177. சில நேரங்களில் சில பதிவர்கள்.

பதிவர்: 1

வெளியூர் பதிவர் ஒருவர்; பின்னூட்டங்கள் மூலமாக ரொம்பவே தெரிஞ்சவர். மதுரை வரப் போகதாகவும், வந்ததும் தகவல் சொல்வதாகவும் தொலைபேசியில் சொன்னார். சொன்னது போலவே மதுரை வந்தபின் சொன்னபடி தொலை பேசினார். காலம் சிறிதேயிருந்ததால் நானே அவரை அவர் தங்கியிருக்குமிடம் சென்று பார்ப்பதாகச் சொல்லியிருந்தேன். பேசும்போது வேறொரு பெயரைச் சொன்னார். நான் திகைத்ததை ஊகித்து, மறு முனையிலிருந்து விளக்கம் வந்தது: நானேதான் அது; அதுவே என் உண்மைப் பெயர் என்றார், நேரில் பார்த்தபோது விளக்கம் தொடர்ந்தது. தான் உண்மைப் பெயரைச் சொல்லுவதில்லையென்றும்,
அந்தப் பெயரில் எந்த user id-யும் கிடையாது என்றும் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார். போட்டுக்கிற போட்டோகூட ‘ஜூஜா’ தான் என்றார்!

அவ்வளவு ‘ஆட்டோக்களா’ இருக்கு நம்ம ஊரில…?

“கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் உண்மையல்ல”

பதிவர்: 2

அடுத்த பதிவர். இவரும் பின்னூட்டங்கள் மூலம் பழகியவர். என்னைப் பார்த்ததும் எல்லோரையும் மாதிரி, ‘என்னங்க, எப்படியிருக்கீங்க? நல்லா இருக்கீங்களா’ அப்டின்னெல்லாம் ஒண்ணும் கேட்காம எடுத்த எடுப்பிலேயே ‘உங்க பதிவில் போட்டிருக்கிற உங்க புகைப்படம் எடுத்தது யார்?’ என்று கேட்டார், நானும் அப்பிராணியா விவரம் சொல்லிட்டு ‘எதுக்கு அதையெல்லாம் கேக்குறீங்க’ அப்டின்னு கேட்டேன்.
‘இல்ல, உங்கள மாதிரி கொஞ்சம்கூட இல்லாம எப்படி நல்லபடியா வேற மாதிரி படம் எடுத்தாருன்னு தெரிஞ்சுக்கத்தான்’ என்றார், நான் ஒரு குழல்விளக்கா? டக்குன்னு புரியலை. ‘ஏங்க, அந்த படத்தில இருக்கிறதைப் பார்த்தா என்ன மாதிரி தெரியலையான்னு’ கேட்டேன். அதுக்கு அவர்: ‘அந்தப் படம் மாதிரி நீங்க இல்ல; ஆனா அந்தப் போட்டோகிராபர் நல்ல தொழில் தெரிஞ்சவர் மாதிரிதான் இருக்கு’ அப்டின்னார்.

அதுக்கப்புறம்தான் அவர் என்ன சொல்ல வர்ரார்னு புரிஞ்சுது !

Appearances are deceptive; photographic appearances could be all the more deceptive – அப்டின்னு ரெண்டு பேருக்கும் புரிஞ்சுது.

பதிவர்: 3

நடு உச்சி எடுத்து, கலைஞர் ஸ்டைலில் (அதாவது அந்தக் காலத்துக் கலைஞர்!) உச்சி வகிடெடுத்து தாடி மீசையுடன் ஒரு படம் போட்டு இதுதான் நான் என்று பதிவில் காண்பிச்சிக் கிட்டுருந்த ஒரு பதிவரைப் பார்த்தேன். அந்தப் படத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் “லால் சேட்ஜியின் சோட்டா பச்சா” மாதிரி இருந்தார் யெஸ். பால பாரதி. முன்ன பின்ன பார்த்ததில்லை; பின்னூட்டங்களில் கூட சந்தித்தது கிடையாது. ஆனால் மனுஷன் பார்த்ததும், ரொம்ப நாள் பழகிய தோரணையில் மிக அண்மைக்குள் என்னை நினைக்க வைத்து விட்டார் – மொபைலில் பேசிக்கொண்டேயிருந்தும் கூட ! (அந்த பக்கம் பாலபாரதி யாருகிட்டையோ கடலை, போன்லெயே வறுத்துகிட்டு இருந்தாரு(நாராயனா). – இது நான் சொல்லலைங்க; அவரது தோஸ்த் / மாப்பிள்ளை சொன்னது; ஜஸ்ட், மேற்கோளிட்டேன். அவ்வளவே!

பதிவர்: 4

அடுத்த பதிவர்: ஞானவெட்டியான். திண்டுக்கல்லில் இருந்து மதுரை புத்தக விழாவுக்குச் செல்லும் வழியில் எங்கள் மதுரை புறநகர்ப் பகுதியைத் தாண்டித்தான் போகணும். சொல்லியிருந்தார். மெயின் ரோட்டில் காத்திருந்து வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு சென்றேன். இருவரும் சாப்பிட்டுவிட்டு ஒன்றாக புத்தக விழா செல்ல நினைத்திருந்தேன். சொந்த வேலை காரணமாக அது முடியாது போக, அவர் சாப்பிடிருந்துவிட்டு, கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு விடை பெற்றார்.

நுணுக்கமான மனிதர். சாப்பிடும்போது கூட அது தெரிந்தது. கொஞ்சூண்டுன்னா கொஞ்சூண்டுதான் சாப்பிட்டார். ஆனல் அதைப் பிரித்து ‘நொறுங்க தின்னா நூறு வயசு’ன்னு சொல்லுவாங்களே அத மாதிரி ஆர அமர சாப்பிட்டார்.

