171. அனானிகளுக்கு மட்டும்…

 

 

இடப் பங்கீடு பற்றி விரிவாக எழுத வேண்டிய ஒரு நிலை திசைகளில் எழுத அழைக்கப்பட்டதால் ஏற்பட்ட பிறகே அதனைப் பற்றிய ஒரு முழுக் கண்ணோட்டம் எனக்குக் கிடைத்தது. கிடைத்த சேதிகளும் நடந்து வந்த, வருகின்ற விஷயங்களைப் பார்க்கும் போதுதான் ஒரு மிரட்சியே ஏற்பட்டது,

இடப்பங்கீட்டின் தேவை,
இதுவரை நடந்தேறிய நல்லதும் அல்லதும்,
இனி நடக்கவேண்டியவைகள்,
அதற்குள்ள முட்டுக்கட்டைகள்,
முட்டுக்கட்டை போடுபவர்களின் திறமை,
அவர்களின் மனப்பாங்கு,
எல்லாவற்றையும் விடவும்
UPSC தேர்வுகளில் நடக்கும் பித்தலாட்டங்கள்

இவைகள் எல்லாம என்னை உண்மையிலேயே மிகவும் பாதித்தன. அந்தப் பாதிப்பை நம் பதிவர்களோடவாவது பகிர்ந்து கொள்ள நினைத்து அக் கட்டுரையை என் பதிவுகளில் தொடர்ந்து இட்டேன். பலரின் கவனம் கவர வேண்டுவதற்காகவே அக்கட்டுரையைப் பகுதிகளாகப் பிரித்தும் இட்டேன்.

ஆயினும் நான் எதிர்பார்த்தது போல் இந்த விஷயம் அதிகம் பேரைப் போய்ச்சேர்ந்ததாகவோ, படித்தவர்களைப் பாதித்ததாகவோ தெரியவில்லை.அதற்குக் காரணமும் தெரியவில்லை. வழக்கமாக என் பதிவுகள் பக்கம் கொஞ்சமாவது எட்டிப் பார்த்துவிட்டுப் பின்னூட்டம் வெகு சிலராவது போடுவதுண்டு.  I would not touch it even with  a ten foot pole  என்பது மாதிரி யாரும் எட்டிகூடப் பார்க்கவில்லை.

ஒவ்வொரு semester இறுதியிலும் மாணவர்களிடமிருந்து ஒரு feedback வாங்குவதுண்டு – நான் வகுப்பு எடுத்த ‘அழகை’ப்பற்றி தெரிந்து கொள்வதற்காக. அந்த feedback எழுதும் போது மாணவர்கள் தங்கள் பெயரை எழுதக்கூடாது என்பது ஒரு விதி. அதைப் போலவே இப்போது ஒரு feedback எனக்கு வேண்டும். ஆகவே வழக்கமான என் விதியைத் தளர்த்தி உங்களிடமிருந்து முறையான, என் மாணவர்கள் இதுவரை தந்தது போன்ற முதிர்வான, பாரபட்சமற்ற, forthright கருத்துக்களை அனானியாக வந்தே தெரிவிக்க அழைக்கிறேன்.

எனக்குள் உள்ள கேள்விகள்:

1. ஏன் இந்தப் பதிவுகள் மற்ற என் பதிவுகளுக்குப் பெறும் கவனிப்பைக் கூட பெறவில்லை?

2. கட்டுரை உங்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா?

3. ‘நடப்பது நடந்தே தீரும்’, தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும்’, – என்பது போன்ற fatalist idea-வின் படி செல்லும் மனப்பாங்கு காரணமாக இருக்குமோ?

4. ‘இதெல்லாம் எனக்கு முன்னமேயே தெரியுமே’ என்பதா?

5. இதில் ஆச்சரியப்படவோ, வருத்தப்படவோ ஏதுமில்லையே என்பதா?

அனானிகளாக வந்து பதிலளிக்க அழைக்கிறேன்.

 

6 thoughts on “171. அனானிகளுக்கு மட்டும்…

 1. Hi Dharumi,
  I didn’t read your posts on this issue for many reasons

  1) I live in the US and your posts dont show up in the front page in thamizmanam by the time we get to read from the site
  2) By the time i looked at the posts, it was like part 4 or 5 and i’m not a big fan of reading multi-part posts and i never bothered to go back and read your previous posts
  3) I believe the post i read was really long. the issue with long posts is we lose interest half way through and skip reading the rest and lose interest on the whole issue. the post i read was not riveting to keep me focused on the rest of the post and besides, i was reading a post from somewhere in the middle of your chain of posts
  4) I generally skip posts about religion (good or bad), castes, caste issues, etc. cuz most of these posts are riddled with finger-pointings, animosities, hatred, etc.
  Another reason why i dont read these posts is cuz i believe we need to co-exist in peace and talking about the past atrocities is in no way gonna help us get there.
  5) the title (saathigal irukuthadi pappa) of your posts were misleading. It sounded like they were posts about caste issues than caste reservation issues.

