Saturday, August 19, 2006
மீண்டும் ஓர் இடப் பெயர்ச்சி. just in a jiffy ஆரம்பிக்க முடியும்னு
பெரியவங்க சொன்னாங்க; அது மாதிரியே ப்ளாக்ஸ்பாட்டில் என் முதல் இடுகையைச் சுலபமாக ஆரம்பித்தேன். ரொம்ப
சந்தோஷமாயிருந்தது. கொஞ்ச நாள் ஆனதும் சுத்தி முத்திப்
பார்த்தப்போ, சிலரது ப்ளாக்குகள் அழகழகா இருந்ததைப் பார்த்து
ஜொள்ளு விட்டுக்கிட்டு இருந்தேன் – எதுக்கெல்லாம் ஜொள்ளுன்னு ஒரு விவஸ்தையில்லையான்னு கேக்காதீங்க, அழகா இருக்கிற எதப் பார்த்தாலும் அது தானா வருது; என்ன செய்றது? ஒரு கலா ரசனைதானே!
அது என்னமோ, வெப்லாக்ஸ் அப்டின்னாங்க; படம் எல்லாம் டிசைன் டிசைனா போட முடியும்னு சொன்னாங்களா அதனால ரொம்ப பிடிச்சிப் போச்சி. சில நல்ல மனுசங்க உதவியோடு – ஒரு மனுசிதான் – மதிக்கு நன்றி – வீடு மாத்தினேன். நல்லாதான் போச்சு. அப்பப்போ தலைப்பில படம் மாத்திக்கிட்டே இருந்தேன். ஒரு படம் நல்லா பிடிச்சதும் இத்தனை நாளா அதே படத்தலைப்போடு போய்க்கிட்டு இருந்தது. the going was good.
ஆனா இதில ஒரு முக்கிய பிரச்சனை. ஏறக்குறைய நிறைய பேர் தமிழ்மணத்தில ப்ளாக்ஸ்பாட் வச்சிருக்கிறதால ஏதாவது மாற்றம் அப்டி இப்டின்னு கொண்டுவந்தா, செய்முறை எல்லாம் ப்ளாக்ஸ்பாட்டுக்குதான் கிடைக்கும்; வெப்லாக்ஸ்காரங்க எண்ணி நாலஞ்சு பேருதான்னு நினைக்கிறேன். அதில நான் ஒருத்தன் மட்டும் தான் க.கை.நா.. அதனால திருவிழாவில தொலஞ்ச சின்ன பிள்ளை மாதிரி நிறைய நேரம் ‘பே’ன்னு (ங் இதுக்கு ரெட்டைக்கொம்பு சேர்க்கிறது எப்படின்னு தெரியலை; அதான் ‘பே’ன்னு போட்டுக்கிட்டேன்!) நிக்க வேண்டியதாகிப் போச்சு.
இப்போ இன்னொரு பிரச்சனை. புதுப் பதிவு போடும்போது தட்டச்சிவிட்டு ப்ரிவியூ பார்த்தால் கோணக்க மாணக்க இருக்கும். அது என்னமோ htmlன்னு ஒண்ணு இருக்காமே, அது கன்னாபின்னான்னு மாறியிருக்கும். அத சரி செஞ்சிட்டு மறுபடி ப்ரிவியூ பார்த்தா இப்போ இன்னொரு கோணக்க மாணக்க.. ஒரு பதிவு போடறதுக்குள்ள தாவு தீர்ந்திடும். அதோட இந்த சமயத்திலதான் நான் இடப்பங்கீடு பற்றிய நீண்ட (நீங்க யாருமே படிக்காத, நீங்க யாருமே படிக்க மாட்டீங்கன்னு தெரிஞ்சுமே நான் சீரியஸா போட்ட) பதிவுகளாகப் போடவேண்டியதாயிருந்தது. பொறுமை இழந்து, போராடி ஒவ்வொரு பதிவையும் ஏற்றும்படியாய் இருந்தது.