அடுத்த முறை காசி செல்லும்போது என்ன செய்ய வேண்டுமென சொல்லியனுப்பியிருக்கிறேன்.

பதிவர்: 5

மொத்தமே ஆயிரம் பதிவர்களுக்குள்தான் இருக்கும்போலும். இருப்பினும் அதிலும் எப்படி ‘மிஸ்’ பண்ணக் கூடாத சில பதிவர்களை இதுவரை ‘மிஸ்’ செய்திருக்கிறேன் என்பது சென்னையில் கூடிய பதிவர் கூட்டத்தைப் பற்றிய பதிவுகளைப் படித்தபோதுதான் தெரிந்தது. ‘சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிறது’ என்பதன் மூல ஆசிரியர் அவர்தான் என்று கேள்விப்பட்டும் கூட அவரது பதிவைப் படிக்க முந்தியே தோன்றாம போச்சு. இப்போ அவரது பதிவுகள படிச்சிட்டு, அதிலயும் – “”அடப்பாவி நீ வெறும் செவன் அப்பே ஒத்துகாதா ஆளா” – அப்டின்னு எழுதியிருக்கறத படிச்சதும் ஒரேயடியா அவரது பதிவுகள் எல்லாத்தையும் ஒரே மூச்சில படிச்சேன். மனுஷன் பின்றாரு. என்ன நகைச்சுவை…சும்மா அப்டியே வெள்ளமால வருது. வாழ்க வரவனையான்; வளர்க அவர் எழுத்து.

ஆனா ஒண்ணு…’வாட்டர்’ பத்தி இவ்வளவு ஓப்பனா எழுதறாரேன்னு ஒரு சந்தேகம் வந்திச்சி. அடிக்கடி வேற அதப்பத்தி எழுதறாரேன்னு தோணிச்சி. ஒரு வேளை இந்த ஆளு playing with the psyche of readers -அப்டின்னு இருக்குமோன்னு தோணிச்சுது, அதாவது இந்த ஆளு teetotaller -ஆக இருக்கணும்; சும்மா ஒரு ‘இதுக்காக’ இப்படி ‘ரூட்’ உடுறது. லொல்லலாங்காட்டி… ‘வாட்டர்’ போடறவுங்க எல்லாம் இப்படியா அடிக்கடி ‘வாட்டர்’ பத்தி பேசுறாங்க. இப்போ பாருங்க நான் என்னைக்காவது ‘வாட்டர்’ பத்தி பேசுறேனா, என்ன?

 

45 பதில் சொல்லி இருக்காங்க


இன்னொரு பதிவர். இவர் பின்னூட்டங்களில் அதிகம் அறிமுகம் ஆகாதவர். ஆனால் ஜோதிடத்தில் ஒரு விளக்கம் வேண்டும் என்று கேட்டு தனிமடல் அனுப்பியர்.

முன்பொரு முறை மதுரை வருவதாகத் தொலைபேசியில் அறிவித்தவர். அப்போது தருமி ஐயா மதுரையில் இருப்பாரா அல்லது சென்னையில் இருப்பாரா என்று குழம்பியவர். ஆனால் மதுரை வரும் திட்டத்தை திடீரென கைவிட்டார்.

தற்போது புரட்டாசி 3ம் சனிக்கிழமை மதுரை வரத் திட்டமிட்டுள்ளார். இருப்பினும் அறிவித்துவிட்டால் முன்பு போலல்லாமல் சொல்லைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் அறிவிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

7ம் தேதி மதுரை வரத் திட்டமிருக்கும் இவர் காலையில் கள்ளழகர் கோவில் சென்றுவிட்டு, மாலையில் மீனாட்சி அம்மன் கோவில் செல்ல திட்டமிட்டுள்ளார். இடைப்பட்ட மதிய நேரத்தில் பதிவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யலாமா என்று யோசித்தும் வருகிறார்.//நடு உச்சி எடுத்து, கலைஞர் ஸ்டைலில் (அதாவது அந்தக் காலத்துக் கலைஞர்!) உச்சி வகிடெடுத்து தாடி மீசையுடன் ஒரு படம் போட்டு இதுதான் நான் என்று பதிவில் காண்பிச்சிக் கிட்டுருந்த ஒரு பதிவரைப் பார்த்தேன். அந்தப் படத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் “லால் சேட்ஜியின் சோட்டா பச்சா” மாதிரி இருந்தார் யெஸ். பால பாரதி. முன்ன பின்ன பார்த்ததில்லை; பின்னூட்டங்களில் கூட சந்தித்தது கிடையாது. ஆனால் மனுஷன் பார்த்ததும், ரொம்ப நாள் பழகிய தோரணையில் மிக அண்மைக்குள் என்னை நினைக்க வைத்து விட்டார் – மொபைலில் பேசிக்கொண்டேயிருந்தும் கூட ! (அந்த பக்கம் பாலபாரதி யாருகிட்டையோ கடலை, போன்லெயே வறுத்துகிட்டு இருந்தாரு(நாராயனா). – இது நான் சொல்லலைங்க; அவரது தோஸ்த் / மாப்பிள்ளை சொன்னது; ஜஸ்ட், மேற்கோளிட்டேன். அவ்வளவே!
//

அய்யா… தருமியாரே..
பா.க.ச மதுரை கிளை-1,ன் அமைப்பாளர் யாருன்னு தெரிஞ்சு போச்சு.
:-( (((((((
அட!நீங்களுமா?
சீரியஸா ஒரு விஷயம்:

