170 என்னதான் நடக்குது இங்க…?

  

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டிலேயும் இரண்டாவது ஆளாக எப்போதும் இருந்த – numero uno என்பதற்குப் பதில் numero doux ! ஆக இருந்த நெடுஞ்செழியன் மீதும் மற்ற அவரது தலைவி மேலும் சொத்துக் குவிப்பு வழக்கு போட்ட போது சொன்னார்: ‘இந்தக் கேசு எல்லாம் ஜுஜுபி; இதில தோற்றாலும் அடுத்து அப்பீல் போட மாட்டோமா? அப்படி இப்படி பல வருஷம் வழக்கு இழுத்துக்கிட்டே போகும். அதற்குள் எத்தனை பேர் இருப்போமோ, போவோமோ’. சும்மா சொல்லக்கூடாது; மனுஷன் தீர்க்கதரிசிதான். கேஸ் முடியறதுக்குள்ளேயே அவர் போய்ச்சேர்ந்துட்டார்.

பல குற்றவாளிங்க தப்பிச்சாலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாதுன்னு எந்த பெரிய மனுஷன் சொன்னாரோ தெரியலை; நம்ம ஊரு நீதிமன்றங்கள் முதல் பாதியை முழுசா – குற்றவாளிங்களை விட்டுடறதப் பத்தி சொல்றேன் – காப்பாத்திடுறாங்க. டான்ஸி கேஸ்ல கூட பாருங்க..நீதிபதி, ‘ ஏதோ நீங்களா பாத்து பெரிய மனசு பண்ணி அந்த நிலத்தைத் திருப்பி கொடுத்துட்டு, அதுக்குப் பொறவாட்டி வீட்ல தனியா உக்காந்து மோட்ட பாத்துக்கிட்டு நம்ம பண்ணினது சரிதானான்னு உங்களயே நீங்களே கேட்டுப் பாத்துக்குங்க ‘ அப்டின்னு ஒரு பிரமாதமான தீர்ப்பைக் கொடுத்தார்.

இதுக்கு ஏத்தது மாதிரியே நம்ம C.B.I. எடுத்து நடத்துற கேஸ்கள்ல முக்காலே முண்டாணி சரியாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை; தகுந்த ஆதாரங்கள் தரப்படவில்லை; குற்றப் பத்திரிக்கையை ஒழுங்கா பைண்டு பண்ணிக் கொடுக்கவில்லை – இப்படி ஏதோ ஒரு காரணம் காட்டி வழக்குக்களை டிஸ்போஸ் செய்துவிடுகின்றன நமது நீதிமன்றங்கள்.அது பத்தாதுன்னு நம்ம I.P.C. எப்படி எழுதுனாங்களோ, யார் எழுதுனாங்களோ, எதுக்கு எழுதுனாங்களோ யாருக்குத் தெரியும். ஓட்டைகளே அதிகம் போலும். ஒரு பானைன்னா அதில ஊத்துறதுக்கு வாய் வேணும், அதவிட்டுட்டு பானை பூரா ஓட்டை போட்டு வச்சா தண்ணி எங்க நிக்கும்.

இப்போ கூட பாருங்க..மும்பை தொடர் குண்டு வெடிப்பு கேஸ் – நடந்தது 1993; விசாரணை 1995-லிருந்து. விசாரணை முடிஞ்சது ஜூன் 30, 2003; கேசு நடந்த இந்த கால கட்டத்துக்குள்ள 11 பேரு மர்கயா;  பத்தாம் தேதி தீர்ப்பு வரும் என்று தினசரிகளில் செய்தி வந்ததும் பரவாயில்லையே இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பு சொல்லப் போறாங்களே, இன்னைக்கு அது என்னன்னு பார்த்து விடுவோம்னு நினச்சுக்கிட்டு இருந்தேன். என்ன சொல்லுவாங்கன்னு ஓரளவு நினச்சு வச்சுருந்தேன். என்ன சொல்லுவாங்க…சாட்சிகள் எல்லோரும் முதலில் சொன்னதை பிறகு இல்லன்னு சொல்லியிருப்பாங்க..அல்லது C.B.I. கொடுத்த சான்றுகள் சரியாக நிரூபிக்கப் படவில்லை…அல்லது மனிதாபிமான அடிப்படையிலும், சஞ்சய் தத் ரசிகர்கள் ஏமாந்து வருத்தப்பட வாய்ப்பு இருப்பதாலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்றோம் அப்டின்னு எதிர்பார்த்தேன்.