போதும்டா சாமின்னு ஆகிப்போச்சு. (என்னடா சாமிய எல்லாம் இவன் கூப்பிடுறானேன்னு கேக்றீங்களா? இங்க ஒரு digression -
வாத்தியார் புத்திதான்! (bye pass செய்துட்டு மருத்துவமனையில் ஒரு நாள்; படுக்கையில் படுத்திருக்கேன்; அப்ப எல்லாம் ஒரு தும்மலோ, இருமலோ வந்துட்டா…அம்மாடி…நெஞ்சாங்கூடு இருக்கே, அங்கே என்னமோ பிச்சுக்கிட்டு போறது மாதிரி ஒரு வலி வரும் பாருங்க…அப்படி ஒரு நேரம்..வலி சுரீர்னு..அது ஒண்ணும் சாதாரண மானிட சுரீர் இல்ல… இது அதையும் தாண்டி… அந்த நேரத்தில வலியில ‘ஓ, ஜீசஸ்’அப்டின்னேன். பக்கத்தில இருந்த மனைவி மக்களுக்கு ஒரே சந்தோஷம்…ஆஹா, மனுஷனுக்குப் புத்தி வந்திருச்சு அப்டின்னு. சிரிச்சிக்கிட்டே ‘அதுதான் சொல்றதுக்கு ஒரு rhyming-ஆ style-ஆ இருக்கு; அவ்வளவுதான்’ அப்டின்னேன். ‘அதான, இந்த மனுஷனுக்கு அப்படியா நல்ல புத்தி வந்திரப்போகுது’ – இது
மனைவியின் பின்னூட்டம், அதாவது comment) சரி..சரி…எங்க விட்டேன். போதும்டா சாமின்னு ஆகிப்போச்சா..நாலும் தெரிஞ்ச நாலு மக்கள்கிட்ட கேட்டேன். ஏறக்குறைய எல்லாரும் சொன்னதன் சாராம்சம்: எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்கு மட்டும் ஒரு வழியாம்னு தெக்காட்டுப் பக்கம் ஒரு சொலவடை உண்டு; அது மாதிரி நீங்க மட்டும் ஏன் அத வச்சிக்கிட்டு மாரடிக்கிறீங்க…பேசாம உலகத்தோடு ஒட்ட ஒழுகல்தான் சரி அப்படின்னுட்டாங்க. நம்ம ஒன்பது கட்டளைகளில் ஒன்றான dare to be different அப்டிங்கிற நம்ம கட்டளைய ஒதுக்கி வச்சிடறதா முடிவு செஞ்சாச்சு.
நல்ல வேளையா, ஒரு ‘கவைக்கு’ இருக்கட்டும்னு வெப்லாக்ஸில போட்ட பதிவுகளை அப்பப்போ பழைய ப்ளாக்ஸ்பாட்டில சேமிச்சி வச்சிக்கிட்டு இருந்தேன். என்ன, முதல் உள்ளதில போட்டோ அது இதுன்னு போடறது உண்டு.இங்கு அத ஏற்றலை. அதோட வந்த ஒரு நாலஞ்சி பின்னூட்டங்களை அப்படியே copy ‘n paste செஞ்சி பதிவோடு சேர்த்து போட்டு வரவேண்டியதாயிருந்தது. எப்படியோ அப்படி இப்படின்னு 146 பதிவுகள் வரை போட்டு வச்சிருந்திருக்கேன். இன்னும் ஒரு இருபது பதிவு இன்னும் ஏற்றணும். சீக்கிரம் போட்டுடணும்.(இல்லேன்னா ஒங்கள மாதிரி ஒண்ணு ரெண்டு பேரு வர்ரவங்க ரொம்ப ஏமாந்திருவாங்களே?!)
இதில இன்னும் கொஞ்சம் சிக்கல் இருக்கும்போலத் தெரியுது.
பின்னூட்டத்தில தகராறு வரும்னாங்க. சரி, அதெல்லாம் பின்னூட்டம் நிறைய வாங்குறவங்க பட வேண்டிய கவலை. நம்மள மாதிரி ஆளுகளுக்கு எதுக்கு அதெல்லாம். ஏதோ, ஒரு ஓரத்தில உக்காந்தோமா; நமக்குப் பிடிச்சதை எழுதினோமான்னு இருக்கிற ஆளு நம்ம. அப்படியே கீதையைக் கடைப்பிடிக்கிற ஆளு – பதிவுகளைப் போடு; பின்னூட்டங்களைப்பத்திக் கவலைப்படாதேன்னு அன்னைக்கே சும்மாவா சொல்லியிருக்கு.