  PS: No, i’m not from the so-called upper-castes. I wanted to type this in tamil, but it would take a good one hour of my time to type it in tamil which is hard to spare on a busy monday like today :)

 2. தருமி,
  ஞயாபகம் வச்சிருக்கீங்களே! நன்றி. இங்க தான் இருக்கேன், உங்க பதிவு தான் அதிகமா வர்ர மாறி தெரில (இந்த இட ஒதுக்கீடு பற்றிய பதிவு தவிர). அதுவும் இல்லாம நம்ம மக்கள் எல்லாம் சண்டை போட்டு பதிவு போடறத கொறச்சிட்டாங்களா, அதனால இப்பல்லாம் நமக்கு புடிச்சமான/புடிச்ச மாதிரியான பதிவு வர்ரது கொறஞ்சிடுச்சின்னு அடிக்கடி தமிழ்மணம் படிக்கறது இல்ல. ஒரு நிமிஷம் விலகி நின்னு பார்த்தா இந்த தமிழ் ப்ளாக்கிங் ஒரு cult மாதிரி ஆயிக்கிட்டு இருக்குதோன்னு தோணுச்சி. நமக்கு இது ஒத்து வராதுன்னு அடிக்கடி வர்ரது இல்ல. ஆனா உங்க மதங்கள் பற்றிய பதிவுகளும், தங்கமணி மற்றும் மோகன்தாஸ் பதிவுகளும் ரொம்ப விரும்பி படிச்சேன். நிச்சயமா அது எனக்குள்ள மாற்றங்கள உண்டாக்கியிருக்கு, பாராட்டுகள் (தாமதமானதாக இருந்தாலும்). மதங்கள் பற்றி இன்னும் தெளிவான ஆராய்ந்த பதிவுகள் போட்டீங்கனா எல்லாருக்கும் உதவியா இருக்கும். நாலு பேருக்கு அதனால தெளிவு பிறந்தா பெரிய வெற்றி தானே?

  ஒரு சின்ன இந்தியா ட்ரிப்பும் வந்து போனேன். உங்க ஊருக்கும் வந்தேன் :smile: என் மாமியார் வீடு மதுர தான். ஆனா வந்து ஒரு நாள் கூட இருக்க நேரம் கிடைக்கல. உங்க போட்டோ ப்ளாக் அடிக்கடி பார்த்துக்கிட்டு இருந்தேன், அதுவும் ரொம்ப நாள் அப்டேட் ஆகாமயே இருந்தது…
  உங்க கலர்புல் படங்கள் (இங்க பதிவுகள்ள போடற மாதிரி) கொஞ்சம் போட்டா நல்லா தான் இருக்கும். Black and White படங்கள என்னால அவ்வளவு அப்ரிசியேட் பண்ண முடியல; i guess i dont have “the eye” for B&W pics.

 3. Hi Dharumi,

  I’m the one, who commented in your previous post (link to /. discussion) – and I am different from the partha commented in this post!

  Just to clarify that there are two parthas :-)

 4. தருமி சார்,

  இட ஒதுக்கீடு பற்றிய எல்லாப் பதிவுகளுக்கும் சேர்த்து சுமார் 65 பின்னூட்டங்கள் வந்திருக்கு. இதுக்கு மேலயா எதிர்பார்க்கறீங்க? ஒரு ஆய்வுப்படி, இணையத்தில் மேய்பவர்கள் 15% பேர்தான் பின்னூட்டம் இடுபவர்கள். உங்க visitor counter ஐ வைத்து ஒப்பிட்டுப் பாருங்களேன்!

  ஆனா, உங்க மதங்களைப் பற்றிய பதிவுகளை ஒப்பிடும்போது 65 கம்மிதான். மக்கள்கிட்ட போதுமான விழிப்புணர்வு இல்லையோன்னுதான் தோணுது. நானும் நண்பர்கள் பலரிடம் பேசிப் பார்த்ததில், திறமைக்கு முக்கியத்துவம் அப்படிங்கற கோணத்திலேயே யோசிக்கறாங்க. அப்போ நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்பவர்கள் எல்லோருக்கும் திறமை இருக்கான்னு கேட்டா, பதில் வர்றதில்லை.

  பல மாதங்களுக்கு முன்பு மரத்தடி குழுவில் ‘காணாமல் போன கனல்’ என்ற தலைப்பில் மாலன் ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்திருந்தார். அதில் சொல்லப்பட்டிருப்பதுதான் சார் உங்களுக்குப் பின்னூட்டம் வராமல் போனதற்குக் காரணம். மக்கள் எல்லா விஷயங்களிலும் டேக் இட் ஈசி பாலிசியை அப்ளை பண்ணறதுதான் பிரச்சினையே. இதனால யாருக்குப் பிரச்னை/பலன் அப்படிங்கறதுல தெளிவே இல்லை. மீடியாவும் ஒரு காரணம்.

  தமிழ்ப் பெயர்களை வைப்பது அந்தக்காலம். சமஸ்கிருதப் பெயர்கள் வைப்பதுதான் இப்போதைய ஃபேஷன் என்று ஆகிவிட்டதைப் போல, இதுவும் மூளைச்சலவை செய்யப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன். ஆனா, திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு கண்டுக்காம இருக்கக்கூடிய பிரச்சினையும் இல்லை.

  உங்க பதிவுகள்ள இன்னொரு பிரச்சினையும் இருக்கு. பல நேரங்களில் Page cannot be found வருது. weblogs ல இருந்து blogspot அல்லது வேற ஏதாவதுக்கு மாறுனீங்கன்னா சிரமம் இல்லாம இருக்கும். இன்று நேரம் இருக்கிறது. பின்னூட்டம் இடலாம் என்று திறந்தால் error வந்து விடுகிறது. ஒரு வாரத்துக்குப் பிறகு இன்றுதான் உங்கள் பதிவு தெரிகிறது. இதுவும் மற்ற வாசகர்களுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

  பின்னூட்டம் வரலையேன்னு கவலைப்படாதீங்க. படிச்சாங்கன்னா போதும். படிச்சிட்டு இதைப் பத்தி யோசிச்சாங்கன்னாவே உங்களுக்கு வெற்றிதான்.

  நன்றி
  கமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>