ஆனா பாருங்க…நான் நினச்சுப் பார்க்காத ஒரு லா பாயிண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கிடைச்சிருச்சி. அபு சாலிம் எவ்வளவு நல்லவர்; வல்லவர். அவர் தொடர்பான ஒரு கேஸ் இன்னும் பெண்டிங். அதனால் இந்த கேசின் தீர்ப்பு ஒத்திவைக்கப் படுகிறது.  இதில் இன்னொரு விஷயம்: ” commencing delivery of judgment ” என்பதற்கும் ” commencement of judgment ” என்பதற்கும் உள்ள வித்தியாசம் பற்றி நீதிபதி ஒரு ‘ ஆங்கில வகுப்பு ‘ எடுத்திருக்கார். இப்படி ஒரு hair-splitting argument (தவறிப்போய் இதைத் தமிழில் சொன்னால், யாராவது contmept of court அப்டின்னு சொல்லி ஏதாவது பயமுறுத்துவாங்க…) எவ்வளவு தேவை பாருங்க.

நம்ம நீதி மன்றங்களில் என்னதான் நடக்கிறது? எந்த பெரிய ‘முதலை’யும் தண்டிக்கப்பட்டதாக வரலாறே கிடையாதா?  கீழ் கோர்ட்டில் ‘பூட்ட” கேசு அடுத்த கோர்ட்டில் ‘மறு உயிர்பெற்று’ துள்ளியெழுகின்றது. கீழே தூக்குத்தண்டனை என்றால் மேல் கோர்ட்டில் நிச்சயம் ஆயுள் தண்டனை; இப்படியே போகும் நமது நீதி பரிபாலனம்.

 

என்னமோ போங்க…ஒண்ணுமே புரியலை.

 

 

 

 

 

Š

19 thoughts on “170 என்னதான் நடக்குது இங்க…?

 1. //நீதிபதி, ‘ ஏதோ நீங்களா பாத்து பெரிய மனசு பண்ணி அந்த நிலத்தைத் திருப்பி கொடுத்துட்டு, அதுக்குப் பொறவாட்டி வீட்ல தனியா உக்காந்து மோட்ட பாத்துக்கிட்டு நம்ம பண்ணினது சரிதானான்னு உங்களயே நீங்களே கேட்டுப் பாத்துக்குங்க ‘ அப்டின்னு ஒரு பிரமாதமான தீர்ப்பைக் கொடுத்தார்.//

  //குற்றப் பத்திரிக்கையை ஒழுங்கா பைண்டு பண்ணிக் கொடுக்கவில்லை – இப்படி ஏதோ ஒரு காரணம் காட்டி வழக்குக்களை டிஸ்போஸ் செய்துவிடுகின்றன நமது நீதிமன்றங்கள்.//

  //சஞ்சய் தத் ரசிகர்கள் ஏமாந்து வருத்தப்பட வாய்ப்பு இருப்பதாலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்றோம் அப்டின்னு எதிர்பார்த்தேன்//

  என்னா வாத்யாரே? இவ்வலவையும் சொல்லீட்டு, அப்பாலிக்கா

  //(தவறிப்போய் இதைத் தமிழில் சொன்னால், யாராவது contmept of court அப்டின்னு சொல்லி ஏதாவது பயமுறுத்துவாங்க…)// ன்னு ஜகா வாங்குனா? வுட்ருவாங்களா?

  நோட்டீஸு வந்துக்கினேக்கீது, ரெடியாரூபா…அகாங்.

  அப்பாலே, கோர்ட்ல மீட் ‘பன்னி’க்கலாம்.

  வர்ட்டா,
  வணக்கத்துடன்…

 2. இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு மூலகாரணமான ஒட்டைகள் நிறைந்த சட்டத்தினை சரியாக சாடியுள்ளீர்கள். நீதிமன்றங்கள் சட்டத்தின் எல்லைகளுக்குள் மட்டும் தான் செயல்பட முடியும். அதை மீறி அவர்களால் கருத்து மட்டுமே கூற முடியும்( டான்சி வழக்கில் நடந்தது போல).மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது.

 3. //பல குற்றவாளிங்க தப்பிச்சாலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாதுன்னு எந்த பெரிய மனுஷன் சொன்னாரோ தெரியலை; நம்ம ஊரு நீதிமன்றங்கள் முதல் பாதியை முழுசா – குற்றவாளிங்களை விட்டுடறதப் பத்தி சொல்றேன் – காப்பாத்திடுறாங்க//

  :) )

  நீதி மன்றங்களையே குறை சொல்ற அளவுக்கு வந்துட்டீங்களா?
  அப்படீன்னா, என்னதான் கேஸ் போட்டாலும் அடுத்து 20 வருசத்துக்கு தீர்ப்பு வராதுங்கற நம்பிக்கை உங்களுக்கும் இருக்குல்ல?