நான் என்னவோ எந்தவொரு clue-வும் கொடுக்காதபடிதான் முதல் பதிவர் பற்றி செய்தி சொன்னேன். அவர் விரும்பும் ரகசியத்தைச் சபைக்குக் கொண்டு வரும் எண்ணம் சிறிதும் இல்லாமல், யாரும் கண்டுபிடிக்கமுடியாது என்ற நினைப்பில் எழுதினேன். ஒருவேளை எல்லா பதிவர்களும் என்னைப்போலவே மொடாக்குகளாக நினைத்து விட்டேன் போலும். பலர் இப்போது அவரை அடையாளம் கண்டதாகச் சொல்லும்போது அந்தப் பதிவர் என்மீது வைத்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்துவிட்டது போல் ஒரு குற்ற உணர்வு. இப்பதிவால் அவருக்கு ஏதும் மனக்குறை ஏற்பட்டிருப்பின் – அது என் அறியாமையால் விளைந்தது என்றாலும் – பொதுவில் அவரிடம் மன்னிப்பு வேண்டுகிறேன்.
176. மாங்கா மடையர்களா…?

இன்று (18.08.’06) மதியம் ஒன்றரை மணி சன் டிவி செய்திகளில் ஒன்று: சென்னையில், விமான நிலையம் அருகில் விளம்பரப் பலகைகளுக்காகப் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் விமானப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக விமான நிலையம் கொடுத்த புகாரில், அந்த விளக்குகளுக்குத் தொடர்புகள் மாநகராட்சியால் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் விளம்பரதாரர்களால் போடப்பட்ட வழக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, மாநகராட்சிக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. அதுவரைகூட சரி. இரண்டு பக்கம் கேட்டு நீதி வழங்க வேண்டியதுதான்.

ஆனால், அதுவரை விளக்குகளைத் துண்டிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துமுள்ளது.

விளக்குககளைத் துண்டிப்பதற்கான காரணம்: அதிகப் படியான ஒளியால் ஏற்படக்கூடிய குளறுபடியை நீக்க; விமானப் பாதுகாப்பிற்காக. இதைக்கூட எண்ணாமல் தற்காலிகத் தடைவிதிக்கிறது நீதி மன்றம் என்றால், அந்த மாதிரி தீர்ப்பு வழங்கும் மேதாவிகளைத் தலைப்பில் சொன்னது போல் சொன்னால் என்ன தப்பு…? நான்கு நாட்கள் விளம்பரங்கள் விளக்கில்லாமல் இருந்துவிட்டால் என்ன குடிமுழுகிப் போகும்?
ஒருவேளை இந்த விளக்குகளின் அதீத வெளிச்சத்தால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால்…? Cann’t these judges fix up priorities first?

இந்த நீதிமன்றங்களும், அங்கிருந்து வரும் இது போன்ற தீர்ப்புகளும் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

 

37 பதில் சொல்லி இருக்காங்க//உங்கள் கொள்கைகள் மலிந்துகிடக்கிற ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்தான் இன்று இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது.//
இப்படி ஒரு பொய்யை வெகுநாளாக சிலர் பரப்பி வருகின்றனர்..முஸ்லிம்களை சமூகத்திலிருந்து ஒதுக்குவது, எதிரே வந்தாலே காத தூரம் தள்ளிப் போய்விடுவது, தனியாக மாட்டினால் அடி வெளுப்பது, நாட்டிற்குள் நுழைய விடாமல் விரட்டுவது, முஸ்லிம்களின் குடியேற்றத்தைத் தடுப்பது என்பது போன்றவையே வேகமாகப் பரவி வருகின்றன..முஸ்லிம்கள் அருகில் போகவே தயங்கும் அய்ரோப்பியன் முஸ்லிமாக மதம் மாறி வருகிறான் என்பது….ஹி..ஹி…சும்மா “டமாஸ்” பண்ணாதிங்கண்ணே..

நீதி”அரசர்”கள் எல்லாம் தூக்கத்துலயே ஸ்டே குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க..மருத்துவர்கள் காசை வாங்கிகொண்டு மருத்துவ சான்றிதழ் குடுக்கற மாதிரி…

விழுப்புரத்தில் என் நண்பனின் அப்பா (வக்கீல்) சொன்ன தகவல்..ஒரு தீர்ப்புக்காக நீதி”அரசர்” ஒருவருக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் “ஒரு மூடை அரிசி”..:)
நான் முதன் முதல்ல உங்க பதிவைப் படிச்ச உடனே நியாயம்ன்னு தோணுச்சு அப்புறம் இன்னைக்கு வந்து பின்னூட்டம் எல்லாம் பார்த்தேன் இதுதான் சான்ஸ்ன்னு எல்லாரும் நீதித் துறையை ஒரு வாங்கு வாங்கிருக்காங்க. அது சரின்னு எனக்குப் படலை அதனால தர்க்க சாஸ்திரம் யூஸ் பண்ணலாம்ன்னு எனக்குத் தெரிந்த தர்க்க சாஸ்திரத்தை யூஸ் பண்ணி இருக்கேன். இந்த லைட் வந்து எந்த அளவு தொந்தரவா இருக்குன்னு நாம எப்படி முடிவு செய்ய முடியும்? விமானம் இறங்குவதற்கு எந்த அளவு இடைஞ்சலா இருக்குன்னு நமக்குத் தெரியுமா? அதனால் ஆபத்து இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறதே அது எந்த அளவு உண்மை? இந்த விளக்குகளால் ஆபத்து ஏற்படலாம் என்று stay கொடுக்கும் முன் வாதிடப்பட்டதா அது கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இந்த stay கொடுக்கப் பட்டதா என்று நமக்குத் தெரியுமா?

இதெல்லாம் தெரியாமல் we are jumping into conclusions. இது சரியா?