கொஞ்சம் கவலைதான். வெப்லாக்ஸ் கெட் அப்பே தனிதான். படம் போட்ட அழகு என்ன? category வச்சிருந்த அழகு என்ன? அந்த lay out இருந்த இருப்பென்ன? இப்படி பல என்ன..என்ன..! ஆனால் என்ன, ப்ளாக்ஸ்பாட்டில கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு டெம்ப்ளேட்…அதில நூத்தி எட்டு டெம்ப்ளேட். எத தூக்கி எதுல போடறதுன்னு ஒண்ணும் கடைசி வரை புரிஞ்சதில்லை. ப்ளாக் ஸ்பாட்டில கொஞ்சம் பிடிபடுது. உதவிக்கும் பார்ட்னர் செல்வன் மாதிரி ஒரு சில நல்லாத்துமாக்கள் (வாழ்க அவர்கள் உயருள்ளம்! மக்களே, ஐஸ் வச்சாச்சு; அடுத்த தடவை வரும்போது மறந்திராதீங்க!)
சரி…எப்படியோ மறுபடி ப்ளாக்ஸ்பாட்டுக்கு வந்தாச்சு. பழைய வீட்டை – வெப்லாக்ஸை – இனிமே ஸ்டோர்ஹவுஸா வச்சுக்க வேண்டியதுதான். நீங்க எல்லோரும் . நீங்க எல்லோரும் எப்போதும் மாதிரி கண்டுக்காதீங்க; வர்ட்டா…!
posted by Dharumi @ 8/19/2006 11:01:00 AM
>
——————————————————————————–
< 27 Comments:
முத்து(தமிழினி) said...
இத்தெல்லாம் சரிதான்.ஆனா இந்த டெம்பிளேட் நல்லா இல்லையே..நிறைய திருத்தணும் அய்யா...
வெப்பிளாக்கில் இருந்து ஓடியதில் என் பங்கும் கொஞ்சம் இருக்காமே?:))
8/19/2006 12:56:30 PM
செல்வன் said...
வீடு மாறியபின் முதல் பின்னூட்டம் எனது தான்.நம்ம ராசி வர்க் அவுட் ஆச்சுன்னா பின்னூட்டமா பொழியும்.சுத்தமா வரலை என்றாலும் நீங்க தான் அதில் நம்பிக்கை இல்லாதவராச்சேன்னு சொல்லி சமாளிச்சுடலாம்:)))
ப்ளாக்கரிலேயே வகைப்படுத்தும் முறை இருக்கு தெரியுமா? www.beta.blogger.com போயி ஒரு பதிவை துவக்குங்க.வெப்லாக்சில் இருக்கும் அத்தனை வசதியும் அதிலே இருக்கு
8/20/2006 08:20:13 AM
சதயம் said...
ஹி..ஹி..குருப்பெயர்ச்சி...குருபெயர்ச்சின்னு சொல்லுவாங்களே அது இதுதானா...
இனி ப்ளாக்ஸ்பாட்ல கலக்குங்க...
வாழ்த்துக்கள்
8/20/2006 02:00:02 PM
பொன்ஸ் said...
Mouse problem.. -> No tamil.
Not to worry, We will make this Blogspot look like WordPress.. You will again dare to be different
)))
8/20/2006 09:22:38 PM
sam said…
This post has been removed by the author.
8/24/2006 12:40:04 AM
DHARUMI said…
test III
8/24/2006 12:41:50 AM
குறும்பன் said…
நிறைய வூடு கட்டுவிங்களாட்ட தெரியுது. இது தான் கடைசி வூடா இல்ல இன்னும் புதுசா வூடு கட்டுவிங்களா?
8/24/2006 12:55:24 AM
Thekkikattan said…
இப்படி ஒத்த ஆளா உங்கள புலம்ப விட்டுடங்களே, தருமி ஐயா மண்டபத்திலே தனியாவ இருக்கீக… பாத்து காத்து கருப்பு வந்து அடிச்சுடப் போகுது
)
8/24/2006 01:08:43 AM
dharumi said…
This post has been removed by a blog administrator.
8/24/2006 11:02:40 PM
dharumi said…
This post has been removed by a blog administrator.
8/24/2006 11:04:16 PM
sam said…
now i am not getting even my own comments in my posts
8/24/2006 11:06:12 PM
lakshmi said…
Hi Sam,
‘Everything is for good’ . Looking forward to your next post.