  :) )

 4. ஏற்கனவே நீதிமன்றங்களின் நீதியையும் நீதிபதிகளின் மனுநீதியையும் பார்த்து வெறுத்து போயுள்ளேன் நீங்கள் வேறு ஏற்றிவிடுகின்றீர் இது மாதிரி பதிவு போட்டு…

 5. வணக்கத்துடன் கோர்ட்ல மீட் ‘பன்னி’க்கலாம் அப்டின்னு முதல் முதல்ல வந்து சொல்லிட்டீங்க. ஏதோ பாத்து செய்யுங்க…

  அது ஏன் ‘பன்னி’க்கு மேற்கோள் குறிகள்?

 6. திரு,
  கலக்க கலக்க மேலும் மேலும் கலங்கலாதான் ஆகுது; தெளிவே ஆக மாட்டேங்குதே:!: :cry:

 7. பாலச்சந்தர்,
  //சட்டத்தின் எல்லைகளுக்குள் மட்டும் தான் செயல்பட முடியும். // அதாவது நடக்கிறதா என்பதுதான் என் கேள்வி. எல்லோரும் சொன்னது டான்ஸி கேஸ் ஒரு open and shut case என்று. நானும் தினத்தாள்களில் படித்த அளவு குற்றம் ருசுப்படுத்தப்பட்ட பின்னும் என்ன நடந்தது.
  pleasant stay hotel விவகாரத்தில் அனுமதியின்றி அதிகப்படியாக ஒரு மாடி (floor) கட்டியிருப்பதாக ருசுப்படுத்தப்பட்டு, அதனால் கோர்ட் ஒரு மாடியை இடிக்க வேண்டுமென்று தீர்ப்பு வருகிறது. அதற்கு அடுத்த வந்த கேஸ் நினைவிருக்கிறதா? அப்படி இடிக்கவேண்டுமானால் எந்த மாடியை இடிக்க வேண்டும் என்று ஒரு மனு. வேடிக்கையாயில்லை – வழக்கை இழுத்தடிக்க இப்படி ஒரு யோசனை. எனக்கு ஒரு ஆசை – நான் நீதிபதியாயிருந்தால் அந்த இரண்டாவது வழக்கிற்கு உடனே ஒரு தீர்ப்பு அளிப்பேன் – அந்த ground floor-யை மட்டும் இடித்தால் போதும் என்று. :twisted:

  உங்களுக்கு shylock – portia கதை நினைவுக்கு வருமேயானால், ஒரு கடைச்செருகல்: நீதான் உன் கட்டிடத்தை இடிக்கப் போகிறாய்; ground floor இடிக்கும்போது மற்ற floors-களை முடிந்தால் காப்பாற்றிக் கொள்வது உன் திறமை. ஆனால் இப்போது (நீயே கேட்டதால் ) ground floor இடி. :evil:

 8. சிறில்,
  //அடுத்து 20 வருசத்துக்கு தீர்ப்பு வராதுங்கற நம்பிக்கை ../
  அய்யய்யோ அப்படியில்லை சிறில்..அவங்களுக்கு இஷ்டம்னா உடனே எடுத்தோம், கவிழ்த்தோம் அப்டின்னும் இருக்குது போலேயே!

  நம்ம M.P.களைப் பாருங்க. அவர்களுக்குப் புதிய சம்பளம், சலுகைகள் அப்டின்னு ஏதாவது பாராளுமன்றத்தில் வந்தால் அனைவரும் அன்னைக்கு present.. House full தான்! சுடச்சுட சட்டம்தான். இப்போகூட இரட்டைப் பத்வி சட்டம் என்ன ஸ்பீடு!

  அவனவனுக்கு வந்தா தெரியும் பல்வலியும் தல வலியும்னு சும்மாவா சொன்னாங்க :evil:

 9. சட்டங்கள் செய்தென்ன கண்டோம்?
  ——————————-

  சட்டங்கள் செய்தென்ன கண்டோம்? – அதில்
  சந்துகள், பொந்துகள் வசதியாய்க் கொண்டோம்!
  செல்வம் படைத்தோர்க்கொரு நீதி – பாழும்
  வறியவர்க்கு இங்கெங்கே மீதி?

 10. /எனக்கு ஒரு ஆசை – நான் நீதிபதியாயிருந்தால் அந்த இரண்டாவது வழக்கிற்கு உடனே ஒரு தீர்ப்பு அளிப்பேன் – அந்த ground floor-யை மட்டும் இடித்தால் போதும் என்று. //

  இது வந்து நீதிபதி அய்யா, படுத்துகிட்டு போத்திக்கிறதா இல்ல போத்திக்கிட்டு படுத்துக்கிறதான்னு இருக்கிற சிக்கலான கேள்விக்கு இவ்வளவு ஈசியான விடையா :roll: .