தெருவில் இருக்கும் விளக்கிற்கும் விமான ஒடு பாதையில் இருக்கும் விளக்கிற்கும் ஏக பட்ட வித்தியாசங்கள் உள்ளன.

மேலும் சென்னை ஏர்போர்ட்டில் ILS என படும் அதி நவீன இன்ஸ்ட்ரூமெண்ட் லாண்டிங் சிஸ்டம் உள்ளது.

ATC என படும் ஏர் ட்ராபிக் கண்ட்ரோலிடம் ஏக பட்ட உபகரணங்கள் இருக்கின்றன.

இவைகளை மீறி இந்த போர்டுகளில் விமானம் முட்டினால் அந்த விமானிதான் மாங்கா மடையனாக இருக்க முடியும்.

சில மாங்கா மடய விமானிகள் சென்னைக்கும் வந்துள்ளனர்.

உதாரணமாக ஒரு சவூதி விமானி ஒரு இந்திய ஏர் ட்ராபிக் கண்ட்ரோலரின் வார்த்தைக்கு மதிப்பளிக்காமல் தாம்பரத்தில் உள்ள விமான படை ஓடுதளத்தில் விமானத்தை இறக்கினார்.

இந்த விமான ஒடுதளம் மிக சிறியது. விமானம் அங்கிருந்து கிளம்ப முடியாது அதை உடைத்துதான் வெளியெ எடுத்தார்கள்

எங்கேயோ யாருக்கோ சரியான முறையில் காசு வெட்டபடவில்லை அதனால் தான் கேஸ் இப்போ நீதிஅரசர்களின் காட்டில் மழைகுமரன் எண்ணம்,
உங்களை ஏன் முன்னெச்சரிக்கை முனுசாமின்னு சொல்லக் கூடாது? just kidding. right. hope you take it in a lighter vein. சரி விஷயத்துகக்ு வருவோமா?
////இதுதான் சான்ஸ்ன்னு எல்லாரும் நீதித் துறையை ஒரு வாங்கு வாங்கிருக்காங்க.//
ஏன்னு யோ்சிச்சு பாருங்க…அவ்வளவு pent-up feelings மக்களுக்கு. நாட்டு நிலம அப்படிங்க!

//இந்த லைட் வந்து எந்த அளவு தொந்தரவா இருக்குன்னு நாம எப்படி முடிவு செய்ய முடியும்?//
ஆமாங்க…ஆமா… அத நாம முடிவு செய்ய முடியாது. ஏர்போர்ட் காரங்கதான் முடிவு செய்யணும். நீங்களும், நானுமோ, இல்ல வாதிடும் வக்கீல்களோ, நம் நீதியரசர்களோ இல்லை.

//அதனால் ஆபத்து இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறதே அது எந்த அளவு உண்மை?//
அதையும் அவங்கதான சொல்லணும். அதோடு, ஆபத்து ஏதாவது ஏற்பட்டு அதன் மூலம் அந்த ஆபத்து இருக்கிறது என்பதை “உறுதி செய்துவிட்டு’” அதன் பிறகா முடிவெடுக்க முடியும்?

சரிதானே!

175. நான் ஏன் மதம்/மனம் மாறினேன்..? 9

09.07.2006

 

இஸ்லாம் மதத்தைப் பற்றிய என் ஐயங்களை என் மதங்களைப்பற்றிய 7-ம் பதிவில் எழுப்பியிருந்தேன். பொதுவான சிலவற்றைப் பற்றிப் பேசிவிட்டு ‘இனி என் ஐயங்கள்’ என்று தலைப்பிட்டு 21 ஐயங்களைப் பட்டியலிட்டிருந்தேன். இதற்கு விளக்கமளிக்க வந்த பதிவுகளில் என் முதல் கேள்விக்குப் பதிலளிக்கப்பட்டுவிட்டது. நன்றி.

1.)பழைய ஏற்பாடு இரு (கிறித்துவம், இஸ்லாம்)மதத்தினருக்கும் பொது எனப்படுகின்றது. கிறித்துவர்களின் பைபிளில் ஆதாம் – ஏவாள் படைப்பைப் பற்றி சொல்லும்போது ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்பதை, இது ஓர் ஆணாதிக்க விளக்கம் என்று கூறியிருந்தேன். ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ? – இது என் கேள்வி.

(கேட்டிருக்கும் கேள்விகளில் இந்த முதல் கேள்வியை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அக்கேள்விக்கு நண்பர்கள் பதில் கொடுத்துவிட்டார்கள். அந்த முதல் பெண்ணுக்கு ‘அவ்வா’ (AWWA) என்று பெயர் குரானில் சொல்லியுள்ளதாக விளக்கியுள்ளார்கள். விளக்கத்திற்கு நன்றி. )

இதன் பிறகு சில பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவைகளை நான் கேள்விகளாகவே பொதுவில் வைக்கவில்லை. நான் அறிந்தவரையில் சொன்ன சில காரியங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அவற்றைப் பொறுத்தவரை எனக்கு அவைகள் அவ்வளவு முக்கியமானவைகளாகத் தெரியவில்லை. .

1) குர்ஆன் குகையில் கொடுக்கப்பட்டதா? – குரான் எப்படி எங்கே கொடுக்கப்பட்டது என்பது எனக்கு முக்கியமாகப் படவில்லை. கொடுத்தவைகளாகக் கருதப்படுபவைகளில் எனக்கு வந்த ஐயங்களைத்தான் நான் தொகுத்திருக்கிறேன்.

2) முஹம்மது நபி எழுதப்படிக்கத் தெரிந்த வர்த்தகரா ? – சில கருத்து வேறுபாடுகள் உண்டென்று படித்ததைக் கூறியுள்ளேன். அவர் கற்றவரா கல்லாதவரா என்ற விவாதத்தை நான் வைக்கவில்லை. எப்படியிருந்திருந்தாலும் அது எனக்கு உடன்பாடே.