8/25/2006 01:10:59 PM
dharumi said…
This post has been removed by a blog administrator.
8/26/2006 04:53:53 PM
dharumi said…
This post has been removed by a blog administrator.
8/26/2006 05:01:02 PM
sam said…
testII
8/26/2006 05:12:17 PM
dharumi said…
testIII
8/26/2006 05:12:48 PM
Dharumi said…
This post has been removed by the author.
8/26/2006 05:20:50 PM
Dharumi said…
test
நமக்கு நாமே திட்டத்தின் படி…!!
8/26/2006 05:28:44 PM
Anonymous said…
test4 – as anonymous
8/26/2006 11:50:03 PM
Anonymous said…
This post has been removed by a blog administrator.
8/26/2006 11:50:17 PM
Anonymous said…
ஒரே டெஸ்ட் மயம்தான்…எல்லாம் நேரம்தான்…!! டெஸ்ட் 4
8/27/2006 12:02:19 AM
ralsam said…
test – sam
8/27/2006 10:17:09 AM
இராமநாதன் said…
பெரீய்யப்பா,
திரும்ப பூர்வீக வீட்டுக்கே வந்துட்டீங்க.
வருக வருக.
8/27/2006 11:03:07 AM
Dharumi said…
நமக்கு நாமே திட்டத்தின் படி…!!
test II
8/29/2006 10:03:57 AM
பொன்ஸ் said…
தருமி,
வருக வருக.. மீண்டும் ப்ளாக்ஸ்பாட்
எப்படி படம் போடுறதுன்னு சீக்கிரமே சொல்றேன்.. வெப் லாக்ஸ் மாதிரியே இதையும் கலக்கிடுவோம்..
8/29/2006 03:38:24 PM
மணியன் said…
Return of the prodigal son ! Let him be resurrected !!
9/04/2006 12:21:47 PM
Narayanaswamy.G. said…
Sir
Stylesheetsla mouse hover link colour appadinu oru samasaram irukkum. Adhu whitenu irukku. adhai vera dark colourukku mathunga. illaina endha link mela mouse kondu ponalum link kaanapoodum!
9/05/2006 08:49:17 PM
Post a Comment
நெஜமாத் தான் கேட்குறேன்.. அந்த போட்டோ எடுத்தவர் யாரு? – நானும் என்னை நல்லா தெரியற மாதிரி நாலு போட்டோ எடுத்துக்கிடத் தான்..
சொன்னவர்: பொன்ஸ் | 9/25/2006 08:01:16 PM
இந்த சனிக்கிழமை மதுரை வரேன். வந்து உங்களை பார்க்கிறேன், அடுத்ததா என்னையும் உங்க லிஸ்ட்’ல சேர்த்துக்கங்க……..
))))
சொன்னவர்: ராம் | 9/25/2006 08:13:40 PM
நீங்க பாட்டுக்கு சட்டைப் போடாத ஒரு காட்டான், மாட்டு வண்டியில வந்து தார் குச்சியோட பார்க்கவராத சொல்லியிருக்கிறான்னு நினைச்சுக்கிட்டு காத்திட்டு இருப்பீங்க.
ஆனால் இங்க ஒரு 36 வயது இளைஞன்
ஜீன்ஸ் பேன்ட்டும், ட்டி சர்ட்டுமா வந்து நிக்கிறான்னு எழுதி வைக்கப் போறீங்க.
நல்ல அனுபவம் போங்க.
சொன்னவர்: Thekkikattan | 9/25/2006 08:28:59 PM
சொன்னவர்: இராமநாதன் | 9/25/2006 08:50:09 PM
நல்லவேலை நான் உங்களை சந்திக்க வில்லை சந்தித்து இருந்தால் என்னையும் போட்டுடைத்திருப்பீர்கள்
சொன்னவர்: ENNAR | 9/25/2006 09:06:19 PM
முன்பொரு முறை மதுரை வருவதாகத் தொலைபேசியில் அறிவித்தவர். அப்போது தருமி ஐயா மதுரையில் இருப்பாரா அல்லது சென்னையில் இருப்பாரா என்று குழம்பியவர். ஆனால் மதுரை வரும் திட்டத்தை திடீரென கைவிட்டார்.
தற்போது புரட்டாசி 3ம் சனிக்கிழமை மதுரை வரத் திட்டமிட்டுள்ளார். இருப்பினும் அறிவித்துவிட்டால் முன்பு போலல்லாமல் சொல்லைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் அறிவிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.
