173. ஹைக்கூ தெரியும்; சினிகூ…?

 

 

30.8.2006

 

நேற்று இந்துவின் கடைசிப் பக்கத்தில் வந்த ஒரு செய்தி மிகவும் பிடித்தது. ராமச்சந்திர பாபு என்ற மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆரம்பித்து வைத்துள்ள ஹைக்கூ-சினிமா அல்லது சினிமா-ஹைக்கு. ஆங்கிலத்தில் இதற்கு cineku என்று பெயர் வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தங்கள் தங்கள் செல்போன் காமிராவில் திரைப்படம் எடுப்பது பற்றி ஒரு சேதி பத்திரிக்கைகளில் வந்தன. அதுபோல இங்கே ஒரு புது முயற்சி.

ராமச்சந்திர பாபு இந்த சினிகூ ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அதற்கு ஒரு இலக்கணம் தந்துள்ளார். 40 வினாடிகளுக்கு ஒரு ஷாட் வீதம் மொத்தம் மூன்றே ஷாட்டுகளில் ஒரு படம் எடுப்பது என்பதே அந்த இலக்கணம். 3 ஷாட்டுகள்; 120 வினாடிகள் – ஒரு படம். ஹைக்கூ கவிதை வடிவத்தையொத்து ஒரு திரைப்படம். எந்த கிராஃபிக்ஸ் சித்து விளையாட்டும் இருக்கக் கூடாது என்பதும் ஒரு விதி.

கேட்கவே நன்றாக இருக்கிறது. முயற்சி செய்ய ஆசை இருக்கு.

ராமச்சந்திர பாபு எடுத்த ஒரு சினிகூ-வின் “திரைக்கதை” கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் ஷாட்: குளோசப் ஷாட் – ஒரு பெண்ணின் விரலில் ஓர் ஆண் திருமண மோதிரம்
அணிவித்தல் – zoom – ஒரு ஆணும் பெண்ணும் – ஆண் பெண்ணை நெருங்க…
இரண்டாவது ஷாட்: குளோசப் ஷாட் – குழந்தை ஒன்று தாய்க்குத் தரும் முத்தம் – zoom – அப்பா,
அம்மா, குழந்தை – சந்தோஷமான குடும்பம்.
மூன்றாவது ஷாட்: குளோசப் ஷாட் – முத்தம் தரும் குழந்தை ஒன்று – zoom – இறந்த அப்பாவின்
உடல்.

இந்த சினிகூ-வின் கதை எனக்குப் பிடிக்கவில்லை. இன்னும் நல்லதாக ஆக்க முடியும்.

 

6 பதில் சொல்லி இருக்காங்க


Comments are closed.