3) சில போர்களில் தோற்றது ஏன்? god is always on the side of bigger battalion என்று சொல்லப்படுவது நினைவுக்கு வந்தது!

4) இஸ்லாத்தில் பெண்களின் நிலை:

Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார் . – தருமி

இதுவும் நான் கேள்வியாக வைக்காத ஒன்று. ஆயினும், நான் சொன்னதையும், அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலையும் (கீழே கொடுக்கப்படுள்ளது) படித்துவிட்டு, படித்தவர்கள் அவர்களே ஒரு தீர்மானத்திற்கு வந்து கொள்ளட்டும். அதில் எனக்கு விவாதத்திற்கு இடமோ தேவையோ இல்லை. ஆனால், நிச்சயமாக எனக்கு இந்த விளக்கம் சரியானதாக இல்லை. வளர்ப்பு மகனின் விவாகரத்திற்குப் பின் அந்தப் பெண்ணையே வளர்ப்புத் தந்தை மணம் புரிவது தவறல்ல என்ற இந்த கூற்று எனக்கு வியப்பையே அளிக்கிறது.

“இதில் என்ன குற்றம் கண்டீர்? ஒரு பெண்ணை கணவன் விவாக ரத்து செய்தபின் இன்னொருவர் மறுமணம் செய்யக் கூடாது என்கிறீர்களா? அல்லது வளர்ப்பு மகன் உண்மையான மகனாவான் என்கிறீர்களா ?”

5) படைப்புக்கொள்கை – “இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால் , நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான் ? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?”

- இதற்கும் நான் பதில் சொல்லத் தயாரில்லை. முற்றிலும் குரானுக்கு எதிர்மறையான விவாதம் அது; முடிவிருக்காது; விவாதிப்பதில் எந்த பயனும் இருக்காது.ஆயினும் என் இரண்டாவது கேள்விக்குரிய பதிலாக இதை எடுத்துக் கொள்கிறேன்.

-. 3-வது கேள்விக்கு அது கிறித்துவ மத நூல்களில் நடுவில் ஏற்பட்ட மாற்றங்களையும், திரிபுகளையும் பொருத்தது என்று கூறப்படலாம். அதனையும் ஒதுக்கி விடுவோம்.

- 6-வது கேள்வி சுவனம் பற்றியது. நேரடி பதில் இதற்குக் கொடுக்கப்பட்டு விட்டதா என்பதை நடுநிலை நோக்கர்கள்தான் கூற வேண்டும். எனக்கு அந்தப் பதிலில் ஒப்புதல் இல்லை.

“56:22 (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்” அவர்கள் பெண்கள் என்பதானாலும், சுவனம் செல்லும் ஆண்களுக்கு “44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்). மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.” என்பதனாலும் – ஆண்களுக்கு இத்தகைய சுவனம் காத்திருக்கிறதென்றால் பெண்களுக்கு எப்படிப்பட்ட சுவனம் என்று கேட்டிருந்தேன். குதர்க்க விவாதம் என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டு விட்டது !

ஆக, என் 21 கேள்விகளில், முதல் கேள்வி, கேள்வியே தவறானது என்று ஒப்புக்கொள்கிறேன். இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டுள்ளன. அந்தப் பதில்களை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேனா என்பது வேறு விஷயம். 4-வது கேள்வி, அதன்பின் முக்கியமாக 5-வது கேள்வி – அது எனக்கு மிக முக்கியமாகப்படுகிறது. (இந்த வன்முறை கடவுளுக்கும்-மனிதனுக்கும் நடுவே வருவது ஆச்சரியம் மட்டுமல்ல; அதி பயங்கரமும் கூட.)மீதிக் கேள்விகளும் இருக்கின்றன.

இந்த நிலையில் புதிதாக ஒரு கேள்வியும் சேர்ந்து விட்டது. அதை பட்டியலில் சேர்த்து விடுகிறேன். திருப்திகரமான பதில் கிடைத்த முதல் கேள்வியை விட்டுவிட்டு இந்தக் கேள்வியை என் அந்தப் பழைய பதிவில் சேர்த்துள்ளேன். just an updating.

அந்தக் கேள்வி:

குர்ஆன் 25 : 68: ‘அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.(காரணத்தோடு கொல்லலாம் என்று பொருள் படுகிறதே?’ – கொலை செய்பவனுக்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதா பெரிது?)

5:32: “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம்.

5:33 அல்லாஹ்வுடனும், அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு, பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல், அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுதல்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல்…

கிறித்துவத்தில் ‘கொலை செய்யாதே’ என்பது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; சமணத்தில் நுண்ணுயிர்களைக் கூட கொல்லக் கூடாதென்ற தத்துவம்; பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்கிறது தமிழ்மறை; எல்லா உயிரும் ஒன்றே, உயிர்க்கொலை தவறு என்கிறது இந்து மதம். இந்த கோட்பாடுகளில் எந்த clasue, sub-clause-ம் கிடையாது, அதாவது இந்தந்த மாதிரி நேரங்களில் மட்டும் கொலை செய்யலாம் என்ற விலக்குகள் தரப்படவில்லை. கொலை என்பது ஒட்டுமொத்தமாக தவறு; பாவம் என்றுதான எல்லா மதங்களும் போதிக்கின்றன. இந்த இடத்தில், நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர்களையும், மனிதர்களுக்கு நடுவில் நடக்கும் சண்டைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாதென நினைக்கிறேன். நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர் என்றால் அங்கு ‘கீதையின் விதிகள்தான்’ எங்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனிதர்களுக்குள்ளும் அந்த விதிகள் பொருத்தமாகக் கூடாது.