7ம் தேதி மதுரை வரத் திட்டமிருக்கும் இவர் காலையில் கள்ளழகர் கோவில் சென்றுவிட்டு, மாலையில் மீனாட்சி அம்மன் கோவில் செல்ல திட்டமிட்டுள்ளார். இடைப்பட்ட மதிய நேரத்தில் பதிவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யலாமா என்று யோசித்தும் வருகிறார்.
சொன்னவர்: Anonymous | 9/25/2006 09:21:05 PM
ஆனா நான் யாருன்னு சொல்ல மாட்டேனே.
சொன்னவர்: மோகன்தாஸ் | 9/25/2006 09:35:27 PM
சொன்னவர்: Rams | 9/25/2006 09:58:25 PM
ரகசியம்னா ரகசியம்தான் தருமிகிட்ட, தெரியுமா? அதனால உங்க பின்னூட்டத்தை முடக்கிவிட்டேன். மன்னிச்சுக்கங்க…சரியா?
சொன்னவர்: Dharumi | 9/25/2006 10:33:23 PM
சொன்னவர்: Dharumi | 9/25/2006 10:34:20 PM
சொன்னவர்: Dharumi | 9/25/2006 10:36:38 PM
டாக்டர்னா டாக்டர்தான்…எப்படி ஒரு ப்ளாஸ்த்ரி..நன்றி. இந்த ஓட்டு போடுறது இன்னும் இருக்கா என்ன..?
சொன்னவர்: Dharumi | 9/25/2006 10:38:11 PM
நெறையப் பேரச் சந்திச்சிருக்கீங்க. நானும் மதுரைக்கு வந்தா சந்திக்கிறேன். அப்ப என்ன போடுவீங்கன்னு யோசிச்சுப் பாக்குறேன்.
)))
பாபாவை நானும் நேரில் சந்தித்திருக்கிறேன்.
சொன்னவர்: G.Ragavan | 9/25/2006 11:04:51 PM
சொன்னவர்: குமரன் (Kumaran) | 9/26/2006 01:15:59 AM
ஓட்டெல்லாம் கட்டாயம் போட்டுரணும். கள்ள ஓட்டு காலமப்பா இது.
காசிக்கு போக ரூட் போட்டாச்சா?
சொன்னவர்: துளசி கோபால் | 9/26/2006 04:20:44 AM
//
அய்யா… தருமியாரே..
(((((((
பா.க.ச மதுரை கிளை-1,ன் அமைப்பாளர் யாருன்னு தெரிஞ்சு போச்சு.
அட!நீங்களுமா?
சொன்னவர்: யெஸ்.பாலபாரதி | 9/26/2006 01:20:17 PM
ஐந்து விரலும் சமனல்ல! என்பதை நிருபித்துள்ளார்கள். எனினும் ஞானவெட்டியான் ஐயாவின் உணவுமுறையைக் கடைப்பிடிக்கலாமா??என எண்ணவைத்தது. நன்றி
யோகன் பாரிஸ்
சொன்னவர்: Johan-Paris | 9/26/2006 03:42:00 PM
//நானும் மொத ஆளக் கண்டு பிடிச்சிட்டேன்.//
என்ன எல்லோருக் ஆளாளுக்கு இப்படி சொல்றீங்க…அவ்வளவு ஃபேமஸான ஆளா…லாஜிக் உதைக்குதே…அவ்வளவு ஃபேமஸான ஆளுக்கு எதுக்கு அப்புறம் முகத்திரையெல்லாம்…
சொன்னவர்: Dharumi | 9/26/2006 03:52:24 PM
நம்மப் பற்றி நாலு நல்ல வார்த்தை எழுதியதற்கு நன்றி. காசிக்குப் போகும்போது ஞாவகப் படுத்துங்கள்!
சொன்னவர்: ஞானவெட்டியான் | 9/26/2006 05:20:20 PM
இல்லங்கய்யா உங்களுடைய தொலைப்பேசி எண் தெரியாது. இந்த பின்னூட்டம் என்னுடைய மெயில் ஐடியுடன் வரும், அதில் ரிப்ளை செய்யவும்.