  நாங்கள் இதற்கென ஒரு கமிஷன் போட்டு தீர்க்க ஆய்ந்து முடிவெடுக்கலாமென்று நினைத்துக் கொண்டிருந்தால், நீங்கள் இப்படி இன்ஸ்டன்ட் தீர்ப்பு கொடுப்பவராக இருந்தால் உங்களை “ப்ளூ க்ராசில்” மிருக வதைப்பு சட்ட நீதிபதியா தூக்கி அடிக்க வேண்டியதுதான் :lol: .

  அய்யா, எனக்கு ஏதாவது ‘நோட்டீஸு’ அனுப்புவீங்களாய்யா… இப்பிடி சொன்னதுக்காக…:lol::lol:

 11. நவீன பாரதி,

  உங்கள் கவிதையின் கடைசி வரி – சுயநலம் வாழுது இன்று!//

  யாருக்குத்தான் இல்லை சுய நலம்; ஆனால் அடுத்தவனைக் கெடுத்து நல்லது தேடாமல் இருந்தால் போதுமே. அதற்கு வேண்டும் சட்ட திட்டங்கள். அந்தச் சட்ட திட்டங்களைத் தாண்டுவோரைப் ‘பிடித்துப் போட்டால்’தான் இனி இங்கு வாழ்க்கை நேராகும்; நேர்மையாகும்.

 12. தருமி அய்யா

  நன்றாக எழுதியுள்ளீர்கள்..

  இது போல பல வழக்குகள்…

  தருமபுரி பேருந்து எரிப்பு வழுக்கின் நிலை தெரியவில்லை..

  தாமதமான் நீதியும் அநீதியே..

 13. இந்தியச் சட்டத்தில் விரைவில் வழக்கை முடிப்பதற்கு எவ்வித வழியும் இல்லை. ஆனால் வழக்கைத் தாமதப்படுத்த அநேக வழிகள் உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் வழக்குகள் குறைவாய் இருந்தன. அப்பொழுது கடைப்பிடிக்கப்பட்ட நீதிமன்ற நடைமுறைகள் இன்றைக்குப் பயன்படாது. எனினும் ஆங்கிலேயர் காலத்து நீதிமன்ற நடைமுறைகளே இன்றும் பின்பற்றப்படுகின்றன. ஒரு வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கு எண் வழங்குவதற்கு இந்திய நீதிமன்றத்திற்கு ஒரு மாத காலம் தேவைப்படுகிறது. அதற்குப் பின்
  அனுப்பப்படும் சம்மன்களை எதிர்த்தரப்பு, நிர்வாக ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து ‘எதிர்த்தரப்பினர் ஊரில் இல்லை’ எனச் சொல்ல வைத்து, ஆறு மாதத்திலிருந்து ஓராண்டு வரை இழுத்தடிக்கலாம். ‘வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லை’ என்றோ, ‘வழக்கில் ஈடுபடுத்தப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை’ என்றோ ஆயிரமாயிரம் பொய் சொல்லி ‘வாய்தா’ க்கள் வாங்கலாம்.

  நீதித்துறையை ஆராய்வதற்கென பல கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்படும் பொழுது செய்தித்தாள்களில் இடம் பெறுவதைத் தவிர இந்தக் கமிஷன்கள் பெரும்பாலும் மக்கள் தொடர்பற்றே இருக்கின்றன. பல ஊர்களில் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் கருத்துகள் கேட்டறியப்படாமலே கமிஷன்கள் செயல்படுவது எவ்வித
  நன்மையையும் பயக்கப் போவதில்லை. தேங்கிக் கிடக்கும் வழக்குகள், கமிஷன் அறிக்கைகளைக் கிடப்பில் போடுவது போன்றவற்றை மாற்றவே இன்னும் அரசாங்கம் முயலாதபொழுது அரசாங்க அமைப்பின் மேம்பாட்டைப் பற்றிப் பேசுவது அரசியல் நகைச்சுவையாகிவிட்டது.

 14. தருமி, இரண்டு மூன்று நாள் முன்னால் தான் சோ சாரின் உண்மையெ உன் விலை என்ன? சினிமா பார்த்தேன்.
  அதில் நீதிக்காகப் போராடும் ஒருவர் தான் செய்யாத, தன்னிடம் பாவ மன்னிப்புக் (confession) கேட்க வந்த ஒருவனுக்காக, கடைசியில் உயிர் விடுவதாகக் கதை வருகிறது.
  அதனால் நீதீயே தலையிட பயப்படுகிறதோ என்னவோ.
  வாழ்க சுதந்திரம்.

 15. சிவபாலன்,
  எரிக்கப்பட்ட அந்தக் குழந்தைகளின் பெற்றோர்முன் அந்தக் கொலைகாரப் பாவிகள் தலைநிமிர்ந்து நடந்து போகும்போது அவர்களுக்கு எப்படி இருக்கும்? குழந்தைகளை இழந்தபோது வந்த வலியை விட அதிகமாக இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>