இஸ்லாமியத்தில் மட்டும் கொலை செய்வதற்கு ஏன் சில விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏதாவது ஒரு சரியான காரணம் கொண்டு -
கொலைக்குப் பழியாக -
குழப்பத்தைத் தடுக்க -
அல்லாஹுடனும், அவன் ரஸுலுடன் போர் செய்பவர்களை -
குழப்பத்தை உண்டாக்குபவர்களை -

இந்த சமயங்களில் கொலை செய்வது சரியா?

கொடூரக் கொலைகாரர்கள்கூட தங்கள் கொலைக்குக் காரணம் சொல்ல முடியுமே. அப்படியானால் ஒவ்வொரு கொலையும் யாரோ ஒருவரால் – நிச்சயமாக கொலை செய்தவனால் – காரண காரியங்களோடு நியாயப்படுத்த முடியுமே! அதோடு பழி வாங்குவது, அதற்காகக் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறதே! இவைகள் எப்படி சரியாகும்.

புரிதலுக்காகவே இந்தக் கேள்வி.

 

19 பதில் சொல்லி இருக்காங்க


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சரியானது. இஸ்லாம் கொடுக்கின்ற தண்டனைகளை பாதிக்கப்பட்டவனின் கண் கொண்டு பாருங்கள். அல்லது உங்கள் தாயை அல்லது சகோதரியை ஒருவன் கற்பழித்திருந்தால் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள். (மன்னிக்கவும்- படிப்பவர்களுக்கு குற்றத்தின் கடுமையை உணர்த்தத்தான்.)

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது (அல்குர்ஆன்2:178)
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (அல்குர்ஆன்2:179) என்று கூறுவதோடு

ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.(அல்குர்ஆன்42:43) என்றும் கூறுகிறது.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டச் சொல்வது எழுதுவதற்குத்தான் நன்றாகயிருக்கும். செயல்படுத்த முடியாதது. சொல்பவர்கள் கூட செயல்படுத்த மாட்டார்கள் அல்லது முடியாது. இதுதான் மனித இயற்கை. இயற்கைக்கு எதிரான சட்டங்கள் இஸ்லாத்தில் இல்லை.

குர்ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்தவர்கள்தான் முஹம்மது நபி(அன்னாரின் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அவர்கள். ஒரு மனிதனைக் கொல்வது ஒரு சமூகத்தை கொன்றதற்கு ஒப்பாகும் என்பது அன்னாரது வாக்கு அதாவது இஸ்லாமிய கொள்கை. (சமீபத்தில் நமது முதல் இந்தியக் குடிமகன் காஷ்மீரில் பேசும் போது கூட இதைக் குறிப்பிட்டார்)

இஸ்லாம் சில குறிப்பிட்ட அல்லது தக்க காரணங்களுக்காக ஒரு மனிதன் கொல்லப்படலாம் என்கிறது. இந்த குறிப்பிட்ட அல்லது தக்க காரணங்கள் என்பது கொலைக்குப் பதில் அல்லது கொலையை விடக் கொடிய குற்றங்கள் – அவற்றை இஸ்லாம் தெளிவாக்கி விட்டது.

ஒருவன் கொல்லப்படக் கூடிய குற்றம் செயதிருந்தாலும் பாதிக்கப்பட்டவர் அங்குள்ள அரசிடம் முறையிட்டு அரசின் முறையான விசாரனைக்குப் பின்னர் அரசுதான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இதுதான் நபி(அன்னாரின் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அவர்கள் காட்டித் தந்த வழி. தவறு செய்தவர்களை யார் வேண்டுமானாலும் கொல்லலாம் என்பது இஸ்லாமிய வழியல்ல.

மனதில் இருந்த சில குர்ஆன் ஆதாரங்களைத் தந்திருக்கிறேன். பணியிலிருக்கம்போது எழுதிய பின்னூட்டம். தாங்கள் விரும்பினால் மேலும் ஆதாரங்கள் தருவேன்.

கடைசியாக கேட்ட கேள்விக்கு இந்த பதிலில் உங்களுக்கு திருப்தியில்லையென்றால், உங்களின் மற்ற கேள்விகளையும் படித்து விட்டு, நாகூர் ரூமியின் பதிலுக்குப்பின், மேலும் விளக்க முயற்சிப்பேன்.


அன்புள்ள சுல்தான் அவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே கத்தி தூக்கிக் கொண்டால் இவ்வுலகு என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

மேலும் இன்றைய உலகில்

///அல்லது உங்கள் தாயை அல்லது சகோதரியை ஒருவன் கற்பழித்திருந்தால்
///

மட்டும் தான் கத்தி தூக்கப் படுகிறதா இல்லையே இந்த நிலையில் யாரால் வரையுறுக்க முடியும்? இந்த பாதகங்களுக்காக மட்டுமே ஒருவர் கொலை செய்யலாம் இல்லை கூடாது என்பதை?

பலர் இன்று தங்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிராக செயல் பட்டாலே அது சகோதரியை கற்பழிப்பதை விட படு பாதகமான ஒரு குற்றம் என்று யோசித்து கத்தி தூக்கிக் கொண்டால் என்னவாகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பசியால் திருடினால் மனிதாபிமானம் கொண்டு விட்டு விடலாமா இல்லை கையைத் துண்டிக்க வேண்டுமா என்பதை நிர்ணயம் செய்யாமல் கையை வெட்டி விட அனுமதிப்பது சரியா?

