூட சரி. இரண்டு பக்கம் கேட்டு நீதி வழங்க வேண்டியதுதான்.

ஆனால், அதுவரை விளக்குகளைத் துண்டிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துமுள்ளது.

விளக்குககளைத் துண்டிப்பதற்கான காரணம்: அதிகப் படியான ஒளியால் ஏற்படக்கூடிய குளறுபடியை நீக்க; விமானப் பாதுகாப்பிற்காக. இதைக்கூட எண்ணாமல் தற்காலிகத் தடைவிதிக்கிறது நீதி மன்றம் என்றால், அந்த மாதிரி தீர்ப்பு வழங்கும் மேதாவிகளைத் தலைப்பில் சொன்னது போல் சொன்னால் என்ன தப்பு…? நான்கு நாட்கள் விளம்பரங்கள் விளக்கில்லாமல் இருந்துவிட்டால் என்ன குடிமுழுகிப் போகும்?
ஒருவேளை இந்த விளக்குகளின் அதீத வெளிச்சத்தால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால்…? Cann’t these judges fix up priorities first?

இந்த நீதிமன்றங்களும், அங்கிருந்து வரும் இது போன்ற தீர்ப்புகளும் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

 

37 பதில் சொல்லி இருக்காங்க//உங்கள் கொள்கைகள் மலிந்துகிடக்கிற ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்தான் இன்று இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது.//
இப்படி ஒரு பொய்யை வெகுநாளாக சிலர் பரப்பி வருகின்றனர்..முஸ்லிம்களை சமூகத்திலிருந்து ஒதுக்குவது, எதிரே வந்தாலே காத தூரம் தள்ளிப் போய்விடுவது, தனியாக மாட்டினால் அடி வெளுப்பது, நாட்டிற்குள் நுழைய விடாமல் விரட்டுவது, முஸ்லிம்களின் குடியேற்றத்தைத் தடுப்பது என்பது போன்றவையே வேகமாகப் பரவி வருகின்றன..முஸ்லிம்கள் அருகில் போகவே தயங்கும் அய்ரோப்பியன் முஸ்லிமாக மதம் மாறி வருகிறான் என்பது….ஹி..ஹி…சும்மா “டமாஸ்” பண்ணாதிங்கண்ணே..

நீதி”அரசர்”கள் எல்லாம் தூக்கத்துலயே ஸ்டே குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க..மருத்துவர்கள் காசை வாங்கிகொண்டு மருத்துவ சான்றிதழ் குடுக்கற மாதிரி…

விழுப்புரத்தில் என் நண்பனின் அப்பா (வக்கீல்) சொன்ன தகவல்..ஒரு தீர்ப்புக்காக நீதி”அரசர்” ஒருவருக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் “ஒரு மூடை அரிசி”..:)
நான் முதன் முதல்ல உங்க பதிவைப் படிச்ச உடனே நியாயம்ன்னு தோணுச்சு அப்புறம் இன்னைக்கு வந்து பின்னூட்டம் எல்லாம் பார்த்தேன் இதுதான் சான்ஸ்ன்னு எல்லாரும் நீதித் துறையை ஒரு வாங்கு வாங்கிருக்காங்க. அது சரின்னு எனக்குப் படலை அதனால தர்க்க சாஸ்திரம் யூஸ் பண்ணலாம்ன்னு எனக்குத் தெரிந்த தர்க்க சாஸ்திரத்தை யூஸ் பண்ணி இருக்கேன். இந்த லைட் வந்து எந்த அளவு தொந்தரவா இருக்குன்னு நாம எப்படி முடிவு செய்ய முடியும்? விமானம் இறங்குவதற்கு எந்த அளவு இடைஞ்சலா இருக்குன்னு நமக்குத் தெரியுமா? அதனால் ஆபத்து இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறதே அது எந்த அளவு உண்மை? இந்த விளக்குகளால் ஆபத்து ஏற்படலாம் என்று stay கொடுக்கும் முன் வாதிடப்பட்டதா அது கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இந்த stay கொடுக்கப் பட்டதா என்று நமக்குத் தெரியுமா?

இதெல்லாம் தெரியாமல் we are jumping into conclusions. இது சரியா?


தெருவில் இருக்கும் விளக்கிற்கும் விமான ஒடு பாதையில் இருக்கும் விளக்கிற்கும் ஏக பட்ட வித்தியாசங்கள் உள்ளன.

மேலும் சென்னை ஏர்போர்ட்டில் ILS என படும் அதி நவீன இன்ஸ்ட்ரூமெண்ட் லாண்டிங் சிஸ்டம் உள்ளது.

ATC என படும் ஏர் ட்ராபிக் கண்ட்ரோலிடம் ஏக பட்ட உபகரணங்கள் இருக்கின்றன.

இவைகளை மீறி இந்த போர்டுகளில் விமானம் முட்டினால் அந்த விமானிதான் மாங்கா மடையனாக இருக்க முடியும்.

சில மாங்கா மடய விமானிகள் சென்னைக்கும் வந்துள்ளனர்.

உதாரணமாக ஒரு சவூதி விமானி ஒரு இந்திய ஏர் ட்ராபிக் கண்ட்ரோலரின் வார்த்தைக்கு மதிப்பளிக்காமல் தாம்பரத்தில் உள்ள விமான படை ஓடுதளத்தில் விமானத்தை இறக்கினார்.

இந்த விமான ஒடுதளம் மிக சிறியது. விமானம் அங்கிருந்து கிளம்ப முடியாது அதை உடைத்துதான் வெளியெ எடுத்தார்கள்

எங்கேயோ யாருக்கோ சரியான முறையில் காசு வெட்டபடவில்லை அதனால் தான் கேஸ் இப்போ நீதிஅரசர்களின் காட்டில் மழைகுமரன் எண்ணம்,
உங்களை ஏன் முன்னெச்சரிக்கை முனுசாமின்னு சொல்லக் கூடாது? just kidding. right. hope you take it in a lighter vein. சரி விஷயத்துகக்ு வருவோமா?
////இதுதான் சான்ஸ்ன்னு எல்லாரும் நீதித் துறையை ஒரு வாங்கு வாங்கிருக்காங்க.//
ஏன்னு யோ்சிச்சு பாருங்க…அவ்வளவு pent-up feelings மக்களுக்கு. நாட்டு நிலம அப்படிங்க!

//இந்த லைட் வந்து எந்த அளவு தொந்தரவா இருக்குன்னு நாம எப்படி முடிவு செய்ய முடியும்?//
ஆமாங்க…ஆமா… அத நாம முடிவு செய்ய முடியாது. ஏர்போர்ட் காரங்கதான் முடிவு செய்யணும். நீங்களும், நானுமோ, இல்ல வாதிடும் வக்கீல்களோ, நம் நீதியரசர்களோ இல்லை.

//அதனால் ஆபத்து இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறதே அது எந்த அளவு உண்மை?//
அதையும் அவங்கதான சொல்லணும். அதோடு, ஆபத்து ஏதாவது ஏற்பட்டு அதன் மூலம் அந்த ஆபத்து இருக்கிறது என்பதை “உறுதி செய்துவிட்டு’” அதன் பிறகா முடிவெடுக்க முடியும்?

சரிதானே!

Comments are closed.