நீங்கள் மதுரையில் எந்த காலேஜ்,ஸ்கூல் டீச்சரு இல்லலே… உங்களைப் பார்த்த எங்க வாத்தியார் ஞாபகம்தான் வருது. அவரு காதை பிடிச்சு திருகி நச்சுன்னு தலையிலே வேற குட்டுவாரு…..
சொன்னவர்: ராம் | 9/26/2006 05:37:11 PM
படிக்க சுவாரசியமாக இருந்தது..
நன்றி
சொன்னவர்: Sivabalan | 9/26/2006 09:09:41 PM
எங்க வயசென்ன…உங்க வயசென்ன…கல்லப் போட்டாலும் செரிக்கிற வயசு..அதெல்லாம் மெல்ல பாத்துக்கலாம்.
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:02:58 PM
//யாருன்னு சொல்ல மாட்டேனே. //
இது…
நல்ல பிள்ளை
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:12:01 PM
//என்னையும் போட்டுடைத்திருப்பீர்கள் //
அய்யோடா! நான் என்ன அவர்களைப் போட்டுடைத்திருக்கிறேனா என்ன?
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:13:23 PM
வரவேண்டும்…இந்த முறை நாம் கட்டாயம் சந்திக்கிறோம்.. சரியா ?
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:15:07 PM
//அட!நீங்களுமா? // என்ன இப்படி சொல்லிட்டீங்க…இல்லாதது எதாவது சொல்லியிருக்கேனா என்ன?
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:21:49 PM
(இந்தப் பெயரும் நல்லா இருக்கே!)
//அட!நீங்களுமா? //
என்ன நீங்க…அப்படி என்ன இல்லாதது பொல்லாதது ஏதாவது சொல்லிட்டேனா என்ன?
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:23:08 PM
//நான் கூட உங்களை மாதிரிதான். தண்ணீர் பத்தியெல்லாம் அதிகமா எழுதுறது இல்லீங்க…
ஆமாங்க, நாம எல்லாம் ரொம்ப அடக்கமான ஆளுக இல்லியா..?
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:24:20 PM
//படிக்க சுவாரசியமாக இருந்தது..//
நல்ல வார்த்தைக்கு நன்றி.
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:27:52 PM
(இந்தப் பெயரும் நல்லா இருக்கே!)
//அட!நீங்களுமா? //
என்ன நீங்க…அப்படி என்ன இல்லாதது பொல்லாதது ஏதாவது சொல்லிட்டேனா என்ன?//
தருமி சார் பாபா என்றால் பாஸ்டன் பாலா அல்லவா?
சொன்னவர்: கால்கரி சிவா | 9/27/2006 12:01:38 AM
//
பாபா என்று பலருண்டு சிவாண்ணா.
பாலக்கரை பாலன் உதயகுமார் ஐயாவையும் பாபா என்று அழைப்பதுண்டு.
பால பாரதியும் பாபா ஆனால் தவறென்ன?
சொன்னவர்: குமரன் (Kumaran) | 9/27/2006 01:28:10 AM
என்னைக் குறிப்பிடுவது மாதிரியே உதயகுமாரையும் நீங்கள் ‘அய்யா’ என்று கூப்பிடுவது பார்த்த எனக்கு ஒரே ‘ஜாலி’!
சொன்னவர்: Dharumi | 9/27/2006 08:47:19 AM
தருமி ஐயா,
பதிவர் 1 & பதிவர் 2 யாருன்னு சொல்லவேயில்லையே? பதிவர் 1 தான் வெளிய சொல்ல மாட்டார். அதனால் அவரோட ரகசியத்தை நீங்களும் ரகசியமா வச்சுக்கலாம். பதிவர் 2மா?
எத்தனையோ பேர் பதிவர் 1 மாதிரி இருந்தாலும் நீங்க விவரிச்சிக்கிறதைப் பாத்தா யாருன்னு எனக்க்குத் தெரியும்னு தோணுது. ……?
சொன்னவர்: Dharumi | 9/27/2006 04:31:10 PM
அந்த முதல் பதிவர் யாருன்னு எனக்குத் தெரியுமே!….
சொன்னவர்: Dharumi | 9/27/2006 04:31:23 PM
சொன்னவர்: ராதாராகவன் | 9/27/2006 04:43:51 PM
பதிவர் 1 தான் வெளிய சொல்ல மாட்டார். பதிவர் 2மா?