உங்கள் மத நம்பிக்கைகளை புண் படுத்த எழுதவில்லை உணர்தலே எல்லாவற்றுக்கும் தீர்வு என்பதால் என் புரிதலை வெளிப் படுத்தி இருக்கிறேன். இதில் தவறிருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

தவறு இருப்பது மதத்திடமா மனிதனிடமா என்பதையும் தாங்கள் மாற்றுப் பார்வை கொண்டு பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கொலை செய்தவனுக்கும் மனிதத் தன்மை உண்டு அவனுக்கும் ஒரு redemption இருக்கட்டுமே என்று கூட சில கருத்துக்கள் சொல்லப் பட்டிருக்கலாம் அதனை தவறாக எடுத்துக் கொண்டு தவறிழைத்தால் அது மனிதன் தவறா மதத்தின் தவறா?

எதையும் எப்படியும் புரிந்து கொள்ளலாம் சரியானதைத் தவறாகவும் தவறானதை சரியாகவும் எல்லாமே புரிந்து கொள்பவன் பார்வையில்தான் என்று நினைக்கிறேன்.

அன்பு வழி அற வழியே சிறந்தது என்பதை எல்லோரும் உணர வேண்டும்.கொலைக்காக பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. உங்கள் மீது என்பது சமூகத்தின் மீது. தனி மனிதனுக்காக என்று வைத்துக் கொண்டாலும் – அவன் பழி தீர்த்துக் கொள்வது அரசாங்கத்தின் முலமாகத்தான்.
இஸ்லாமிய சட்டத்தின் படி கொலைக்கு கொலைதான் தண்டனை. பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து பிணைத்தொகை பெற்றுக் கொண்டு விட்டு விட்டாலே தவிர. இதிலே முரண்பாடு எங்கே?

அன்பின் செல்வன், டார்வின் தியரி என்பது தியரிதான் – மாறக்கூடியது. நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல. அதை விட சிறந்த தியரி அல்லது நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அதை மாற்றக்கூடும்.

அன்பின் காந்தித்தொண்டன், பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக கத்தி தூக்கக்கூடாது – அரசு,சட்டம், நீதிமன்றம் முலமாகத்தான் எதையும் செய்யவேண்டும் என்பதை முன்னரே சொல்லி இருக்கிறேன். அல்லது எல்லாத் தவறுகளுமே மன்னித்து விடப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் உலகில் சட்டம், நீதித்துறை என்பதெல்லாம் தேவையற்றது என ஆகி, அது தவறுகள் பெருகவே வழிவகுக்கும்.

/இன்று தங்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிராக செயல் பட்டாலே அது சகோதரியை கற்பழிப்பதை விட படு பாதகமான ஒரு குற்றம் என்று யோசித்து கத்தி தூக்கிக் கொண்டால்/
இஸ்லாம் ‘உண்மையிலிருந்து பொய் தெளிவாகி விட்டது’, ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உன் விருப்பம். ‘என் வழி எனக்கு உன் வழி உனக்கு’ என்று மதங்களுக்கிடையே சகிப்புத்தன்மையை போதிக்கிறது. அதன் பின்னும் யாரேனும் கொலை செய்தால் (அவரைக் கொன்று)தண்டிக்கச் சொல்கிறது.

பசியால் திருடியவனுக்கெல்லாம் கை வெட்டப்படுவதில்லை. ஒருவரை பசியால் துடிக்க வைத்து திருட
வழி வகுப்பதை முழுச்சமூகத்தின் மீதான குற்றமென இஸ்லாம் சொல்கிறது. அவரை விட்டு விட மட்டுமல்ல அவருக்கு சரியான ஏற்பாட்டையும் செய்ய வேண்டுமென இஸ்லாம் நிர்ணயித்துள்ளது.

/கொலை செய்தவனுக்கும் மனிதத் தன்மை உண்டு அவனுக்கும் ஒரு redemption இருக்கட்டுமே/
எல்லா தவறு செய்தவனும் ஒரு நியாயம் கற்பிக்கத்தான் செய்வான். அதனால் தண்டனையே கொடுக்கக்கூடாது என்று சொல்வது மனிதத்தை தவறான பாதையில்தான் செலுத்தும்.

/எதையும் எப்படியும் புரிந்து கொள்ளலாம் சரியானதைத் தவறாகவும் தவறானதை சரியாகவும் எல்லாமே புரிந்து கொள்பவன் பார்வையில்தான் என்று நினைக்கிறேன்/
சரியானதை தவறென்று புரிந்து கொள்வது, புரிந்து கொள்ளுதலின் தவறு. அதனால் சரியானது தவறாகி விடாது.

தவறு இஸ்லாத்திலில்லை அதைப் பின்பற்றுகிற மனிதர்களிடம்தான்.
அதற்காக இஸ்லாம் பின்பற்ற முடியாயததுமில்லை. இஸ்லாம் மார்க்கம் எளிமையானது.
ஒரு சிலர் செய்யும் தவறு பூதாகரமாக காட்டப்படுவதாலும், மேற்கத்திய மற்றும் உயர்சாதி ஊடகங்டகளின் திரித்தலினாலும்தான் இஸ்லாத்தைப் பற்றிய இன்றைய தவறான புரிதல்.

அன்பு வழி அற வழி சிறந்ததுதான் அதற்காக நீதிமன்றம், தண்டணைகள், இ.பி.கோ. எதுவும் தேவையில்லையா என்ன!
கேள்விகள் கேட்கப்படும் பொழுதுதான் தெளிவுகள் பிறக்கும். தனிமனித விமர்சனங்களும், காழ்ப்புணர்வும்தான் தவறு நண்பரே.


என் பின்னூட்டத்தில் சில குழப்பங்கள் நிகழ்ந்து விட்டது. கீழ்கண்ட கேள்விகள் எல்லாம் தருமி அவர்களைப் பார்த்து வைத்தது. ஆனால் சரியாக சொல்லாததால் சுல்தானைப் பார்த்தே வைத்த கேள்விகள் போல தோன்றிவிட்டது.