//
குமரன், நீங்க முதல் பின்னூட்டத்தைப் படிக்கலியா? பதிவர் 2 ஒரு பெரீரீரீரீய :O (ஓட்டைவாய்)
தருமி,
இத்தனை கஷ்டப்பட்டு குமரன், செல்வன் பின்னூட்டத்தை எடுத்துப் போட்டிருக்கீங்களே, இதைப் பார்க்கலியா?
சொன்னவர்: பொன்ஸ் | 9/27/2006 04:54:29 PM
சொன்னவர்: பொன்ஸ் | 9/27/2006 04:55:54 PM
சொன்னவர்: குமரன் (Kumaran) | 9/27/2006 05:18:16 PM
நான் என்னவோ எந்தவொரு clue-வும் கொடுக்காதபடிதான் முதல் பதிவர் பற்றி செய்தி சொன்னேன். அவர் விரும்பும் ரகசியத்தைச் சபைக்குக் கொண்டு வரும் எண்ணம் சிறிதும் இல்லாமல், யாரும் கண்டுபிடிக்கமுடியாது என்ற நினைப்பில் எழுதினேன். ஒருவேளை எல்லா பதிவர்களும் என்னைப்போலவே மொடாக்குகளாக நினைத்து விட்டேன் போலும். பலர் இப்போது அவரை அடையாளம் கண்டதாகச் சொல்லும்போது அந்தப் பதிவர் என்மீது வைத்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்துவிட்டது போல் ஒரு குற்ற உணர்வு. இப்பதிவால் அவருக்கு ஏதும் மனக்குறை ஏற்பட்டிருப்பின் – அது என் அறியாமையால் விளைந்தது என்றாலும் – பொதுவில் அவரிடம் மன்னிப்பு வேண்டுகிறேன்.
சொன்னவர்: Dharumi | 9/27/2006 10:16:35 PM
//நல்லா தெரியற மாதிரி நாலு போட்டோ எடுத்துக்கிடத் தான்.. //
அட போங்க பொன்ஸ். இந்த மாதிரி ட்ரிக் போட்டோ எல்லாம் எங்கள மாதிரி ஆளுகளுக்காகவே உள்ள விஷயமாக்கும்.
இப்படி ஒரு பின்னூட்டம் முந்தியே போட்டேன்; என்ன ஆச்சுன்னே தெரியலை!
சொன்னவர்: Dharumi | 9/27/2006 10:43:42 PM
இது நீங்க திருத்திப் பார்ப்பதற்காக போடும் சோதனைப் பின்னூட்டம்
திருத்துற வழி தெரிஞ்சு போச்சுல்ல…ஆனா திருத்த மாட்டோமுல்ல..
சொன்னவர்: பொன்ஸ் | 9/29/2006 12:02:00 PM
ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே இந்த பின்னூட்டம் எல்லாம்!
நான் எதாவது எடுத்து உடவா?
அது இருக்கட்டும், இந்த புது லே அவுட் ரொம்பவே செமத்தியா இருக்கு சார்!!!
அட்டகாசம்!!
சொன்னவர்: Narayanaswamy.G. | 10/02/2006 11:47:57 PM
***
புனைப்பெயர்கள் வைத்திருப்பது வசதிதானே
)
***
சொன்னவர்: சோம்பேறி பையன் | 10/06/2006 12:20:27 PM
இயக்குஞர் மகேந்திரனை ஞாபகப்படுத்துகிறது…with no offense to you…புகைப்படம் எடுத்தவருக்கு எனது பாராட்டுதல்களை தெரிவிக்கவும்.
சொன்னவர்: PRABHU RAJADURAI | 10/06/2006 01:58:22 PM
//நானும் போட்டோவைப் பார்த்துதான், இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்…அதற்குள் வேறு யாரோ சொல்லிவிட்டனர் போல:-)//
இப்படி ஒரு குரூப்பாவே அலைவீங்களா’ய்யா..?
//இயக்குஞர் மகேந்திரனை ஞாபகப்படுத்துகிறது…with no offense to you…//
மகேந்திரன் கேள்விப் பட்டு offense ஆக எடுக்காம இருந்தா சரி..
//புகைப்படம் எடுத்தவருக்கு எனது பாராட்டுதல்களை தெரிவிக்கவும்.//
கட்டாயமா..
சொன்னவர்: Dharumi | 10/06/2006 02:06:09 PM