///
தவறு இருப்பது மதத்திடமா மனிதனிடமா என்பதையும் தாங்கள் மாற்றுப் பார்வை கொண்டு பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கொலை செய்தவனுக்கும் மனிதத் தன்மை உண்டு அவனுக்கும் ஒரு redemption இருக்கட்டுமே என்று கூட சில கருத்துக்கள் சொல்லப் பட்டிருக்கலாம் அதனை தவறாக எடுத்துக் கொண்டு தவறிழைத்தால் அது மனிதன் தவறா மதத்தின் தவறா?

எதையும் எப்படியும் புரிந்து கொள்ளலாம் சரியானதைத் தவறாகவும் தவறானதை சரியாகவும் எல்லாமே புரிந்து கொள்பவன் பார்வையில்தான் என்று நினைக்கிறேன்.
///

மேலும்
///
அன்பு வழி அற வழியே சிறந்தது என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
///

இது என்னுடைய signature. ஒவ்வொரு தடவையும் italics போன்று பார்மேட் செய்வதெல்லாம் கஷ்டமாக இருக்கிறது. அதனால் அப்படியே விட்டு விடுவது வழக்கமாகி விட்டது. மற்றபடி என்னுடிய எல்லாக் கேள்விகளுமே புரிதல்களுக்காகவே.

கடைசியாக ஒன்று கூறிக் கொள்கிறேன் மனிதனால் உருவகிக்கப்பட்டதுதான் மதம் ஆகவே இதனால் தொல்லைகள் ஏற்படுகிறது என்று தெரியும் சமயம் அதனை சீர் தூக்கிப் பார்ப்பது தவறல்ல.

அன்பு அற வழியில் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து விட முடியாது என்பது உண்மை ஆனால் பல பிரச்சனைகளுக்கு அன்பு வழியில் சென்று தீர்வு காண்பதே நலம்.

//உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகே அபுமுஹை ஒரு பதில் பதிவளித்திருப்பது தெரிந்து அங்கே போனேன். மற்றபடி எனக்கு என்ன ஜோசியமா தெரியும்! குறிப்பிட்டமைக்கு நன்றி.

கோபத்தில் அங்கு சிலர் குமுறிக்கொண்டிருப்பது பார்த்தேன்.களம் பிடிக்கவில்லையாதலால் அதைப் பற்றி ஏதும் கூற விளையவில்லை.

//

கலக்குறீங்க புரொபசர்! உங்க பதிவ எல்லாரும் ஜோசியம் தெரிஞ்சு தான் படிக்கிறாங்களா?

குமுறல் என்னன்னூ சொன்னா நானும் பாக்குறேன். வந்ததைப் பதிவு செய்யும் ஒரு basic courtesy கூடவா இல்லை உங்களிடம்?

உடனே போகும் பதிவுக்கெல்லாம் பின்னூட்டம் கொடுக்க முடியாது என நழுவ வேண்டாம்

அது உங்களுக்கு பதில் அளிக்கும் பதிவாக இருப்பதால் தான் courtesy குறித்துப் பேசுகிறேன்.


173. ஹைக்கூ தெரியும்; சினிகூ…?

 

 

30.8.2006

 

நேற்று இந்துவின் கடைசிப் பக்கத்தில் வந்த ஒரு செய்தி மிகவும் பிடித்தது. ராமச்சந்திர பாபு என்ற மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆரம்பித்து வைத்துள்ள ஹைக்கூ-சினிமா அல்லது சினிமா-ஹைக்கு. ஆங்கிலத்தில் இதற்கு cineku என்று பெயர் வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தங்கள் தங்கள் செல்போன் காமிராவில் திரைப்படம் எடுப்பது பற்றி ஒரு சேதி பத்திரிக்கைகளில் வந்தன. அதுபோல இங்கே ஒரு புது முயற்சி.

ராமச்சந்திர பாபு இந்த சினிகூ ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அதற்கு ஒரு இலக்கணம் தந்துள்ளார். 40 வினாடிகளுக்கு ஒரு ஷாட் வீதம் மொத்தம் மூன்றே ஷாட்டுகளில் ஒரு படம் எடுப்பது என்பதே அந்த இலக்கணம். 3 ஷாட்டுகள்; 120 வினாடிகள் – ஒரு படம். ஹைக்கூ கவிதை வடிவத்தையொத்து ஒரு திரைப்படம். எந்த கிராஃபிக்ஸ் சித்து விளையாட்டும் இருக்கக் கூடாது என்பதும் ஒரு விதி.

கேட்கவே நன்றாக இருக்கிறது. முயற்சி செய்ய ஆசை இருக்கு.

ராமச்சந்திர பாபு எடுத்த ஒரு சினிகூ-வின் “திரைக்கதை” கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் ஷாட்: குளோசப் ஷாட் – ஒரு பெண்ணின் விரலில் ஓர் ஆண் திருமண மோதிரம்
அணிவித்தல் – zoom – ஒரு ஆணும் பெண்ணும் – ஆண் பெண்ணை நெருங்க…
இரண்டாவது ஷாட்: குளோசப் ஷாட் – குழந்தை ஒன்று தாய்க்குத் தரும் முத்தம் – zoom – அப்பா,
அம்மா, குழந்தை – சந்தோஷமான குடும்பம்.
மூன்றாவது ஷாட்: குளோசப் ஷாட் – முத்தம் தரும் குழந்தை ஒன்று – zoom – இறந்த அப்பாவின்
உடல்.

இந்த சினிகூ-வின் கதை எனக்குப் பிடிக்கவில்லை. இன்னும் நல்லதாக ஆக்க முடியும்.

 

6 பதில் சொல்லி இருக்காங்க